ஸ்ரீ கும்பேஸ்வரர், திருக்குடந்தை. |
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாஸக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
தேவமுனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாஸக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பரமபரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
லிங்காஷ்டகம் இதம் புண்யம் ய:படேத் சிவ ஸன்னிதெள
சிவலோகம் அவாப்னோதி சிவேன ஸஹ மோததே:
சிற்றறிவுக்கு எட்டியவரை......
நான்முகப் பிரம்மனும் முராரியாகிய மஹாவிஷ்ணுவும் தேவர்களும் அர்ச்சித்ததும், தூயசொற்களால் புகழ்வதற்கேற்ப பேரெழில் கொண்டு திகழ்வதும், பிறவிப் பெருந் துயர்தனை அழித்திடுவதுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
தகாதன செய்த மன்மதனின் அகந்தையை அழித்து தேவர்கள் மீது கருணை பொழிந்ததும், இராவணனின் செருக்கை அடக்கியதும், தேவரும் முனிவரும் வழிவழியாக வழிபடுவதுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
நறுமணம் மிகுந்து விளங்குவதும் புத்தி தெளிவடைவதற்கான காரணமாய் திகழ்வதும், தேவரும் அசுரரும் வணங்கி வழிபடுவதுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
பொன்னும் நவமணிகளும் பொலியத் திகழ்வதும், நாகபடங் கொண்டு விளங்குவதும், அகங்காரத்துடன் தட்சன் நடத்திய யாகத்தை அழித்ததுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
குங்கும சந்தனத்துடன் பொலிந்திடுவதும், அழகிய தாமரை மலர்களுடன் விளங்குவதும், தொல்வினையாகிய பாவத்தை அழித்திடுவதுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
அமரர்களும் கணங்களும் போற்றி வழிபடுவதும், அடைக்கலமாகிய அன்பர்களின் பக்திக்கு மகிழ்ந்து அருள்வதும், கோடி சூர்யப் பேரொளியுடன் திகழ்வதுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
எட்டு வகையான மலர்களைச் சூடிக் கொள்வதும், எல்லா பிறப்பிற்கும் காரணமாக விளங்குவதும், எட்டு வகையான தரித்திரங்களையும் அகற்றி அழித்திடுவதுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
தேவ நலங்களுக்காக தேவகுரு தொழுது வணங்குவதும், தேவலோகத்தின் பாரிஜாத மலர்களால் எந்நேரமும் அர்ச்சிக்கப்படுவதும், அனைத்திலும் உயர்ந்து மேன்மை மிக்க பரம்பொருளாகத் திகழ்வதுமாகிய - சிவலிங்கம் தனை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றுகின்றேன்!...
புண்யமிக்க லிங்காஷ்டமாகிய இதனை - சிந்தையில் கொண்டு ஒரு மனதுடன் சிவசன்னதியில் உரைப்பவர் சிவபதம் எய்தி - பெருமானுடன் கலந்து இனிதே இருப்பர்.
'' ஓம் நம சிவாய... சிவாய நம ஓம் ''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..