தஞ்சை ராஜதானி. மராட்டியர் ஆட்சிக் காலத்தில் 215 ஆண்டுகளுக்கு முன் -
1787 க்கும் 1798 க்கும் இடைப்பட்ட காலத்தின் ஒருநாள்.
கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும் கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்கின்றார்.
அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்படுகின்றனர்.
1787 க்கும் 1798 க்கும் இடைப்பட்ட காலத்தின் ஒருநாள்.
அதுவும் ஐப்பசி மாதத்தின் அடைமழை நாள். இடைவெளியின்றி - இடி மின்னல் இன்றி - பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து நல்ல மழை!...
''...அது கெட்ட மழையாகி விடக்கூடாதே!...'' என்று பெருங்கவலையுடன் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார் மன்னர் அமர்சிங். மழைச்சாரல் மன்னரின் முகத்தில் சில்லென - பரவிற்று.
அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த செய்திகள் கூட - இந்த சில தினங்களில் தடைப்பட்டு விட்டது. காரணம் காவிரியின் வடக்கில் கொள்ளிடத்திலும் தெற்கில் குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாற்றிலும் கரை தழுவி ஓடும் வெள்ளம்.
கரை மீறிய வெள்ளப் பெருக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற நிலை. இதோ கண்ணுக்கு எட்டிய வடவாற்றில் கூட மழை நீர் பொங்கிப் பிரவாகமாக ஓடுகின்றது.
கரை மீறிய வெள்ளப் பெருக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற நிலை. இதோ கண்ணுக்கு எட்டிய வடவாற்றில் கூட மழை நீர் பொங்கிப் பிரவாகமாக ஓடுகின்றது.
மன்னரின் முகத்தில் கவலையின் ரேகைகள்.
''... அஞ்சவேண்டாம். தஞ்சையின் கிழக்கே நாகப்பட்டினம் முதற்கொண்டு கோடியக்கரை தென்கிழக்கே சேதுபாவாசத்திரம் வரை கடல் கொந்தளிக்கவோ சூறாவளி சுழற்றியடிக்கவோ வாய்ப்புகள் ஏதுமில்லை...''
மன்னனின் மனதையும் - வானிலையையும் ஆராய்ந்த வல்லுனர்கள் சொன்னார்கள். இருப்பினும் மன்னன் அமர்சிங் அமைதி கொள்ளவில்லை.
மன்னர் அருந்துவதற்கென்று - மழைச்சாரலின் குளுமைக்கு இதமாக, விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட வெதுவெதுப்பான மூலிகை ரசம் வந்தது. அதை நிராகரித்த மன்னர் - ''அமைச்சரை வரச்சொல்லுங்கள்'' - என்றார்.
அடுத்த அரை விநாடியில் அரசரின் அருகில் அமைச்சர்.
'' உடனடியாக தஞ்சைக்கு வடக்கே உள்ள நிலவரம் தெரிய வேண்டும்!...''
'' உத்தரவு..'' - தலை வணங்கிய அமைச்சர் பலவகையிலும் திறமையான ஆட்கள் உடன் வர - தஞ்சை மாநகரின் வட எல்லையில், வடவாற்றினை நெருங்கினார்.
மாமன்னன் ராஜராஜசோழனின் ஆன்மீக குருநாதராகிய கருவூர் சித்தரின் திருவாக்கினால் புகழப்பெற்ற ஆறல்லவா வடவாறு!... சற்று சிணுங்கலுடன் நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. மிதமாக - மழை பெய்து கொண்டு இருந்தது.
ஓடக்காரர்கள் தயாராக நின்றார்கள். வடவாற்றின் தென்கரையில் சற்று தொலைவில் - திருக்கோயில் கொண்டிருந்த அமிர்தவல்லி அம்பிகை சமேத சிதானந்தேஸ்வர ஸ்வாமியை கைகூப்பி, கண்களை மூடித் தொழுதார்.
கண் விழித்தவருக்கு பெரும் அதிர்ச்சி. காண்பது கனவா!... இதுவரைக்கும் காணப்படாத இவர் - இப்போது எப்படித் தோன்றினார்?... எங்கிருந்து வந்தார்?...
மழை நீர் தழுவிச் செல்லும் வடவாற்றின் தென்கரைப் படித்துறையில், மழையில் நனைந்தபடி தவக்கோலத்தில் - சிவயோகத்தில் அமர்ந்திருந்த பெருந்துறவி ஒருவரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
வடவாறு வற்றினாலும் வற்றாத - கருணை வெள்ளத்தினை அவர் திருமுகத்தில் கண்டனர். அமைச்சரின் முகக்குறிப்பினை உணர்ந்த பணியாளர்கள் - பெரிய குடை ஒன்றினை மழையில் நனையும் துறவிக்கு ஆதரவாகப் பிடித்தனர். தவநிலை தடைப்பட்டது.
துறவியார் மெல்ல கண் விழித்தார். அமைச்சரும் மற்றவர்களும் அவருடைய பாதம் தொட்டு வணங்கினார்கள். துறவியார் திருவாய் மலர்ந்தருளினார்.
