நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 28, 2022

ஆரூர் தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம்
ஆரூர் மூலட்டானம்


இறைவன்
ஸ்ரீ தியாகராஜர்
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை

ஸ்ரீ அல்லியங்கோதை

திரு ஆரூர் ஸ்ரீ புற்றிடங்கொண்டார் 
ஆலய தரிசனம் தொடர்கின்றது..

சோழர்களுக்கு ஹ்ருதய ஸ்தானம் இக்கோயில்.. 

சோழ வம்சத்தின் முசுகுந்த சக்ரவர்த்தி அவர்கள் ஆட்சி செய்த திருத்தலம்..

சிலப்பதிகாரத்தில் எடுத்துப் பேசப்படுபவர் மாமன்னர் மனுநீதிச் சோழர்.. அவரது மாண்பு வெளிப்பட்ட திருத்தலம்..

பிரம்மாண்டமான இக்கோயிலில் ஒன்பது ராஜ கோபுரங்கள், எண்பது விமானங்கள், பன்னிரண்டு மதில்கள், பதின்மூன்று பெரிய மண்டபங்கள், பதினைந்து தீர்த்தக் கிணறுகள் உள்ளன..

மூன்று நந்த வனங்களும் மூன்று பெரிய பிரகாரங்களும் விளங்கும் திருக்கோயிலில் முன்னூற்று அறுபத்தைந்து லிங்கங்களும் எண்பத்தாறு  விநாயகர் சிலைகளும்
நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகளும் அமைந்துள்ளதாக குறிப்புகள்..

இத்தலத்தின் சிறப்புகளை முழுதும் உணர்ந்தாரும் இல்லை.. உரைத்தாரும் இல்லை..

அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே!.. - என்று
அப்பர் ஸ்வாமிகளே வியந்து கேட்கின்றார் எனில் , மற்றவர்கள் எம்மாத்திரம்?..

முழுவதுமாக உணர்ந்து அறிவதற்கு இப்பிறவி போதாது என்பது மட்டுமே நிச்சயம்..

மஹாளய பட்சத்தன்று தர்ப்பணம் நிறைவேற்றிய பிறகு அவசர அவசரமாக தரிசனம் செய்த நிலை..

உணவகத்தில் சாப்பிட்டது  பெரிய பேத்திக்கு ஒத்துக் கொள்ளவில்லை. வாந்தி வயிற்றுப் போக்கு .. குழந்தை மிகவும் துவண்டு விட்டாள்..

பெரியவர்கள் மட்டுமே வந்து விட்டு உடனடியாகத் திரும்ப வேண்டிய சூழ்நிலை..

அந்த நிலையிலும் நமது வலைத்தள நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் இன்றைய பதிவில்!..





பஞ்சமுக வாத்தியம்

மூன்றாவது திருச்சுற்றின் வட புறத்தில் ஸ்ரீ கமலாம்பிகை சந்நிதி..

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்
முன் மண்டபத்தில் கொலு வைத்திருக்கின்றனர்..

கமலாம்பிகை சந்நிதி உள் திருச்சுற்றில் தான் அட்சர பீடம் அமைந்துள்ளது..


கமலாம்பிகை நந்தி மண்டபம்



சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்ற எங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறு மந்தணாரூ ரென்பதே.. 2/101/5
-: திருஞானசம்பந்தர் :-

பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே..6/34/5
-: திருநாவுக்கரசர் :-

செறிவுண்டேல் மனத் தால்தெளிவு உண்டேல்
தேற்றத்தால் வருஞ் சிக்கன உண்டேல்
மறிவுண்டேல் மறு மைப்பிறப்பு உண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண்டு யாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை
பொன்போலுஞ் சடை மேற்புனைந்தானை
அறிவுண்டே உடலத்து உயிர் உண்டே
ஆரூ ரானை மறக்கலு மாமே.. 7/59/5
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. சிறப்பு.  நான் ஒரே ஒருமுறை இந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.  அப்போது அவசர அவசரமாக சுற்றி வந்ததுதான்.   நிதானமாக சுற்றிப்பார்க்க வேண்டுமென்று நினைத்திருக்கும் கோவில்களில் ஒன்று.  மற்றவை சிதம்பரம் நடராஜர் கோவில், நெல்லை காந்திமதியம்மன் ஆலயம் (போனதே இல்லை) வைத்தீஸ்வரன் கோவில், திருவானைக்கா கோவில்... 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நாலைந்து முறை போயும் சென்ற முறை போனப்போ அக்ஷர பீடம் எல்லாம் பார்க்கவே முடியலை. நடக்க முடியாததால் திரும்பினால் போதும் என ஆகி விட்டது. :)))) விபரமான தகவல்கள். அவசரக் கோலம் அள்ளித் தெளிக்காமல் நன்றாகவே வந்திருக்கின்றன படங்கள் எல்லாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. படிக்கட்டுகளை எப்படிக் கடக்கப் போகின்றோமோ - என்ற கவலை எனக்கு..

      ஆயினும், இறையருள் துணை வந்தது..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  3. படங்கள் நன்று தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  4. சிறப்பான தரிசனம் ..

    ஸ்ரீ அல்லியங்கோதை ..இனிய நாமம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. அழகான படங்கள் அனைத்தும் தெளிவாக நன்றாக வந்துள்ளது. உங்கள் படங்களின் மூலம் இறைவன், இறைவியையும், கோவிலின் பல இடங்களையும் தரிசித்துக் கொண்டேன். இந்தக் கோவிலுக்கு ( இந்தக்கோவில் மட்டுமில்லை. நீங்கள் பதிவிடும் பெரிய பெரிய கோவில்களுக்கு கூட இன்னமும் செல்லும் வாய்ப்பை இறைவன் எனக்கு அருளவில்லை. ஆனாலும், இங்கெல்லாம் நேரடியாக சென்று இறைவனை தரிசிக்கும் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். தங்கள் பதிவின் மூலம் இப்படிபட்ட கோவில் தரிசனங்கள் இப்போது கிடைப்பதும் மனதிற்கு மகிழ்வாக உள்ளது.)

    தங்கள் பெரிய பேத்திக்கு தற்சமயம் இறைவன் அருளால் உடல்நிலை குணமாகியிருக்குமென நம்புகிறேன். வெளியில் செல்லும் நேரம் குழந்தைகளுக்கு உடல் நிலை பாதித்தால் நம் மனது என்ன மாதிரி கவலையுறும் என்பதை நானும் உணர்கிறேன். இறைவன் அருள் நம் வீட்டிலுள்ள பேத்தி, பேர குழந்தைகளுக்கு பூரணமாக கிடைத்து அவர்கள் என்றும் நலமாக வாழ அந்த ஆருரானை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இறைவன் அருள் நம் வீட்டிலுள்ள பேத்தி, பேர குழந்தைகளுக்கு பூரணமாக கிடைத்து அவர்கள் என்றும் நலமாக வாழ அந்த ஆருரானை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி...

      நீக்கு
  6. புற்றிடங்கொண்டார் கோவில் தரிசனம் அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பேத்தி உடல் நலம் அடைந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

    பெரிய கோவில் அதை சுற்றிப்பார்க்க அதிக நேரம் தேவைப்படும். நிறைய முறை போய் இருக்கிறோம் மாயவரத்தில் இருக்கும் போது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. // படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பேத்தி உடல் நலம் அடைந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.//

    இன்று காலையில் நல்லபடியாக ஊருக்குச் சென்றார்கள்..

    தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..