நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த 23/8 செவ்வாய் அன்று வெளியாகிய வண்ணக் கவிதையின் தொடர்ச்சி..
அப்போதே இதனைக் கொடுத்திருக்கலாம்..
தொலைதூரப் பயணத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த பதிவுகளை இடம் மாற்றதற்கு மனம் இல்லை..
இதோ -
இன்று தங்களுடன்!..
வண்ணம் - 2
வண்ணம் வண்ண மயம்
*
வானொரு வண்ணம்
முகிலொரு வண்ணம்
வழங்கிய வண்ணம்
வாய்மையின் வண்ணம்.. 1
கதிரொரு வண்ணம்
நிலவொரு வக்ண்ணம்
காரிருள் வண்ணம்
கயவர்கள் வண்ணம்.. 2
கடலொரு வண்ணம்
கரையொரு வண்ணம்
அலையதன் வண்ணம்
ஆசையின் வண்ணம்.. 3
அனலொரு வண்ணம்
அறத்தின் வண்ணம்
புனலொரு வண்ணம்
புன்னகை வண்ணம்.. 4
குருதியின் வண்ணம்
கொடுஞ்சின வண்ணம்
கண்களின் வண்ணம்
கருணையின் வண்ணம்.. 5
காற்றினில் வண்ணம்
கார்முகில் வண்ணம்
ஆற்றினில் வண்ணம்
அழகியல் வண்ணம்.. 6
நாற்றினில் வண்ணம்
செந்தளிர் வண்ணம்
ஊற்றினில் வண்ணம்
உயிர்களின் வண்ணம்.. 7
புவியினில் வண்ணம்
பூத்திடும் வண்ணம்
கலைமிகு வண்ணம்
கவிதையின் வண்ணம்.. 8
அன்றொரு வண்ணம்
இன்றொரு வண்ணம்
அழகினில் வண்ணம்
அருந்தமிழ் வண்ணம்.. 9
பொன்னும் வண்ணம்
மணியும் வண்ணம்
பொருளும் வண்ணம்
அருளும் வண்ணம்.. 10
மதியுறு வண்ணம்
புகழும் வண்ணம்
மதியறு வண்ணம்
இகழும் வண்ணம்.. 11
வெல்லும் வண்ணம்
வேதனை வண்ணம்
சொல்லும் வண்ணம்
சோதனை வண்ணம்.. 12
உறவினில் வண்ணம்
பகையினில் வண்ணம்
துறவினில் வண்ணம்
தும்பையின் வண்ணம்.. 13
இளமையின் வண்ணம்
இதழ்களின் வண்ணம்
முதுமையின் வண்ணம்
முன்வினை வண்ணம்.. 14
வாழ்ந்தவர் வண்ணம்
வானவில் வண்ணம்
வீழ்ந்தவர் வண்ணம்
வெம்புகை வண்ணம்.. 15
அஞ்சிடும் வண்ணம்
அந்தியின் வண்ணம்
எஞ்சிடும் வண்ணம்
ஈசனின் வண்ணம்.. 16
ராமனின் வண்ணம்
நீதியின் வண்ணம்
நின்றவர் வண்ணம்
நெகிழ்ந்தவர் வண்ணம்.. 17
கண்ணனின் வண்ணம்
கடமையின் வண்ணம்
கண்டவர் வண்ணம்
கனிந்தவர்
வண்ணம்.. 18
பக்தியின் வண்ணம்
முக்தியின் வண்ணம்
பல்லுயிர் வண்ணம்
பசுபதி வண்ணம்.. 19
பித்தனின் வண்ணம்
பிதற்றலின் வண்ணம்
சித்தனின் வண்ணம்
சிவனருள் வண்ணம்.. 20
**
வாழ்வே வண்ணம்
வாழ்கவே வண்ணம்
***
அனைவரையும் கவரும் வண்ணம்
பதிலளிநீக்குஉங்கள் கவிதையின் எண்ணம்!
வானவர் யாவரும்
வாழ்த்துவதும் திண்ணம்.
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்கு'பித்தா பிறைசூடி பெருமானே' என்று அவனை அழைக்கும்போது 'பித்தனின் வண்ணம் பிதற்றலின் வண்ணம்' என்று படிக்கும்போது மனம் ஏற்கவில்லைல்லயே
பதிலளிநீக்கு//பித்தனின் வண்ணம் பிதற்றலின் வண்ணம்..//
நீக்குஇந்த வார்த்தைகள் எளியேன் எனக்கானவை என்ற அர்தத்தில் எழுதியிருக்கின்றேன்..
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
வண்ணக் கலவைகளாக தாங்கள் தொகுத்த வண்ணங்கள் மனதை இதமாக நிறையச் செய்கின்றன.
கோர்வையான வண்ணங்களின் அற்புதமான ஒளித்தீட்டலில் எதைவிட, எதைப்புகழ என தெரியாதபடிக்கு கூட சற்றே தடுமாறுகிறேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
/இளமையின் வண்ணம்
இதழ்களின் வண்ணம்
முதுமையின் வண்ணம்
முன்வினை வண்ணம்.. 14/
ஆஹா.. வார்த்தை ஜாலங்களை வண்ணக்கோலங்களை.. ரசித்தேன். தங்களின் அபாரமான அறிவுக்கு என் பணிவான வணக்கங்கள். 🙏. சிறப்பானதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இளமையின் வண்ணம்
நீக்குஇதழ்களின் வண்ணம்
முதுமையின் வண்ணம்
முன்வினை வண்ணம்.. //
இந்த வரிகள் இரண்டு அர்த்தம் தருபவை..
