நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

ஸ்ரீ கிருஷ்ண கீதம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 3
கோகுலாஷ்டமி
ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி


ஆயர்பாடி மாளிகையில் 
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் 
தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் 
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் 
தூங்குகின்றான் தாலேலோ..


அவன் வாய் நிறைய மண்ணை 
உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் 
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ..


பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ...
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே 
இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் 
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் 
தூங்குகின்றான் தாலேலோ...


நாகபடம் மீதில் அவன் 
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்து 
கொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை 
கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் 
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் 
தூங்குகின்றான் தாலேலோ..


கண்ணனவன் தூங்கிவிட்டால் 
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் 
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை 
காண்பதற்கும் 
போதை முத்தம் கேட்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ..


ஆயர்பாடி மாளிகையல் 
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் 
தூங்குகின்றான் தாலேலோ..
ஃஃஃ


பாடல்: கவியரசர்
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்


வசுதேவ சுதம் தேவம் கம்ச சானூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
***

21 கருத்துகள்:

  1. அடடா...   நான் வேறு பாடல் ஷேர் செய்திருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலைப் பதிவு செய்வீர்கள் என்றே நினைத்தேன்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  3. கருத்து எழுதி முடிப்பதற்குள் ரீசெட் ஆகிறது. கருத்துகள் பதிய முடிவதில்லை, இரண்டாவது நாளாக

    பதிலளிநீக்கு
  4. அதே அருமையான பாடல் இங்கேயும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அவர்கள் இந்தப் பாடலைப் பதிவு செய்வார் என்றே நினைத்தேன்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  5. முதல் படம் மனதிற்கு உகந்தது. என் பூஜை அறையில் உள்ளது

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் பக்திப் பரவசமடையச் செய்கிறது. அந்த இறுதிப் படம்... ஆகா அருமை. நீலவண்ண கண்ணனின் அழகான பொற்பாதங்களை என்றும் நம் மனமெனும் சிம்மாசனத்தில் அமர வேண்டிய திருப்பாதங்களை பலமுறை கண்டு தரிசித்து மனதில் இருத்திக் கொண்டேன்.

    பகிர்ந்த பாடல் எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காதது. எ.பியிலும் இன்றைய தனிப்பாடல் இதுவாகவே இருக்கக்கண்டேன். அற்புதமான பாடல். படங்களின், மற்றும் இனிய பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படம் மனதை உருக்குகின்றது..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  7. படங்களும், பாடலும் மிக அருமை.
    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  8. மயக்கும் பாடல் கண்ணனைப் போல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐயா.. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  9. மிகவும் அழகான இனிய பாடல்.
    குட்டிக் கண்ணன் கண்முன்னே விரிகிறான்.
    அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  10. என்ன இது கருத்து போவதே இல்லை....கஷ்டப்படுத்துகிறது. ப்ளாகர்

    கண்ணன் கீதம் அருமையான கீதம். சிறு வயதில் தினமும் கோயிலில் ஒலித்துக் கேட்ட பாடல்

    வாழ்த்துகளுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் பிடித்தமான பாடல் இது..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  11. ஸ்ரீராமும் இதைத்தானே பகிர்ந்திருந்தார். அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..