நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 29, 2022

ஆரூர் தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம்
ஆரூர் மூலட்டானம்

ஆரூர் அரநெறி (நன்றி :  விக்கி)



ஆரூர் அரநெறி

திரு மூலட்டானம் எனப்படும் இக்கோயிலின்
உள்ளே தெற்குத் திருச்சுற்றில் அரநெறி எனும் தனிக் கோயிலும் அமைந்துள்ளது..

அசலேஸ்வரம் எனப்படும் இக்கோயிலில் ஸ்வாமி அகிலேஸ்வரர் .. அம்பிகை  வண்டார்குழலி..

இங்கு தான் நாயன்மார்களுள் ஒருவராகிய நமிநந்தியடிகள் - நீரால் விளக்கெரித்தார் என்பர்.. 

இந்தக்கோயில் அப்பர் ஸ்வாமிகளால் பதிகம் பெற்றதாகும்..

இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கம்  மேலைக் கோபுரத்திற்கு அருகில் 
ஸ்ரீ ஆனந்தீஸ்வரம் எனும் கோயில் அமைந்துள்ளது..  

ஸ்ரீ ஜேஷ்டா தேவி


இங்கு தான் ஸ்ரீ ஜேஷ்டா தேவி எழுந்தருளியிருக்கின்றாள்..


ஸ்ரீ சித்தர் பீடம்
கமலமுனி  சித்தர் பீடமும் இங்கு தான் உள்ளது..

மேலைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள பழமையான மண்டபம் அருங்காட்சியகம் என அடைத்து வைக்கப் பட்டுள்ளது.. 

அதன் வெளி வாசலில் பெரிய அளவினில் கௌதம புத்தர்.. 

அன்பு வழி நின்ற அவரது மூக்கினை சிதைத்திருக்கின்றனர்.. 



வெளிப்புற விதானத்தில் பழமையான ஓவியங்கள்.. 


பாற்கடல் வாசன் வீதிவிடங்கப் பெருமானை நெஞ்சகத்தில் தாங்கியிருக்கும் திருக்கோலம்.. 


ஒருபுறம் ரதி மன்மதனும் மறுபுறம் முசுகுந்தரும் தேவேந்திரனும்.. 

ஸ்ரீ முசுகுந்தரும்
தேவேந்திரனும்

மேலைக் கோபுரம் கலையழகு மிக்க சிற்பங்களுடன் திகழ்கின்றது..

கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.. 2/101/7
-: திருஞானசம்பந்தர் :-

பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.. 6/34/8
-: திருநாவுக்கரசர் :-

கரியானை உரி கொண்டகை யானைக்
கண்ணின் மேலொரு கண்ணுடையானை
வரியானை வருத்தங் களை வானை
மறையானைக் குறை மாமதி சூடற்கு
உரியானை உலகத்துயிர்க் கெல்லாம்
ஒளியானை உகந்துள்கி நண் ணாதார்க்கு
அரியானை அடியேற்கு எளி யானை
ஆரூரானை மறக்கலுமாமே.. 
7/59/7
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. சென்று வந்த உணர்வு... கண்டேன், வணங்கினேன், மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி ஜி...

      நீக்கு
  3. எப்போவோ பார்த்தவை இவை எல்லாம். சமீபத்தில் சென்றப்போப் பார்க்க முடியலை. அதிலும் இளங்கோயில்களைத் தரிசிக்க முடியலை! :( அருமையான விபரங்களுடன் விளக்கமான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் சிரமங்களால் நானும் திகைத்துத் தான் இருந்தேன்..

      எப்படியோ இறையருளால் நல்லபடியாக தரிசனம்

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  4. பதில்கள்
    1. சிவாய நம ஓம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. தேவாரங்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.படங்களும் அருமை.
      ஆரூர் தரிசனம் கிடைத்தது நன்றி.
      பாடி" என்று சொன்னது வேறு மாதிரி எழுத்து பிழையாக வந்து விட்டது அதனால் அதை நீக்கி விட்டேன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தாங்கள் பகிர்ந்த படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. அமைதி ததும்பும் புத்தரின் முகத்தில் ஏன் இந்த செயல்.? எல்லா படங்களும், அவற்றிற்கான விளக்கந்தரும் செய்திகளும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நேற்று இந்தப்பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிப்பு என்பதெல்லாம் எதற்கு?..

      தங்கள் அன்பின் வருகையே மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. உங்கள் பகிர்வின் மூலம் பற்பல தலங்களையும் அறிந்து கொள்கிறோம் தரிசித்து மகிழ்கிறோம் . நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..