நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 14, 2024

மிளகாய் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 
திங்கட்கிழமை


பச்சை மிளகாய் பொதுவாக உணவுக்கு சுவை சேர்ப்பது..

பச்சை மிளகாயில்  கலோரிகளே கிடையாது.. கொழுப்பு எண்ணெய் சத்து  சற்றும் இல்லாதது..

பச்சை மிளகாயில் வைட்டமின் A வைட்டமின் C வைட்டமின் K போன்றவையே நிறைந்துள்ளன..
பச்சை மிளகாயில் ஆன்டி - பாக்டீரியா அடங்கியுள்ளது. இதனால் தோலில்  எளிதாக தொற்றுகள் ஏற்படுவதில்லை.. 

உண்ணுகின்ற உணவு  உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாறுவதற்கு பச்சை மிளகாய் துணை புரிகின்றது.. 

என்றாலும்,


பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் குடலில் எரிச்சல்  உண்டாகும்.  வயிற்றில் வலியும் வீக்கமும் ஏற்படும். வயிற்றில் அழற்சி, எரிச்சல், வீக்கம் போன்றவற்றால் செரிமானம் பாதிக்கப்படுகின்றது.. அடுத்தடுத்து உடல் நலக் கோளாறுகள் ஆரம்பிக்கின்றன..


சிவப்பு மிளகாய் எனப்படுகின்ற
உலர் மிளகாய் நமது உணவில் அதிகமானால்  ஆரோக்கியக் கேடு அன்றி வேறு அல்ல.. 


இது தலைச்சுற்றல், நெஞ்செரிச்சல், வயிற்று வலி, மலக் குடலில் அழற்சி, புண் மற்றும் வயிற்றுப் போக்கிற்கு காரணமாகின்றது..


காரசாரமான உணவுகளை உட்கொள்கின்ற போது
எல்லையற்ற மகிழ்ச்சி -  திருப்தி கிடைக்கும் 

உண்மை தான்..

ஆனால் சிறிது நேரம் கழிந்த பிறகே அதிகப்படியான காரம் அதன் வேலையைக் காட்டும்.. 

வறண்ட மிளகாயினால் உச்சந்தலையில் அதிகமாக வியர்க்கும்.. கபாலச் சூடு அதிகரிக்கும்.. கண்களில் நீர்க் கசிவு ஏற்படும்.. 

மிளகாயினால் மேல் உதடுகளில் வியர்வை கண்களில் நீர், எரிச்சல் ஆகியன ஏற்படும்..
 மறுபுறம் தோலில் அரிப்பு தோன்றக் கூடும்.. மிளகாயின் காரத்தினால் சாதாரண
மசாலாப் பொருட்கள் கூட ஒவ்வாமையை - எதிர்வினையை ஏற்படுத்தி ஒவ்வாமையும் சேர்ந்து கொள்ளும் ..

இரைப்பை, மற்றும் சிறுகுடல் அழற்சியால் அதிக எரிச்சல், வேதனை,  இரத்தக் கசிவுடன் மலம் கழிக்க நேரிடும்..

மலக்குடலில் மிகப் பெரிய ஆபத்தும் ஏற்படலாம்...



அரபு ஆப்பிரிக்க   மேற்கத்திய நாடுகளில் கார மிளகாயின் பயன்பாடு மிக மிக மிகக் குறைவு.

காரமான மிளகாய்களின் மரபு அணுக்களை மாற்றிப் போட்டு புதிய வகைகளை - Sweet Pepper - உருவாக்கி இருக்கின்றனர்.. 

நான் குவைத்தில் இருந்தபோது பயன்படுத்தி இருக்கின்றேன்... இங்கும் தற்சமயம் கிடைக்கின்றது..


இதெல்லாம் தேவையா என்பதைச் சிந்தித்துக் கொள்ள வேண்டியது அவரவர் கடமை..

தெறிக்க விடலாமா... என்று மிளகாய்த் தூளுக்கு விளம்பரங்கள்..

தெறிக்க விடலாம் தான்!..

