நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 22
ஞாயிற்றுக்கிழமை
தைப்பூசம் எனும் புண்ணிய நாள்
இடைமருது ஈசன் |
வாசங் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டியொர் செம்மை உடைத்தாய்ப்
பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடை மருது ஈதோ.. 1/32/5
வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப்
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே... 2/56/5
என்று,
ஞானசம்பந்தப் பெருமான் போற்றுகின்ற நாள்..
பூச நீர் பொழியும் புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி.. (2/2/6)
- என்று மேலும் புகழ்கின்றார்..
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாள்..
தமிழகத்தின் சிவாலயங்களில் - குறிப்பாக திரு இடைமருதூரில் சிறப்பாக நடத்தப் பெற்ற - நடைபெறுகின்ற தொன்மையான விழா தைப்பூசத் திருநாள்..
முருகப் பெருமானின் திருக்கோயில்களில் சிறப்பாக அனுசரிக்கப்படும் நாள் தைப்பூசம்..
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.. 2/47
நெய் விளங்கும் பொங்கலுடன் உன்னைப் போன்ற இளம் பெண்கள் கொண்டாடுகின்ற தைப்பூச விழாவினைக் காணாமல் நீ போகலாமா? - என்று அழைக்கின்றார்..
உலகில் சிவநேசச் செல்வர்களாகிய செந்தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் - பால் குடங்கள், காவடிகள் - என, வெகு சிறப்பாக அனுசரிக்கப்படுவது தைப்பூசம்..
வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் சித்தி வளாக திரு அறையில் ஜோதி வடிவாகியதும் இந்நாளில் தான்..
பாசம் ஒன்றிலராய்ப் பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈசன் எம்பெருமான் இடை மருதினில்
பூச நாம் புகுதும் புனலாடவே.. 5/14/1
-: திருநாவுக்கரசர் :-
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திரு ஆலங்காடுறையும் செல்வர் தாமே.. (6/78/1)
என்று குறிப்பிடுகின்ற அப்பர் ஸ்வாமிகள் ,
புனல் பொன்னித் தீர்த்தன்
(6/14/4)
என்றும் - இறைவனை சிறப்பிக்கின்றார்..
அவ்வண்ணமே நாமும் கருத்தில் கொண்டு இந்நாளில் நன்னீராடி ஈசன் எம்பெருமானையும் திருக்குமரனையும் தொழுது வணங்குவோம்..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
பதிலளிநீக்குவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
முருகா சரணம்....
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
ஓம் முருகா சரணம்
பதிலளிநீக்குஓம் சண்முகா சரணம்
ஓம் கந்தா கடம்பா
கதிர் வேலா போற்றி
ஓம் செந்தில் வேலா போற்றி
ஓம் முத்துக்குமரா போற்றி..
முருகா போற்றி..
நீக்குமுத்துக் குமரா போற்றி..
மகிழ்ச்சி.. நன்றி..
முருகா சரணம்...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
முருகா சரணம்...
நீக்குசரணம்.. சரணம்..
மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
முருகா சரணம்...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, சிவபாலா சரணம்.
பதிலளிநீக்குஈசனடி போற்றி !போற்றி!
//வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..//
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான பதிவு. நெல்லை
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குதைப்பூசம் நன்னாளில் குமரன் பாதம் வணங்குவோம். அவனருளை வேண்டுவோம்.
பதிலளிநீக்கு
நீக்கு//அவனருளை வேண்டுவோம்..//
அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி..
நன்றி..
தைப்பூச நாயகனின் தாள் பணிவோம். நல்லது நடக்க வேண்டும் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குகீதா
// நல்லது நடக்க வேண்டும் எல்லோருக்கும்..//
நீக்குஅவ்வண்ணமே நடக்கட்டும்..
அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..