//இளமையின்
வண்ணம்
இதழ்களின்
வண்ணம்.. //
இளமையின் இனக் கவர்ச்சியையும்
பின்னாளில் பூக்களின் இதழ்களைப் போல் உதிர்தலையும் குறிக்கும்..
//முதுமையின்
வண்ணம்
முன்வினை
வண்ணம்.. //
முன்வினை வண்ணம் என்பது முற்பிறவியையும் இந்த முதுமை முந்தைய இளமையின் தவறுகளையும் குறித்தது..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓ.... நல்ல விளக்கமான மறுமொழிக்கு மகிழ்ந்து போனேன். ஒவ்வொன்றிருக்கும் இரு கருத்துக்கள் அமைந்திருப்பதும் அவற்றை விளக்கமாக கூறியமமைக்கும் மிக்க நன்றி. எதையும் அலசி ஆராய்ந்து ஆழமான அறிவுடன் விமர்சிக்கும் உங்கள் அறிவாற்றலுக்கு என் அன்பான வந்தனங்கள். நன்றி.
நீக்குசிறப்பான கவிதை தொடர்ந்து கவிதை தாருங்கள் ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஆகா...!
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஆகா...!
பதிலளிநீக்குதங்களது இரட்டைக் கருத்துகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஎங்கே தான் போகும் நான் கொடுக்கும் கருத்துரைகள்? மனசே நொந்து போகிறது போங்க! :(
பதிலளிநீக்குநீங்கள் இங்கு வருவதில்லையே என்று நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்..
நீக்குவந்த வரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
எங்கள் தளத்தில் காணாமல் போனால் நான் உடனே கொண்டு வந்து சேர்த்து விடுவேன் இல்லக்கா?
நீக்குஎல்லாப் பதிவுகளிலும் கருத்துப் போடுகிறேன். ஆனால் போவதில்லை. சில பதிவுகளில் போடும் கருத்துரைகளை மெயில் பாக்சில் இருந்து திரும்பவும் கொண்டும் வந்து போடுகிறேன். சிலவற்றில் போகின்றன. பலவற்றில் போவதில்லை.
நீக்குகிர்ர்ர்... என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை!
நீக்குஆமா இல்ல! :)
நீக்குகீதாக்கா எங்கள் தளத்தில் உங்கள் கருத்துகள் ஸ்பாமிலும் இல்லையே....பல பதிவுகள் போயாச்சு...
நீக்குதுரை அண்ணா உங்கள் கருத்துகள் ஓரிரு பதிவுகளுக்கு இருந்தவற்றை எடுத்துப் போட்டுவிட்டேன். துளசியின் ஓணப் பதிவு என்று நினைக்கிறேன். மற்றவற்றிற்கு இல்லை செக் செய்தும் விட்டேன்.
கீதா
// நீங்க உங்க ஜிமெயில் அக்கவுன்டின் மெயில் பாக்சிலும் பாருங்கள் தம்பி துரை! என் கருத்துரைகள் அங்கே கிடைக்கும். :(((( அல்லது ஸ்பாமில் பாருங்கள். நேரம் கிடைக்கணும்! அதான்! //
பதிலளிநீக்குஸ்பாமில்தான் இருக்கும். அங்கிருந்துதான் நான் எடுத்துக் போடுவேன்!
ஓ!..
நீக்குஇரகசியம் அறியத் தந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்..
ஹா... ஹா.. ஹா... ரகசியமா? முன்னரே சொல்லி இருக்கிறேனே... Blog spam
நீக்குஎன்னவோ... நினைவில் இல்லை..
நீக்குஜி மெயிலில் பார்த்து விட்டு ஓய்ந்தேன்...
Blog spam - இப்போது தான் அங்கே போனேன்..
பல்வேறு பதிவுகளுக்கும் என 92 கருத்துகள்..
மூன்றில் ஒரு பங்கினை வெளியிட்டிருக்கின்றேன்.. மீதி நாளைக்கு.. கட்டை விரல் வலிக்கிறது எல்லாமே செல்போனில் தானே..
நன்றி ஸ்ரீராம்..
அம்மாடி... 92 கருத்துக்களோ... கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்யுங்கள்.
நீக்கு:))
மகிழ்ச்சி நன்றி ஸ்ரீராம்
நீக்குவண்ணம் வண்ணமாய் அழகான கவிதை துரை அண்ணா. ரசித்து வாசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குவண்ண மயமாய் உங்கள் கவிதை ஜொலிக்கிறது பிரகாசமாய்
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குகம்பனை போல வண்ண கவிதை அருமை.
பதிலளிநீக்கு//கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்//
வண்ணங்களை ரசித்தேன்.
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே
-சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத் தந்தாதி பாடலும்
பாசம் படத்தில் வரும் கண்ணதாசன் பாடலும் நினைவுக்கு வருகிறது.
கவிதை அருமை.
பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி இருக்கின்றீர்கள்..
நீக்குசேரமான் பெருமாள் நாயனாருடைய பொன்வண்ணத்து அந்தாதி மட்டுமே புதியது..
கம்ப ராமாயண பாடலையும் கண்ணதாசன் பாடலையும் அறிந்திருந்தாலும் இதனை எழுதும் போது அவை
எதுவும் நினைவுக்கு வரவில்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வண்ணக் கவிதையுடன் படங்களின் வண்ணங்களும் கவர்ந்து இழுக்கின்றன.
பதிலளிநீக்கு