ஆனால், விலை மதிப்பற்ற ஆரோக்கியத்தை அவரவரும் காத்துக் கொள்ள வேண்டியது அவரவர் கடமை..

இந்தப் பதிவின் நோக்கம் காரமான மிளகாயின் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதே..

நம்மிடையே பழமொழிகளுக்குப் பஞ்சமில்லை.. அதில் ஒன்று தான் -  அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு... 

கௌதம புத்தர் கூறுகின்றார் ஆசையே துன்பங்களுக்குக் காரணம்.. - என்று..

இதையே நமது சித்தர்களும் வலியுறுத்தினர்..

யாதனின் யாதனின் நீங்கியான் 
நோதல் அதனின் அதனின் இலன்..

நலம் வாழ்
 வாழ் நலம் 

இறைவனே
இயற்கை
இயற்கையே இறைவன்
***

8 கருத்துகள்:

  1. மிளகாய் நல்லதல்ல என்றாலும் மிக்க் குறைந்த உபயோகம் ருசியைக் கூட்டும். நல்ல விழிப்புணர்வுப் பதிவு

    பதிலளிநீக்கு
  2. நான் கார ரசிகன்தான்.  சாம்பாரில், ரசத்தில், பொரியலில் என்று எல்லாவற்றிலும் பச்சை மிளகாய் சேர்ப்பதுண்டு.  பச்சை மிளகாய் போட்டு புளிமிளகாய் செய்தும் சாப்பிடுவேன்.  ஆனால் அளவில் குறைத்து, எப்போதாவது..  

    பதிலளிநீக்கு
  3. என் ஒன்று விட்ட தம்பி ஒரு தடிமனான பச்சை மிளகாயை எடுத்து வாயில் அப்படியே வைத்து கடித்து சப்பாத்திக்கு துணைப்பொருளாக தொட்டுக் கொள்வான்.  என் அம்மா ஒரு பிஞ்சு பச்சை மிளகாயை தட்டில் கிள்ளி நசுக்கிப்போட்டு உப்பு சேர்த்து மோர் சாதத்துக்கு தொட்டுக் கொள்வார்!

    நானும் சமயங்களில் மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள வேறு ஒன்றுமில்லை என்றால், ரசத்திலோ, சாம்பாரிலோ கீறிப் போட்ட பச்சை மிளகாயை கடித்து தொட்டுக் கொள்வதுண்டு!

    பதிலளிநீக்கு
  4. கடைசியில் சேர்த்திருக்கும் படங்கள் குடைமிளகாய்தானே.  குறளில் ஒரு அதனின் குறைகிறது!

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    அதிக அளவில் காரம் பயன்படுத்துவது நல்லதல்ல. சிறுவயதில் அதிகம் சாப்பிட்டு இருக்கிறேன் என்றாலும் பதினைந்து இருப்பது வருடங்களாக நான் காரம் அதிகம் பயன்படுத்துவதே இல்லை.

    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  6. மிளகாய் நல்ல பல தகவல்கள்.நலனுக்கும் உகந்தது.

    எங்கள் அம்மா சொல்லுவார் மிளகு காரம் உகந்தது மிளகாய்காரம் உதவாது என்று.

    எங்கள் நாட்டு சமையலில் மிளகாய்காரம் கூட சிறுவயதில் இருந்தே பழகிவிட்டோம் ஒரு காரக்குழம்பு இருக்கும்.

    இப்பொழுது எங்கள் வீட்டில் சற்றுகாரம் குறைத்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
  7. விழிப்புண்ரவு பதிவு.
    காரம், புளிப்பு , எல்லாம் அளவாக இருந்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பச்சை மிளகாயின் பயன்கள், மற்றும் அதன் கெடுதல்கள் குறித்த விபரங்கள் அருமை. எங்கள் வீட்டிலும் காரம் குறைவாகத்தான் செய்து சாப்பிடுகிறோம். கொஞ்சம் அதிகமானால் கூட சிறு குழந்தைகள் வேண்டாமென கூறி விடுவார்கள். அதனால் உணவில் காரம் கம்மியாகத்தான் உபயோகிக்கிறோம். நல்ல பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..