நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நன்றி : விக்கி
விக்கிபீடியா வழங்கிய தொகுப்புகளில்
இருந்து திரட்டப்பட்டவை..
*
நாயக்கர் ஆட்சி வலுவிழந்ததனால் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது
மதுரை...
அங்கே நவாப் கூட்டத்துக்குள் பங்காளிச் சண்டை..
வெட்டு குத்து கொலை - என்று குழப்பம் ஏற்பட்ட நிலையில் வரி வசூலிக்கும் உரிமை கும்பினிக்காரனுக்குக் கிடைத்தது..
வரி வசூல் என்று பெட்டியுடன் வந்து நுழைந்த வெள்ளையனை முறியடிப்பதற்கு நெற்கட்டான் செவல் பூலித்தேவர் எவ்வளவோ முயன்றார்..
இதற்கு முன்பாக கட்டாளங்குளம் வீர அழகுமுத்து கோன் பலியிடப்பட்ட விஷயத்தை இன்னும் மறக்காததால்
ஏனைய பாளையக்காரர்கள் உடன் ஒத்துழைக்க வில்லை..
கர்னல் கெரோன் என்பவனின் தலைமையில் கும்பினிப் படையும் மாபூஸ்கான் என்பவன் தலைமையில் ஆர்க்காடு நவாப் படைகளும், கான் சாகிப் என்பவன் தலைமையில் உள்நாட்டுத் துரோகங்களும் ஒன்று சேர்ந்தன..
கான் சாகிப் எனப்பட்ட யூசுப் கான் இம்மண்ணில் பிறந்தவன். பழைய பெயர் மருதநாயகம்..
வியாபாரி என்ற போர்வையில் வந்த நச்சரவுக் கூட்டத்தினால் -
1755 தொடங்கி 1767 வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது..
1761ல் யூசுப் கானுடன் இறுதியாக நடத்திய போரில் பூலித்தேவரின் படைகள் முதன்முறையாகத்
தோற்றன.. கோட்டைச் சுவர் பிளக்கப்பட்டது..
பிளக்கபபட்ட கோட்டை சீர் செய்யப்பட்டாலும்
மே 1767 ல் வாசுதேவ நல்லூர் கோட்டையில் இருந்து தப்பிச் செல்லும் போது வஞ்சகமாக பிடிக்கப்பட்டார் பூலித் தேவர்..
பாளையங் கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும்,
அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது கோயிலில் பெரிய புகை மண்டலமும் ஜோதியும் ஏற்பட கைவிலங்குகள் அறுந்து விழுந்து அந்த ஜோதியில் கலந்து விட்டார் பூலித்தேவர் - என்றும்,
ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட பூலித்தேவர் ரகசியமாக தூக்கில் இடப்பட்டார்.. இது மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது என்றும் இரு வேறு கருத்துகள்..
இன்றைக்கும் சங்கர நாராயணர் கோயிலில் பூலித்தேவர் மறைந்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது..
***
அந்நியரிடம் இருந்து
பாரதத்திருநாடு
விடுதலை அடைந்த
எழுபத்தைந்தாவது
வருடக் கொண்டாட்டம்
நிகழும் இவ்வேளையில்
மாவீரர்களை
நினைவு கூர்வோம்..
ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
வளரக தமிழகம்
***
கொண்டாடப்பட வேண்டியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
நீக்குபுதிய தகவல்கள் அறிந்தேன் நன்றி ஜி.
பதிலளிநீக்குபுதிய தகவல்கள் அறிந்தேன் நன்றி ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
நீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்கு75 வது சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கு ஏற்ப பூலித்தேவர் பற்றிய அழகான அருமையான பதிவு. கொண்டாடுவோம்!
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
நீக்குபூலித்தேவர் வரலாறு சொன்ன விதம் அருமை.
பதிலளிநீக்குவிடுதலைக்கு உண்மையாக பாடுபட்டவர்களை போற்றுவோம்.
வணக்கம் சொல்வோம். சங்கரன் கோவிலில் அந்த அறை பாதுகாக்க படுவதை பார்த்தோம்.
பூலித்தேவர் வரலாறு சொன்ன விதம் அருமை.
பதிலளிநீக்குவிடுதலைக்கு உண்மையாக பாடுபட்டவர்களை போற்றுவோம்.
வணக்கம் சொல்வோம். சங்கரன் கோவிலில் அந்த அறை பாதுகாக்க படுவதை பார்த்தோம்.
தங்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது..
நீக்குநேற்றைய பதிவில் வீரன் அழகுமுத்துக் கோன் நினைவிடம்.. இன்றைக்கு சங்கரன் கோயிலில் பூலித்தேவர் தரிசனம்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி....
ஒவ்வொரு முறை சங்கரன் கோயில் செல்லும்போதும் நினைவாகப் பூலித்தேவன் மறைந்த சுரங்கப்பாதையைப் பார்க்காமல் வருவதில்லை. பூலித்தேவன் உண்மையில் இறக்கவில்லை என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.
பதிலளிநீக்கு