நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 18, 2022

வந்தேமாதரம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இந்தப் 
பாடலால் தான்
சுதந்திர வேட்கை
கனன்று எரிந்தது..


" இப்பாடல் பிரபலமடைவதைக் காண்பதற்கு நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தியனாலும் பாடப்படும்.."
- பங்கிம் சந்த்ர சட்டர்ஜி -


பங்கிம் சந்த்ர சட்டர்ஜி அவர்களது 
இந்தப் பாடலின் 
வந்தே மாதரம் 
என்ற வார்த்தைகளைக் கேட்டுக் 
குலை நடுங்கித் தடை 
செய்திருந்தான் வெள்ளையன்..

காஷ்மீர் தொட்டுக் கன்யா குமரி வரை 
ஒலித்த வீர முழக்கம்..

" இந்த முழக்கத்தைக் கேட்கப் பிடிக்காமல் தான் அவசர கதியாய் நாட்டை அலங்கோலம் செய்து விட்டு ஓடிப் போனான்.." - என்று எங்கள் வரலாற்று ஆசிரியர் 
திரு S.கோவிந்தராஜன் அவர்கள் வகுப்பில் கலகலப்பூட்டுவார்..

இன்றைக்கும் இந்தப் பாடலுக்கு இளகாத 
கருங்கற்கள் இம்மண்ணில் உண்டு.
**

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம்
மலயஜ சீதளாம்
ஷஸ்ய ஷியாமளாம்
மாதரம் வந்தே மாதரம்

ஷுப்ரஜ் யோத்ஸ்னா
புலகிதயா மினிம்
புல்லகு ஸுமித த்ருமதல
ஷோபினிம் சுஹாசினிம் 
சுமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம்
மாதரம் வந்தே மாதரம்!.
**
இந்நாட்டைத் தாயாக பாவித்து அதற்கு மேல் பராசக்தியாகப் போற்றித் தொழுகின்ற பாடல் இது..

முதல் இரண்டு கண்ணிகள் 
மட்டும் இங்கே பதிவில்!


மகாகவியும்
இந்தப் பாடலால் 
ஈர்க்கப்பட்டு
இரண்டு விதமாகத்
தந்திருக்கின்றார்..

சட்டர்ஜி எழுதிய 
வரிகள் தான்
சிலருக்குப் பிடிக்காது!..

பாரதியார் எழுதியது
கூடவா பிடிக்காது?..

ஆமாம்!..

அதெல்லாம்
இந்நாட்டில்
உடன் பிறந்த வியாதிகள்..

தமிழும் இனிமையும்
தெரியாத தடுமாற்றங்கள்!..

காணொளி
நன்றி: ராகமாலிகா Tv


இனிய நீர்ப் பெருக்கினை
இன்கனி வளத்தினை
தனிநறு மலயத்
தண்காற் சிறப்பினை
பைந்நிறப் பழனம் 
பரவிய வடிவினை
வந்தே மாதரம்
வந்தே மாதரம்!..

நளிர்மணி நீரும்
நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் 
கொழும் பொழிற் பசுமையும் 
வாய்ந்து நன்கிலகுவை
வாழிய அன்னை
வந்தே மாதரம்
வந்தே மாதரம்!..

தெண்ணில வதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை
வந்தே மாதரம்
வந்தே மாதரம்!..
*
ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
வளரக  தமிழகம்
***

16 கருத்துகள்:

  1. சிலிர்க்க வைக்கும் பாடல்கள்...   சுதந்திரதினம் அன்று அலுவலகத்தில் மூன்று பேர் சுதந்திரம் கொடுத்ததே பிடிக்கவில்லை என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.  நான் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நாட்டில் எதுவுமே பிடிக்காது சிலருக்கு.. ஆனால் இங்கிருந்து சோறும் வேண்டும்.. நீரும் வேண்டும்.. நீட்டிப் படுக்க இட்ச்மும் வேண்டும்.. ஆனால் இம்மண்ணின் மீது பற்று என்னும் உடுப்பு மட்டும் ஆகாது.. அப்படி ஒரு மனோநிலை.. என்ன செய்வது?..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி.. ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இரண்டு காணொலி பாடல்களும் சிறப்பானவை. இன்றும் தங்கள் பதிவில் கேட்டு மகிழ்ந்தேன். வந்தே மாதரம் என்ற வரிகள் எப்போது கேட்டாலும் உணர்ச்சிவசப்பட வைப்பவை. பாரத மாதாவுக்கு என்றும் நம் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைவான் பாடல்கள்..
      கேட்கும் போதெல்லாம் உடலில் புது ரத்தம் பாய்ந்த மாதிரி இருக்கும்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. அண்ணா வந்தேமாதரம் பாடல் ரொம்பவே சிலிர்க்க வைக்கும் பாடல். இருகாணொளிகளையும் பார்த்து கேட்டு ரசித்தேன்.

    மற்றொரு பாடல் நெஞ்சுக்கு நீதியும் பாடலை க் கேட்டால் மனம் அப்படியே ஆழ்ந்து சிலிர்த்துவிடும்....ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!! என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. நெஞ்சுக்கு நீதியும் பாடலைக் கேட்கும் போது தோள்களில் வீரம் பொங்கும்..

      பாரதி என்றால் பாரதி தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  5. இரண்டு காணொளிகளும் மிக அருமை.
    பராதியார் பாடல் பகிர்வும் குழந்தைகள் பாடுவதும் அருமை.
    பங்கிம் சந்தர சட்டர்ஜி பாடல் முன்பு தொலைக்காட்சியில் காலையில் வைப்பார்கள். அந்த பாடல் காணொளி மிக அருமையாக இருக்கும். பள்ளியில் நிறைய தடவை பாடி இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. நாங்கள் படித்த காலத்தில் சட்டர்ஜி அவர்களது வந்தேமாதரம் பாடலை பள்ளியில் சொல்லித் தரவில்லை..

    வானொலியில் விடியற்காலையில் கேட்டுக் கேட்டு மனப்பாடம்.

    முழுப்பாடலையும் சில வருடங்களுக்கு முன்பு யூட்டியூப் வாயிலாகத் தான் அறிந்து கொள்ள முடிந்தது..

    தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. இந்திய வானொலியில் காலையில் ஒலிக்கும் பாடல் பலதடவை கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. பாடலைக் கேட்கும்போதே மனமும் மெய்யும் சிலிர்க்கும். தேசபக்தியில் கண்கள் நிரம்பும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..