நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 07, 2024

அப்பர் திருமடம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 21
திங்கட்கிழமை

மஹாளய பட்சத்தை ஒட்டி திருப்பூந்துருத்தி அப்பர் திருமடத்தில் திரு அண்ணாமலை ஸ்ரீ அகஸ்த்திய ஆஸ்ரமத்தினரின் சார்பில் பதினைந்து நாட்களும் சகலரும் பங்கேற்ற தில தர்ப்பண  நிகழ்வும் மஹா வேள்வியும் நடைபெற்றன..

ஆறு நாட்கள் நானும் குடும்பத்துடன் கலந்து கொண்டேன்..  

அப்போது  அப்பர் திருமடத்திலும் திருக்கோயிலிலும்
பதிவு செய்யப்பட்ட காட்சிகள் (தொடர்ந்து வருகின்ற நாட்களில்..)








இத்திருமடம்  பூந்துருத்தி கோயிலின் வட புறமாக  மிக அருகில் அமைந்துள்ளது..

இத்திருமடத்தில் அப்பர் ஸ்வாமிகளுடன் ஞானசம்பந்தப் பெருமானும் தங்கியிருந்ததாக பக்தர்களின் நம்பிக்கை..




இத்திருமடத்தின் அருகாக காவிரியின் கிளையாகிய குடமுருட்டி ஆறு..

அப்பர் ஸ்வாமிகள் தினம்  தினம் நீராடிய துறை என்பதை நினைக்கும் போதே மெய் சிலிர்க்கின்றது..














குற்றாலங் கோகரணம் மேவி னானைக்
கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தாந்தன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை
உணரா என் நெஞ்சை உணர்வித் தானைப்
பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப்
பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றாடு அரவார்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.  6/43/2 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. அப்பர் ஸ்வாமிகள் நடமாடிய இடம்...   சிலிர்க்கத்தான் செய்கிறது.  படக்காட்சிகள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. நிழற்படங்கள் வழியாக பார்த்த காட்சிகள் மனதுக்குவந்ததாக இருந்தது. திருப்பூந்துருத்தி சென்று வர மனதில் தோன்றியிருக்கிறது. பாலகுமாரன் அவர்களும் இந்த தலைப்பில் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ப்ளாக்கில் என்னை நீங்கள் விசாரித்தமைக்கு நன்றி சகோ.
    இறைவன் அருளால் நலமாக இருக்கிறேன்.
    வெளியூர் பயணம் இல்லை.
    நவராத்திரி வேலைகள் , மடி கணினி பக்கம் வர முடியவில்லை.
    செல்போன், ஐபேட் மூலம் பதில் அளிக்க முடியவில்லை.
    அதானல்தான் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  4. பதிவும், படங்களும் அருமை. அப்பர் திருமடம் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..