நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 2
செவ்வாய்க்கிழமை
கடந்த ஞாயிறன்று காலை
கல்யாண வைபவத்திற்கு என -
கும்பகோணத்திற்குச்
சென்றிருந்த போது
மகாமகக் குளக் கரையில்
எடுக்கப்பட்ட சில காட்சிகள்..
ஸ்ரீ பாடகச்சேரி மகான் அவர்களது சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது..
கழுத்தில் செம்பைக் கட்டிக் கொண்டு காணிக்கை பெற்று அதனைக் கொண்டே கோயில் திருப்பணியைச் செய்து ராஜ கோபுரத்தை எழுப்பியதற்கான நன்றிக் கடன் இது..
கல்யாண மண்டபத்தில் (Raya`s Grand)
இருபத்தேழு நட்சத்திர அதிபதிகளாகிய பன்னிரு ராசிகளுக்கும் உரிய கோயில்கள் என்று - சித்திரங்கள் தீட்டியிருக்கின்றனர்..
ராசிகளுக்கான கோயில்கள் அனைத்தும்
கும்பகோணம் நகருக்குள்ளே உள்ளன
என்பது வியப்பு..
எதன் அடிப்படையில்
இப்படியான ராசிக் கோயில் குறிப்புகள் என்பது தெரியவில்லை..
என்றாலும்,
குடந்தை நகருக்குள்
ராசிக் கோயில்களின்
அமைவிடங்கள்..
கோயில்களின் பெயர்கள் மட்டுமே அங்கு எழுதப்பட்டிருந்தன.
கூடுதலாக இருப்பிடத்தை குறித்திருக்கின்றேன்..
மேஷம்
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்,
மேலக்காவிரி, கும்பகோணம்.
ரிஷபம்
ஸ்ரீ சார்ங்கபாணி கோயில்
ஸ்ரீ சோமேஸ்வரர் கோயிலுக்கு
வடபுறத்தில்.
மிதுனம்
ஸ்ரீ சக்ரபாணி கோயில், பொற்றாமரைக்
குளத்திற்கு வட திசையில்.
கடகம்
ஸ்ரீ மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில்,
பாணாதுறை.
சிம்மம்
ஸ்ரீ பாணபுரீஸ்வரர் கோயில்,
பாணாதுறை.
கன்னி
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்,
மகாமகக் குளம் வடகரை.
துலாம்
ஸ்ரீ அபிமுகேஸ்வரர் கோயில்
மகாமகக் குளம் கீழ் கரை.
விருச்சிகம்
ஸ்ரீ கௌதமேஸ்வரர் கோயில்
வலயப்பேட்டை அக்ரஹாரம்.
தனுசு
ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில்,
மகாமகக் குளத்திற்கு மேற்கில்.
மகரம்
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் கோயில்,
பொற்றாமரைக் குளத்தின் கீழ் கரை.
கும்பம்
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயில்,
பொற்றாமரைக் குளத்தின் மேல் கரை
மீனம்
ஸ்ரீ பிரம்மன் கோயில்
வலயப்பேட்டை அக்ரஹாரம்.
இயன்றவரை சிந்தித்திடுக..
தரிசனம் செய்திடுக..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
புதிய தகவல்கள். புதிய பேக்கேஜில் சுற்றுலா செல்ல நல்ல ஏற்பாடு. படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குநலம் வாழ்க..
பாடகச்சேரி மகான் தரிசனம் இன்று கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குராசிகளுக்கு உரிய கோவில் விவரம் அருமை.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
மாசி மாதம் மகாமகக்குளக்கரை காட்சிகள் கிடைத்தது.
நன்றி.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்கு//கோவிலில் இவருக்கு தனி சன்னதி அமைத்து இருக்கிறார்களாம். இராஜ கோபுரத்தில் இவரின் உருவச்சிலை இருக்கிறதாம்.
நிறைய தடவை திருநாகேஸ்வரம் போய் இருக்கிறோம் பார்த்தது இல்லை. இறைவன் அருளால் மறுபடியும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இராமலிங்க சுவாமிகளை தரிசிக்க வேண்டும்.//
இப்படி இராமலிங்க சுவமிகளை பற்றி நான் போட்ட பதிவில் சொல்லி இருந்தேன். இன்று தரிசனம் செய்து விட்டேன்.
நன்றி.
அந்தப் பதிவினை நானும் வாசித்திருக்கிறேன்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
கும்பகோணம் போகும்போதெல்லாம் ஊருக்குள் இருக்கும் எல்லாக் கோவில்களையும் தரிசிக்கவில்லையே என்று நினைத்துக்கொள்வேன். அடுத்தமுறை இரு நாட்கள் தனியாகச் சென்று அனைத்துக் கோவில்களையும் தரிசிக்கணும். பதிவு உபயோகம்...நெல்லை
பதிலளிநீக்கு
நீக்கு// பதிவு உபயோகம்..//
அன்பின் நெல்லை, தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
இப்போது முதற்கொண்டு கருத்துரைகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
பதிலளிநீக்குபடங்கள் அருமை ஐயா...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
படங்கள் நன்றாக இருக்கிறது. பிரசித்தி பெற்ற மகாமகக் குளம் கண்டு மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
இக்கோயில் பார்த்திருக்கிறேன். நம் நண்பர் குடந்தை சரவணன் குறும்படம் எடுத்த போது சென்றிருக்கிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகோ அழகு. அந்தக் கோபுரம் படம் எடுத்திருக்கும் கோணம் அருமை. அழகு!!!
துரை அண்ணா இப்ப நீங்களும் இப்படி கூகுள் மெயில் கணக்கு வழிதான் என்று வைச்சிட்டீங்களோ...அதாவது ப்ளாகர் கணக்கு வழிதான் என்று. நேற்று வரை என் கூகுள் மெயில் கணக்கு வழி வர முடிந்தது, இன்று ப்ளாகர் கணக்கு வழிதான் வர முடிகிறது. ....கூகுள் கணக்கு என்றால் என் அக்கவுன்டும் கூகுள்தானே ஏன் என் கணக்கு வழி கருத்து போட முடியவில்லையோ தெரியலை...
கீதா
// படங்கள் எல்லாம் அழகோ அழகு. அந்தக் கோபுரம் படம் எடுத்திருக்கும் கோணம் அருமை. அழகு!..//
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நலம் வாழ்க..
// துரை அண்ணா.. இப்ப நீங்களும் இப்படி கூகுள் மெயில் கணக்கு வழிதான் என்று வைச்சிட்டீங்களோ..//
நீக்குமுகமும் பெயரும் இல்லாதவர்கள் எனது கணக்கில் நுழைந்து தான் - எபியில் நாலாந்தர விஷயங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்..
வேறு வழி தெரியவில்லை..
எனவே தான் இப்படி... மனம் பொறுத்துக் கொள்ளவும்..
தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..