மார்ச் - 20
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்!
சிட்டுக்குருவிகள் - கூட்டமாகக் கூடி வாழும் உணர்வினை உடையவை. சுறுசுறுப்பான சுதந்திர இயல்புக்கு உவமை காட்டப்பட்டவை. நம்மைக் கண்டு அச்சப்படாத இயல்புடையன. நம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த சிட்டுக்குருவிகள் - நம் வீட்டுக்குள் வந்து உரிமையுடன் கூடு கட்டிக் கொண்டு நம்முடன் இனிமையாக வாழ்ந்திருந்தவை.
தினமும் காலையில் சிறிதளவு தண்ணீர் கிடைத்தாலும் அதில் குளித்து முடிக்கும் அழகு என்ன!... கீச்.. கீச்... என்று கூச்சலிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் பறந்து திரியும் அழகு என்ன!... இணையைக் காணாவிட்டால் பரபரப்புடன் அலையும் பதற்றம் என்ன!... தேடித் திரட்டிய உணவுத் துணுக்குகளை அன்புடன் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும் பாசம் என்ன!...வாசலில் உட்கார்ந்து கொண்டு வீட்டிற்குள் எட்டிப் பார்க்கும் ஆர்வம் என்ன!...
நம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தன சிட்டுக்குருவிகள். ஆனால், நாம் தான் துரோகம் செய்து விட்டோம்!... நம்மால்தான் -
உலகெங்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு நுண்ணலைத் தொலைபேசிக் கோபுரங்கள் (Cell Phone Tower)அதிகமாகி விட்டதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

நுண்ணலைத் தொலைபேசிகளிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள், சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க மண்டலத்தைத் தாக்குவதனால் குருவிகள் மலடாகின்றன. முட்டைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இந்தக் காரணங்களினால் சிட்டுக்குருவி மற்றும் தேன் சிட்டு போன்ற சிறு பறவைகள் இனவிருத்தியின்றி அழிகின்றன என்கின்றனர் வல்லுனர்கள்.
இந்நிலையில், உலகம் முழுதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் சிட்டுக் குருவி இனத்தின் மீது பரிதாபம் கொண்டு குரல் எழுப்ப...
பரிதாபத்துக்குரிய, சிட்டுக்குருவிகளுக்கு என ஒருநாளை ஒதுக்கியுள்ளனர். சிட்டுக்குருவிகளைப் பெருமைப்படுத்தி அவற்றின் முக்கியத்தை உணர்த்த அஞ்சல் தலைகளை வெளியிட்டு, கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளனர். சிட்டுக்குருவிகளைப் பற்றி கவலைப்பட்டு, அவற்றைக் காப்பாற்றுவதைக் குறித்த கருத்தரங்குகள் கூட நடத்தப்படுகின்றன.
செல்போன்
கோபுரங்களின் கதிர் வீச்சினால் - என்பது மட்டுமல்ல!... நகரங்களின் கட்டிட அமைப்பும்கூட குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கான அமைப்பிலிருந்து மாறி வெகு காலமாகின்றது. சிட்டுக்குருவிகள் தேடித் தேடித் திரிந்தாலும் மாறிவிட்ட நகர அமைப்பில் அவைகளுக்கான இரை கிடைப்பதே இல்லை.
விவசாய நிலங்களில் ரசாயன உரங்கள், வீரியம் நிறைந்த பூச்சிக் கொல்லிகள் இவற்றின் தாக்குதலால் சிட்டுக்குருவிகளின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான சிறு சிறு புழு பூச்சிகள் ஒழிந்து விட்டன. நச்சுப் பொருட்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வெட்டுக்கிளி, மண்புழுக்கள் போன்றவை - கூட அழிந்தன. அந்தப்பூச்சி இனங்கள் அழிந்த பின் -
அவற்றை உண்டு வாழ்ந்த சிட்டுக்குருவிகளும் சின்னஞ்சிறு பறவைகளும் உணவுக்கு வேறென்ன செய்ய முடியும்?.. அவைகளுக்கும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு வாழ வழியின்றி பரலோக ப்ராப்தியடைந்தன.
தோட்டங்கள், புதர்கள், அடர்ந்த மரச்சோலைகள், காடுகள்
அழிக்கப்பட்டன. வாழ்வின் எல்லா தகஅமைப்புகளும் சிட்டுக்குருவிகளுக்கு கிடைக்காமல் போனதால், சிட்டுக்குருவிகள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டன.
சிட்டுக்குருவிகளை, சிறு பறவை இனங்களை ஏன் காப்பாற்ற வேண்டும்?
உலகில் எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழல் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பவை. இந்தச் சங்கிலியில் ஓர் உயிரினம் அழியும்போது, அல்லது அழிக்கப்படும் போது இந்தச் சங்கிலியின் மொத்த அமைப்பும் சிதைந்து விடுகின்றது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சிட்டுக்குருவிகள் மற்றும் சில சிறு பறவைகள் கொசுக்களை அழிப்பதில் முதலிடம் வகிப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது. அவை அற்றுப் போனதால், கொசுக்கள் பெருகி பலவகையான நோய்களைப் பரப்பி வருகின்றன. . .
எனவே சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் . ரசாயன உரங்களைத் தவிர்ப்பதாலும், மரங்களைக் காத்து வளர்ப்பதாலும் , சிட்டுக்குருவி இனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்து உள்ளது.இந்தியஅஞ்சல் துறையும் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு உள்ளது.
எனவே . . நாமும் நம்மால் ஆன முயற்சிகளாக -
சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் வெளித் தாழ்வாரங்களில் சிட்டுக் குருவிகள் வந்து தங்கும்படிக்குக் கூடுகளை வடிவமைத்து வைக்கலாம். சிட்டுக்குருவிகள் கூட்டில் சேர்த்து வைத்துக் கொள்ள ஏதுவாக தேங்காய் நார்கள், வைக்கோல் போன்றவற்றையும் நாம் சேகரித்து வைக்கலாம். நம் வீட்டைச் சுற்றி இடம் இருந்தால் பந்தலில் படரும் கொடி வகைகளை பயிரிட்டு வளர்த்தாலும் சிட்டுக் குருவிகள் மற்ற தேன் சிட்டுகள் போன்ற பறவையினங்கள் நம் வீட்டின் அருகில் சுற்றித் திரிந்து பறப்பதற்கு வெகு காலமாகாது!....
அதன் பிறகு நமக்கும் - ''சிட்டுக்குருவி.. சிட்டுக்குருவி.. சேதி தெரியுமா!..'' என்று இயற்கையுடன் இணைந்து ஆடிப் பாடத் தோன்றும்.

வாழ்க வையகம்!... வாழ்க மானுடம்!...
பாடமாக்க வேண்டிய பதிவு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..