''...அஞ்ச வேண்டாம்!... எந்தத் தீங்கும் நேராது. சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.
ஓடங்கள் பயணித்தன. சில தினங்களாயின. ஆங்காங்கே ஊர் மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களைக் கொண்டே ஆற்றின் கரைகளை செம்மைப்படுத்தி -
அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு என - மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு விரைவாகத் திரும்பினார். இதற்குள் மழையும் ஓய்ந்து விட்டது.
அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு என - மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு விரைவாகத் திரும்பினார். இதற்குள் மழையும் ஓய்ந்து விட்டது.
அரசருக்கு செய்தி அறிவிக்கும்படி - ஓலைதாங்கிகள் அனுப்பப்பட்டனர்.
திரும்பி வரும்போது - வடவாற்றின் படித்துறையில் - சில தினங்களுக்கு முன் கண்ட கோலத்திலேயே - அந்தத் துறவி அமர்ந்திருக்கக் கண்டனர். அச்சமும் வியப்பும் மேலிட்டது. ஆரவாரங்களினால் கண் விழித்த துறவியார் மீண்டும் கூறினார்.
''சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.
அமைச்சர் விரைந்து அரண்மனைக்குச் சென்றார். தஞ்சை வடக்கு வாசலில் பெருந்தோரணங்கள். எங்கும் ஆரவார - ஜயகோஷங்கள். என்ன விசேஷம்!... வியப்படைந்த அமைச்சரை பட்டத்து யானை மாலையிட்டு வரவேற்றது.
மங்கல வாத்தியங்கள் முழங்கின. அரசர் எதிர்கொண்டு நின்றார். அறிவிற் சிறந்த அமைச்சர் அல்லவா!.. விஷயம் விளங்கிற்று. நாணம் கொண்டார்.
அரசரை வணங்கியபடி சொன்னார் - '' நான் என் கடமையைத்தான் செய்தேன்!''
அரசரை வணங்கியபடி சொன்னார் - '' நான் என் கடமையைத்தான் செய்தேன்!''
அரசர் சொன்னார் - '' அதையும் செம்மையாய் செய்தீர்கள் அல்லவா!...''
பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
''செய்ததெல்லாம் குருநாதர்..'' - அன்று நடந்ததை அமைச்சர் விவரித்தார்.
அரசரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். வடவாற்றின் படித்துறையில் அதே நிலையில் குருநாதரைக் கண்டு தொழுது வணங்கினர். அனைவரையும் வாழ்த்தியருளினார் குருநாதர். மக்கள் வெள்ளமென வந்து அடி பணிந்தனர். அந்த மகானின் பார்வையினால் அனைவருக்கும் நலம் விளைந்தது.
மக்கள் அந்த மகானை '' பாவா '' என்று அன்புடன் அழைத்து அகமகிழ்ந்தனர். பின்னர் '' பஞ்சநத பாவா '' என்று அறியப்பட்டு, பலகாலம் வீற்றிருந்தார்.
கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும் கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்ந்தார் மகான் பஞ்சநத பாவா. அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்பட்டனர்.
எல்லோருக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்த - அந்த ஞானஒளியும் தன்னை ஒளித்துக் கொள்ளும் நாள் வந்தது. கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் வெள்ளம்.
அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது. அப்படி ஆழ்ந்த நாள் மாசி மாதத்தின் அமாவாசை தினம்.
அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது. அப்படி ஆழ்ந்த நாள் மாசி மாதத்தின் அமாவாசை தினம்.
மகாசிவராத்திரியன்று தவநிலையில் - சிவமாகப் பொலிந்த தவம், பொழுது விடிந்த வேளையில், விடிந்தது பொழுது என்று சிவநிலையினை எய்தியது.
நிர்விகல்ப சமாதியை நிலைப்படுத்தி சிவலிங்கம் நிறுவினர்.
இன்றும், குருநாதர் பஞ்சநத பாவா ஸ்வாமிகள் -
பாவா சிவயோகத்தில் அமர்ந்திருந்த படித்துறை |
இன்று (11.3.2013) மாசி அமாவாசை தினம். நம் குருநாதருக்கு ஆராதனை நாள்.
தஞ்சை மாநகரின் ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய பெருமையுடைய கரந்தை எனும் கரந்தட்டாங்குடி. கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது குருநாதர் பஞ்சநதபாவா ஸ்வாமிகள் அருளும் நிர்விகல்ப சமாதி அதிஷ்டானம்.
குருநாதரின் கருணை விளக்கு கவலைகளை ஓட்டும். கலங்கரை விளக்காகக் கரை காட்டும்.
தஞ்சை மாநகரின் ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய பெருமையுடைய கரந்தை எனும் கரந்தட்டாங்குடி. கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது குருநாதர் பஞ்சநதபாவா ஸ்வாமிகள் அருளும் நிர்விகல்ப சமாதி அதிஷ்டானம்.
குருநாதரின் கருணை விளக்கு கவலைகளை ஓட்டும். கலங்கரை விளக்காகக் கரை காட்டும்.
'' பஞ்சநத பாவா திருவடிகள் சரணம்!...''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..