நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 05, 2024

தரிசனம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
மூன்றாவது 
சனிக்கிழமை



காணொளிக்கு  நன்றி


கண்ணறிகின்ற கதிர்மணி வண்ணா
காசினி காக்கும் கருணா மூர்த்தி
எண்ணரும் பிழைகள்
எல்லாம் இழைத்தேன்

கருதா நெறியில்
இருதாள் தொலைத்தேன்
விதிவழி நானும்
வினைப்பயிர் விளைத்தேன்

இளைத்தேன் களைத்தேன்
பிழைத்தேன் பிழைத்தேன்
பிழைதனில் நீங்கித்
தவித்தேன் துதித்தேன்

ஆனைக் கருளிய வரதா வருவாய் 
அடியனுக் கருளிட வருவாயே..


விண்ணவர் வேந்தே
வேங்கடத் தரசே
மண்ணவர் ஏத்தும் 
மாதவ மூர்த்தி
மடையன் கடையன் 
கொடியன் என்றே
நடை தடுமாறி 
நானிங்கு வந்தேன்
கடையன் எனினும்
காத்தருள் புரிவாய்
கரு மாமுகிலே 
காருண்ய மூர்த்தி..

ஓம் ஹரி ஓம்

கோவிந்தோ கோவிந்த
கோவிந்தோ கோவிந்த 
***

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை…. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்தோ
      கோவிந்த

      தங்கள் அன்பின்
      வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  2. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையில் கண்ணன் என்றார் கவியரசர்.  வேளுக்குடி அதை சொல்கிறார்.  ஓம் ஸ்ரீ வெங்கடாய நமஹ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்தோ
      கோவிந்த

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நாளில் பெருமான் தரிசனம் கண்டோம்.

    காத்தருள்வாய்நாராயணா. நமோ நாராயண நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்தோ
      கோவிந்த

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..