நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 25, 2022

கிச்சா..

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இப்படித்தான்,
ஜூலை இருபதாம் தேதி மதிப்புக்குரிய கமலாஹரிஹரன்  அவர்களது சிரிப்பு டாக்டர் பதிவைப் படித்த பிறகு -

நம்ம கிச்சாவும் கிளம்பி விட்டான்..

" அதுசரி.. கிச்சா.. ன்னா யாரு?.. "

" கிச்சா தெரியாது?.. அதான்.. விஷ்ணு கேட்டரிங்.. ன்னு.. இந்தப் பக்கத்து கல்யாண வீட்ல எல்லாம் - இட்லி  பொங்கல் வெங்காயச் சட்னி  ரவாகேசரி அசோகா.. அவனோட ஸ்பெஷல் ஐட்டமே தஞ்சாவூர் தயிர் வடை தான்.. காலை டிபன்.. ல யே அசந்துடுவீங்க..  இதுக்கு மேல என்ன சொல்றது!.. இப்போ புரியுதா.. அவனே தான்!.. "


இதைக் கேள்விப்பட்ட பிறகு -

" எதைக் கேள்விப்பட்ட பிறகு?.."

" அதாங்.. கூட்டமா கூடி நின்னு சிரிக்கறது!.. "

" ஓ!.."

 " நாமும் கொஞ்சம் சிரித்து வைப்போமே.. வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாமே!.. நோய் இல்லை என்றால் அவஸ்தை இல்லை..
அவஸ்தை இல்லை என்றால் செலவு இல்லை.. செலவு இல்லை என்றால் பணம் மிச்சம்.. பைசா மிச்சம்!.. "

அகம் மகிழ்ந்து போனான் கிச்சா.. 

பூங்கா என்ற பெயரில் பூப்பதற்கு வக்கில்லாத ஏதேதோ வறட்டுச் செடிகள் சுற்றிலும் இருக்க நடுவில் கிழவர்களும் இளம் பெண்களுமாக பத்துப் பதினைந்து பேர்.. 

விலை உயர்ந்த காலணி, காலுறைகளுடன் யோகா வகுப்புக்கு வந்திருப்பது  மாதிரி படு இறுக்கமான உடுப்புகளுமாக இருந்தனர்..

இளம் பெண்கள் எல்லாருமே - டைட்ஸ், ஒற்றை T Shirt - என, நின்றிருந்தார்கள்.. 

துப்பட்டாக்கள் காணாமல் போயிருந்தன.. 

" அவ்வளவு தானா?.. " -  கிச்சா வியப்படைந்த வேளையில்,


 " பாஹ்.. பாஹ் " என்று எல்லாரும் சிரிக்கத் தொடங்கினர்.. வித்தியாசமான சத்தங்களால் நிறைந்தது அந்தப் பகுதி..

" எதற்கு வீண் வம்பு!..நாமும் சிரித்து வைப்போம்!.." - என, நினைத்துக் கொண்ட கிச்சாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்..

அவனுக்கு சிரிப்பு வரவில்லை.. கர்ர்ர்ர்.. புர்ர்ர்ர்.. - என்று சத்தங்கள் வந்தன..  சிரிப்பு மட்டும் வரவேயில்லை.. 

சிரிப்பில் 
உண்டாகும் ராகத்திலே..
பிறக்கும் சங்கீதமே!..

" சௌந்தர்ராஜன் அன்னைக்கு பாடி 
வெச்சதெல்லாம் பொய்யா.. கோப்பால்!.. "

அவனுக்கு அவன் மீதே சந்தேகம் வந்து விட்டது.. 

இடுப்பைப் பிடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்து - " ஆஹ்.. ஆ.. " - என்று சத்தமிட்ட அந்த விநாடியில் அப்படியே மல்லாக்க விழுந்தான் கிச்சா.. 

வானத்தில் பறப்பது மாதிரியும் கடலுக்குள் தலை கீழாகப் போவது மாதிரியும் இருந்தது.. 
ஒன்றும் புலனாகவில்லை..

கண் விழித்தபோது எதிரே
நரசிங்கம் மாதிரி மாமனார்.. அருகில் சாரதா - அழுத கண்களோடு.. அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டபடி பெரியவளும் சின்னவளும்..

ஏன் இப்படி என்று தன்னைத் தானே மெல்ல கவனித்தான்..

உடலெங்கும் அங்கே இங்கே என்று மெல்லிய குழாய்கள்.. எதற்கென்று தெரியவில்லை.. 

இந்தப் பக்கம் மேலேயிருந்து குளுகோஸ் சொட்டு சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது..

