நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 12, 2024

விஜய தசமி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 26
நான்காம் சனிக்கிழமை
விஜய தசமி நன்னாள்


அனைவருக்கும் விஜய தசமி
நல்வாழ்த்துகள்


பஞ்சமி பயிரவி பர்வத புத்திரி பார் நலம் காப்பவளே
அஞ்சிடும் உயிர்களை அரவணைத்தே தினம்
அருள் நலம் சேர்ப்பவளே
பதினெண் ஆயுதம் தாங்கிய சுந்தரி பரிவுடன் அருள்பவளே
கதிநீ என்றுனைச் சரண் புகுந்தேன்  எந்தன் கடுவினை தீர்த்தருளே..

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


மகிடனின் தலைமேல்  திருவடி வைத்தனை மலர்ப்பதம் போற்றுகின்றேன்
சண்டனை முண்டனை வதம் செய்தாய்
அந்தத் திறந்தனை சாற்றுகின்றேன்
விண்தனைக் காத்திடும் வேதவல்லி எங்கள் வழிக்கொரு நலம் நல்கி
மண்தனைக் காத்திடு மாதரசி உந்தன் பதமலர் சரணம் அம்மா

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


சிம்மத்தில் வந்திடும் சிந்துர சுந்தரி திருவடி 
இணை வாழ்க
ஜன்மத்தில் சேர்ந்திடும் பவவினை தீர்ப்பவள் பதமலர் நலம் வாழ்க
நன்மக்கள் நல்வினை  நலந்தனைத் தந்திட்ட 
நாயகி தாள் வாழ்க..
வன்மங்கள் அழிந்திட வழி வகுத்து  வளம் தந்திடும் வராகி பதம் வாழ்க

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


அன்புடன் சாற்றிடும் அருந்தமிழ் மாலையில் அன்னையே வந்திடுவாய்
இன்முகம் காட்டிடும் இசை கொண்ட நாயகி வசையறு வாழ்வளிப்பாய்
நன்மகன் வாழ்வினில் நலந் தந்து வாழ்த்துக நாரண சுந்தரியே
உன்பதம்  சரண் என்று தாள் பணிந்தேன் சிவ சங்கர பூரணியே..

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. விஜயதசமி நல்வாழ்த்துகள். படங்களில் அன்னையை தரிசித்து கொண்டேன் அம்மன் மேல் இயற்றிய பாடல் நன்றாக உள்ளது. பாடி பரவசமடைந்தேன். அன்னை அனைவருக்கும் வாழ்வில் பல வெற்றிகளை தந்து நல்வழியில் வாழ அருள் புரிய வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    ஓம் சக்தி ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. துதிப்பாடல் அருமை. விஜயதசமி வாழ்த்துகள். அன்னையை வணங்கி அருள் யாவும் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். விஜயதசமி வாழ்த்துகள்.

    பாடல் சிறப்பு. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. அன்னை பராசக்தி துடிப்புடன் அருமை பாடி வணங்கினோம்.

    இன்றைய விஜயதசமி வெற்றி நாளில் சகலருக்கும் அவள் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

    விஜயதசமி வாழ்த்துகள்.

    ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
  5. விஜயதசமி பதிவும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..