நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 12
ஞாயிற்றுக்கிழமை
இணையத்தில் இருந்து செய்தித் தொகுப்பு
கேரட்..
வேரடிக் கிழங்காக உயிர்ச் சத்துக்களை உள்ளடக்கி வளர்கின்ற தாவரம்..
மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டறியப்பட்ட இதில் பீட்டா காரோட்டீன் மிகுந்து உள்ளது.. இதுவே உடலில் உயிர்ச் சத்து வைட்டமின் A யாக மாற்றப்படுகிறது. இதன் சாறு உடல் நலத்திற்கு ஏற்றது..
கேரட் கண்பார்வையை மேம்படுத்துவதுடன் புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாகவும் இருக்கின்றது..
கேரட்டில்
அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.
தினமும் கேரட் சாறு அருந்துவதால் சருமம் பொலிவாகின்றது..
ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படுகின்றது...
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது..
கேரட் சாறு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது.. இதிலுள்ள வைட்டமின்களும் மினரல்களும் பல நன்மைகளைச் செய்கின்றன..
கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு உதவுகின்றன.
கேரட் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முறைப்படுத்துவதிலும் அதிகப்படியான ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
கேரட் குறைந்த அளவு கலோரியும் குறைவான சர்க்கரை அளவும் கொண்டிருக்கிறது.
இதனால் நீரிழிவு பிரச்னை குறைவதற்கும்
பார்வைத் திறன் மேம்படுவதற்கும்
உணவில் கேரட் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கேரட்டில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.
அதோடு தைராய்டு வராமல் தடுக்கிறது.. கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க கேரட் உதவியாக இருக்கிறது.
அதனால் கேரட்டை அளவறிந்து அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது..
வாழ்கநலம்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..