நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 10, 2024

பூந்துருத்தி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 24
வியாழக்கிழமை

மஹாளய பட்ச தரிசனம்


மஹாளய அமாவாசைக்கு முன் தினமே திருப்பூந்துருத்திக்குச்  சென்று அங்கு கோயிலில் இரவு தங்கி காலையில் தர்ப்பணம் செய்து மதியம் தான் திரும்பினோம்..

சிவனடியார் பலருடன்
 பேசியதில் மகிழ்ச்சி...

கண்கள் பனிக்க தேவார சம்பவங்கள் சிலவற்றைப் பேசி மகிழ்ந்ததில் நெஞ்சுக்கு நிம்மதி..

மனைவியும் மகனும் அன்றைய பொழுதில் ஏனைய சிவ கணங்களுடன் மகாளய பட்ச மாபெரும் அன்னதான ஆயத்த சமையல் பணிகளில் முனைந்திருக்க
முழங்கால் வலியனாகிய நான் மட்டும் அரைத் தூக்கம்.. கொர்ர்ர்!..

விடிய விடிய கோயில் வாசல் திறந்திருந்தது.

ராஜ கோபுர வழிநடையில் இரவு முழுதும் ஆட்கள் புழங்கிக் கொண்டிருக்க தூக்கமாவது ஒன்றாவது!.. 

சும்மா சொல்வது தான் கொர்ர்ர்!..

எப்படியோ எனக்கும் நல்ல மகிழ்ச்சி..

விடிந்ததும் குடமுருட்டியில் குளித்து விட்டு முதல் அமர்வில் தர்ப்பணம் செய்து அர்க்கியம் கொடுத்தேன்..

வெளியூர்களில் இருந்தும் வெளி  மாவட்டங்களில் இருந்தும் திரளாக மக்கள வந்திருந்து முன்னோருக்கான கடமையைச் செய்தனர்..

திருக்கோயில் சார்பிலும் திரு அண்ணாமலை அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பிலும் வேறொரு திருக்கூட்டத்தினர் சார்பிலும் அன்னம் பாலிக்கப்பட்டது..

ஏழை மக்களுக்கு குடை போர்வை, வஸ்திரங்கள், செருப்பு - என, தானம் வழங்கப்பட்டது..

பின்னிரு நாட்களின் மாலைப் பொழுதில்
சிவனடியார்களுக்கும் ஏனையோர்க்கும் தேநீர் வழங்கிடும் பணி எமக்குக் கிட்டியது..

அருகிலுள்ள சிற்றூர் மக்களுக்கும் 
திரு அண்ணாமலை அகஸ்திய ஆஸ்ரமத்தினர் - குட்டி யானைகளில் உணவை அனுப்பி வைத்து மனதை நெகிழ்வித்தனர்..

மஹாளய பட்ச தர்ப்பணத்திற்கு என தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் வந்திருந்தது சிறப்பு..


காசியப முனிவரின் வழிபாட்டிற்காக கங்கா தேவி 
கிணற்றில் பொங்கி வந்ததாக ஐதீகம் .. 

காசித் தீர்த்தம் - எனும் கிணறு கோயிலினுள் இருக்கின்றது..


கிணற்றின் கரையில் காசி விள்வநாதர்.. முன் மண்டபத்திலும் காசி லிங்கம்..

கொடி மரத்திற்கு அருகிலும் தனியாக மேற்கு நோக்கிய காசி விசுவநாதர் கோயில்..

பித்ரு தோஷம் தீர்க்கும் தலங்களுள் இதுவும் ஒன்று..
















இந்த அளவில் 
மஹாளய பட்சத்தின்
திருப்பூந்துருத்திக் காட்சிகள் நிறைவாகின்றன..

 
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி
உமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்
திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.  6/43/7 
-: திருநாவுக்கரசர் :-
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் அழகு. தகவல்கள் சுவாரசியம். பித்ரு தர்ப்பணம் இதுபோல கோவிலில் கொடுப்பது வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    படங்கள் வழி நாங்களும் ஆலயம் கண்டோம். மகிழ்ச்சி.

    ஆலய வழிபாடும், அன்னதானமும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தன. எனக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்ல ஆசை உண்டு. பார்க்கலாம் ஈசன் எப்போது அழைக்கிறான் என.

    பதிலளிநீக்கு
  3. திருப்பூந்துருத்தி மஹாளய அமாவாசை காட்சிகளும் தகவல்களும் சிறப்பு.

    நாமும் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
  4. திருப்பூந்துருத்தி கோயிலை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..