நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 04, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 18
வெள்ளிக்கிழமை

திருப்புகழ் 
தலம் - குடவாயில்
(குடவாசல்)
கும்பகோணத்திற்கு
அருகில்


தனனா தத்தன தனனா தத்தன 
னனா தத்தன ... தனதான


அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் 
அயலார் நத்திடு ... விலைமாதர்

அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக 
ளவரே வற்செய்து ... தமியேனும்

மயலா கித்திரி வதுதா னற்றிட 
மலமா யைக்குண ... மதுமாற

மறையால் மிக்கருள் பெறவே யற்புத 
மதுமா லைப்பத ... மருள்வாயே

கயிலா யப்பதி யுடையா ருக்கொரு 
பொருளே கட்டளை ... யிடுவோனே

கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ கதிர் 
வேல் விட்டிடு ... திறலோனே

குயிலா லித்திடு பொழிலே சுற்றிய 
குடவா யிற்பதி ... யுறைவோனே

குறமா தைப்புணர் சதுரா வித்தக 
குறையா மெய்த்தவர் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கூர்மையானதும் மை பூசியதும் 
நஞ்சு என்பதுமாகிய விழிகளை
உடையவர்கள் பயனற்றவர்கள்  
காண்போர் அனைவராலும்  
விரும்பப்படுகின்றவர்கள், 

 உறங்கும் போதிலே
வஞ்சிக்கின்ற குணம் உடையவர்கள்..  
அவர்களது ஏவல்களைச் செய்து
அடியேனும் தன்னந்தனியன் ஆனேன்..

மயங்கித்  திரிகின்ற எனது எண்ணம் ஒழிந்து  
தீய குணமும் அழிந்து போக,

வேதங்களை ஓதி  நினது திருவருளை நான் பெறுமாறு, 
தேன் ததும்பும் மலர் மாலைகள் திகழ்கின்ற திருவடியைத் தந்து அருள்வாயாக....

கயிலாய நாதனாகிய  சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை  உபதேசித்தவனே, ஏனைய தேவர்கட்குக் 
கட்டளை இடுவோனே..

கடலுக்குள் ஓடிப் புகுந்த  சூரபத்மன் அழிவதற்காக, 
ஒளி மிகுந்த வேலை ஏவிய மாவீரனே

குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள
குடவாயில் எனும் நகரில் உறைபவனே
 
குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் செய்து கொண்ட ஞான மூர்த்தியே, குறையாத  மெய்த் தவ நிலையை உடையவர் தமது பெருமாளே..


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ​அடடே... நம்ம குடவாசல். அங்கேதான் எங்கள் குலதெய்வம் கோவில் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்.  சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்.  சொல்லுங்கோ வேல்முருகா வேல்முருகா வேல்...  வேல்முருகா வேல்முருகா வேல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.

    பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குடவாசல் முருகன் திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் படித்து மகிழ்ந்தேன். முருகன் அனைவருக்கும் நன்மையை தந்து நல்லருள் தரவேண்டுமாய் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  5. குடவாயில் பெருமானை பாடல் பாடி வணங்கினோம். அவனருள் அனைவரையும் காக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..