நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 21, 2024

விமான சேவை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 4 
 திங்கட்கிழமை


தஞ்சையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விமான முனையம் விரைவில் உருவாக இருக்கின்றது..

தஞ்சை விமான படைத் தளத்தில் - இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஏறத்தாழ ரூ. 200 கோடி முதலீட்டில் புதிய விமான நிலையத்தை உருவாக்க உள்ளது..



விமான நிலைய பயணியர் முனையத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்த  டிட்கோ நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரியுள்ளனர்.
நன்றி தஞ்சையின் பெருமை Fb.

விரைவில் தஞ்சை  புறவழிச்சாலையில் இருந்து  புதுக்கோட்டை பிரிவு சாலைக்கு அருகில் விமான நிலையத்திற்கான
நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்..

இரண்டு ஓடு பாதைகளுடன் கூடிய இந்தத் தளம் அடுத்தடுத்த விரிவாக்கப் பணிகளுக்குத் தயாராக உள்ளது..

இன்னும் ஒரு வருடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையம் செயல்படும்  என மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்..

இதற்கிடையே
அடுத்த சில மாதங்களில் வான் வழித் தடத்தில்  தஞ்சையும் இணைக்கப்படலாம் என்றும் செய்திகள்.. 

முதற்கட்டமாக -
சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து சிறிய ரக  விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன..

இரண்டாம் உலகப் போரின் போது அமைக்கப்பட்டது இந்த தளம்.. எனில் அப்போதைய தஞ்சை நகரின் முக்கியத்துவம் சிந்திக்கத் தக்கது.. 

நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு இதன் மேம்பாடு பற்றி எவரும் சிந்திக்க வில்லை..

அப்போது விவசாயம் உயிர் நாடியாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்..

2006 ல் இந்திய வான் படையால் கையகப்படுத்தப்பட்ட  இந்தத் தளம் தொடர்ச்சியாக  மேம்படுத்தப்பட்டு இப்போது நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றது..

நாட்டில் விமான சேவை  விரிவாக்கப்படுகின்ற  இன்றைய சூழலில் தஞ்சைக்கு விமான நிலையம் இன்றியமையாதது..

விமான படைத் தளத்தின் ஒரு பகுதியில் இயங்கவிருக்கும் பொது சேவை குறித்து மக்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர்..

90 களில் இங்கு வாயுதூத் விமான சேவை இருந்தது.. சென்னையிலிருந்து வந்த முதல் விமானத்தில் தஞ்சை மண்ணின் மைந்தராகிய ஸ்ரீ கருப்பையா மூப்பனார் அவர்கள் வந்திறங்கினார்..

வடக்கு ராஜவீதியில் பயணச் சீட்டுகளுக்கான அலுவலகம் இயங்கியது..

சில மாதங்களில் வடக்கே கல்கத்தாவில் இருந்து - எங்கோ புறப்பட்ட வாயுதூத் விமானத்தின் கதவு விமானம் பறந்து கொண்டிருக்கும் போது கழன்று கொள்ள - வாயுதூத் விமான சேவைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன..

ஆனாலும்,
Flight Service, which was stopped due to poor patronage என்றே விக்கி சொல்கின்றது..

தஞ்சாவூர் விமான நிலைய  விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட நிதி வேறு நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக அப்போது பேசிக் கொண்டார்கள்..


போர் விமானங்கள் மட்டுமே கையாளப்பட்ட. விமான படைத் தளத்தின் ஒரு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள்  முடிந்த நிலையில்  தஞ்சை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் - என, எதிர்பார்க்கப்படுகின்றது. 


நாகை திருவாரூர்  மயிலாடுதுறை ஆகிய மாவட்ட மக்களுக்கு முக்கியமான  பெருநகரம் தஞ்சாவூர்..

இப்பகுதி மக்கள் பலரும் விமான சேவைக்காக - 
சென்னை திருச்சி மதுரை நோக்கிப்  பயணித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

தஞ்சை மக்களின் நீண்ட கால கனவு நிறைவேற இருக்கின்றது..

வெகு விரைவில் தஞ்சையில் விமான சேவை மேம்பட வேண்டும்.. 

மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் 
இங்கிருந்து விமான சேவைகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை... 

வாழ்க தஞ்சை
வளர்க தஞ்சை
***

4 கருத்துகள்:

  1. தஞ்சை மக்களின் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேற பிரார்த்தனைகள். சந்தோஷமான செய்தி. ஆனால் செயல் வடிவம் பெற்று பயன்பாட்டிற்கு வர எத்தனை காலம் பிடிக்குமோ...

    பதிலளிநீக்கு
  2. இரண்டு ஓடு தளங்கள் இருக்கின்றன.
    ப்டைத் தளத்தின் விமானங்கள் இயங்குகின்றன..

    பயணியர் முனையம் இதர சாதனங்கள்..

    சீக்கிரமே பயன்பாட்டிற்கு வரும்...

    மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  3. தஞ்சையில் விமான தளம் அவ் மக்களின் ஆவல் விரைவில் நிறைவேற வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  4. தஞ்சை நகரில் இப்படி ஒரு முன்னேற்றம் - நல்ல விஷயம். விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால் மகிழ்ச்சியே...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..