நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 15, 2022

நல்ல விதை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

அந்த நாட்களில்
திரைப்படம் என்றாலும் 
அதன் வழியாக
கதைக்களத்தை அனுசரித்து
நல்ல கருத்துக்களை
சொல்லிச் சென்ற 
பாடல்கள் மிகஅதிகம்

அந்தவகையில்
 யாவரும் அறிந்ததொரு 
இனிய பாடலுடன்
இன்றைய பதிவு..

பாடல் இடம் பெற்ற 
திரைப்படம் 
விவசாயி


இயற்றியவர்
திரு. உடுமலை நாராயணகவி


இசையமைத்தவர்
திரு. K.V. மகாதேவன்


பாடியவர்
திரு.T.M.சௌந்தரராஜன்
ஆண்டு - 1967
***

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்..

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்..

பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்

கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாது
காதல் பயிர் வளர்த்து
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்

பார் முழுதும் மனித குல
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையைக் கொண்டவர்க்கு
நேர் முறையை விதைத்து
சீர் வளர தினமும்
வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
நாணயத்தை வளர்க்கணும்..
***
காணொளி வடிவமைப்பு
தஞ்சையம்பதி


நாடு வளம் பெறுக
நல்லோர் நலம் பெறுக..
***

21 கருத்துகள்:

  1. கருத்துள்ள பாடல்.  இனிமையான பாடல்.  முழ்வதுமே கருத்துள்ள வரிகள் அனைத்தையும் ரசிக்கலாம்.  பாடலில் குறிப்பாக நான் ரசிக்கும் இடம் முதலிலும் அப்புறம் சரணங்கள் முடிவிலும் வரும் "பள்ளி என்ற நிலங்களிலே கல்விதனை விதைக்கணும்" டியூனை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " பள்ளி என்ற நிலங்களிலே கல்வி தனை விதைக்கணும்"

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி
      ஸ்ரீராம்..

      நீக்கு
  2. இப்போது வரும் பாடல்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன! இப்போது கூட பழைய பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.. "காலம் செய்த கோலமடி.. கடவுள் செய்த குற்றமடி... கடவுள் செய்த குற்றமடி..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "காலம் செய்த கோலமடி.. கடவுள் செய்த குற்றமடி.. கடவுள் செய்த குற்றமடி..."

      கடவுள் தான் நீதியையும் நெறிமுறைகளை நமக்கு எடுத்துச் சொல்ல ஞானிகளையும் கொடுத்து விட்டாரே!.. அப்புறம் எப்படிக் கடவுளின் குற்றம் ஆகும்?..

      இந்த மண்ணின் மக்கள் தான்
      ஒருவர் குடியை ஒருவர் கெடுத்ததோடு மாற்றானை உறவென்று நம்பி மதியிழந்து போனார்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. நல்ல வேளையாக இப்போதைய பாடல்களை ரசிப்பதே இல்லை. வெறும் சப்தம் தான். இம்மாதிரி அர்த்தமுள்ள இனிமையை இனிக் கேட்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இம்மாதிரி அர்த்தமுள்ள இனிமையை இனிக் கேட்க முடியுமா?.. //

      முடியவே முடியாது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. எல்லா வரிகளுமே சிறப்பாக இருக்கிறது ஜி கேட்ட பாடல்தான் இருப்பினும் வரிகளோடு படித்து கேட்கும்போது உணர்ச்சிகரமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அருமையான பாடல். நல்ல கருத்தை மனதிற்குள் விதைக்கும் பாடல் வரிகள். இப்போது இதைப்போல பாடல்கள் வருவதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இப்போது இதைப்போல பாடல்கள் வருவதில்லை.. //

      இனியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான பாடல் பகிர்வு. காணொளி வடிவமைப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பாடல் எழுதியவர், இசை அமைத்தவர், பாடியவர் படங்களையும் பாடல் வரிகளையும் பகிர்ந்தது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரையும் மற்றவர்களையும் நினைவு கூரத் தானே வேண்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நிறைய கேட்டு ரசித்த பாடல். ஒவ்வொரு வரியும் முத்து, மாணிக்கம் விலை மதிப்பில்லா வரிகள்.....நல்ல நல்ல நிலம் பார்த்து.....கூடவே பள்ளியில் கல்வி விதையை விதைக்கணும்....

    இப்போதைய நிலையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒவ்வொரு வரியும் முத்து, மாணிக்கம் விலை மதிப்பில்லா வரிகள்..//

      உண்மை.. உண்மை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  9. இல்லாதார் வாழ்க்கையிலும் இன்பப் பயிர்!! என்ன அழகான வரி!!

    திரு உடுமலை கவி, திரு மகாதேவன், திரு டி எம் எஸ் - ஜாம்பவான்கள் கூட்டணி!!! வார்த்தைகள் உண்டோ!!!!

    காணொளியும் கண்டு ரசித்தேன்...அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

    மிகவும் ரசித்தேன், துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // திரு உடுமலை கவி, திரு மகாதேவன், திரு டி எம் எஸ் - ஜாம்பவான்கள் கூட்டணி.. //

      அதெல்லாம் அழகிய பொற்காலம்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  10. நாடு வளம் பெறட்டும்

    மனங்களிலே நாணயமும் இல்லை பயிர்செய்கையும் இல்லை.வரும் காலங்களுக்கு முக்கிய தேவையான பாடலாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..