நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 10, 2013

சிவ தரிசனம் - 03

சிவராத்திரியின் மூன்றாம் காலம்
-: நள்ளிரவு  12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை :-

நள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.

இனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.

ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -

 ''....அகந்தை அழித்த அருட்சுடரே!... - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.

கண்கலில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.

* * *

இப்படி சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் வணங்கிய தலம் -

நலம் தரும் திருப்பாம்புரம்


இறைவன் - பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர். இறைவி - வண்டார்குழலி. தலவிருட்சம் - வன்னி. தீர்த்தம் - ஆதிசேஷ தீர்த்தம்.

தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்து நாகராஜனுடன் சேர்ந்து இறைவனைப் பணிந்து வணங்கிய ஆதிசேஷனின் மூலவிக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் திருக்கோயிலில் உள்ளன.  நாகதோஷங்களை விலக்கும் திருத்தலம்.

அம்பிகை ஆதியில் வழிபட்ட திருத்தலம்.

எனவே கங்காதேவியுடன் நான்முகன் , இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர்,  தட்சன் - ஆகியோரும் வழிபாடு செய்துள்ளனர்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடியருளியுள்ளார்.

காவிரிக்குத் தென்கரையிலுள்ள திருத்தலம்.

திருப்பாம்புரம் திருக்கோயிலினுள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாதபடி - நாகங்கள் உரிமையுடன் உலாவுவதை நாம் காணலாம்.

கும்பகோணம் - பூந்தோட்டம் பேருந்து வழித்தடத்தில் உள்ளது. அருகில் திருவீழிமிழலை, கோனேரிராஜபுரம், அன்னை சரஸ்வதி அருள் புரியும் கூத்தனூர் ஆகிய திருத்தலங்கள் உள்ளன.

''ஓம் நம சிவாய... சிவாய நம ஓம்!..''

''திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..