வேகமாக வந்த நர்ஸ் கையைப் பிடித்து நாடித் துடிப்பைக் கவனித்தாள்.. அட்டையில் எதையோ எழுதி வைத்து விட்டுப் போனாள்..

" ஏதோ.. பகவான் அனுக்ரஹம்.. நல்ல மனுஷங்க நாலு பேர் இருந்ததால.. இங்கே கொண்டு வந்து சேர்த்து இந்த மட்டுக்கு ஆச்சு.. இல்லே..ந்னா.. என்னென்னவோ ஆகியிருக்கும்!..  இந்தப் பெண் குழந்தைகளுக்கு யார் பதில் சொல்றது?.. உமக்கு வருத்தப்படற மாதிரி ஒரு கஷ்டமும் இல்லை.. அப்றம் எதுக்குங்காணும் சிரியோதெரபிக்குப் போகணும்?.. தூக்கத்துல சிரிக்கிறவங்களை பார்த்திருக்கேன்.. துக்கத்துல 
சிரிக்கிறவங்களையும் பார்த்திருக்கேன்.. மயக்கத்தில கிடக்கறப்போ சிரிக்கிற ஆளை இன்னிக்குத் தான் பார்க்கிறேன்..  "

" நான் சிரிச்சேனா.. மாமா!.. " - ஈனஸ்வரத்தில் கேட்டான் கிச்சா..

அவனுக்கு ஆச்சர்யம்.. 

" பின்னே வேற யாரு.. நானா?.. " - மாமனார் முகத்தில் புன்னகை..


டாக்டர் வந்தார்..

" மிஸ்டர்.. க்ருஷ்ண ஸ்வாமி.. உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லை.. எவ்ரி திங் ஈஸ் நார்மல்.. இன்னிக்கே வீட்டுக்குப் போய்டலாம்.. ரெண்டு நாள் ரெஸ்ட்ல இருங்க.. அது போதும்.. ஓக்கே!.. " 

சாரதா புன்னகையுடன் கைகூப்பினாள்..

" இனிமே அந்தப் பக்கம் போக மாட்டீங்களே!.. "

கிச்சாவும் புன்னகைத்தான்..

அதற்குப் பின்னால் வங்கிக் கணக்கில் இருந்து இருபத்து இரண்டாயிரம் ரூபாய் குறைந்திருந்தது..
*

வாழ்க நலம்
***

22 கருத்துகள்:

  1. கிச்சா சௌந்தரராஜன் அண்ணா பாடலை நினைவு படுத்திக் கொண்டதற்கு பதில் சந்திரபாபு மாமா பாடலை நினைவுபடுத்திக் கொண்டிருக்கலாம்!  "சிரிப்பு வருது..  சிரிப்பு வருது..  சிரிக்கச்சிரிக்க சிரிப்பு வருது..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவுக்கு கிச்சா யோசிக்கவில்லை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அல்லது ஒதுங்கி நின்று "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது போலியின் சிரிப்பு..   இங்கே நான் சிரிக்கும் புன்சிரிப்போ கேலியின் சிரிப்பு" என்று பாடிவிட்டு விலகி வந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி வலியது அல்லவா..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  4. கிச்சா - கிச்சு கிச்சு மூட்டினான் என்று எங்கள் வீட்டில் பல வருடங்களுக்கு முன் குழந்தைகளோடு விளையாடிய போது பெயருக்கு ஏற்ப வரிகள் சொல்ல வேண்டும் கிச்சா, பச்சை - பச்சு பச்சுன்னுஇருக்கு பார். இப்படிச் சும்மா விளையாடியது நினைவுக்கு வந்தது கிச்சா என்பதைப் பார்த்ததும்

    குழந்தைகளோடு கிச்சு கிச்சு மூட்டி விளையாடியிருக்கலாமோ!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிக தகவல்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  5. வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொல்லுவாங்க.இங்கே பொய்யாச் சிரிச்சு நோயாளி ஆனதுதான் லாபம்!::))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  6. கிச்சா வின் வரவு தொடரட்டும்.
    மருத்துவமனைக்கு அல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  7. பைசா மிச்சம் என்று போய் பைசாவை செலவழிக்க வைத்து விட்டாரே கிச்சா.
    வங்கி கணக்கு குறைந்து விட்டதே!
    கிச்சா நிறைய விஷயங்களை சொன்னார். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. மஞ்சளில் வந்தது இஞ்சியில் என்பார்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. கிச்சா சிரிச்சே மாட்டிக்கொண்டாரே :)
    பெரிதாக வர இருந்த நோய் சிரித்ததால் கழிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. நல்லவேளையா ஏதோ கொஞ்சம் செலவோட போச்சே கிச்சாவுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ நல்ல காலம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..