நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 28
வெள்ளிக்கிழமை
தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்
இன்று
கார்த்திகை தீபம்
இறைவன்
ஸ்ரீ அண்ணாமலையார்
அம்பிகை
ஸ்ரீ உண்ணாமுலையாள்
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த
திருப்பதிகம்
முதல் திருமுறை
திருப்பதிக எண் 10
உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ணம் அறுமே. 1
தேமாங்கனி கடுவன்கொள
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி
நினைவார்வினை யிலரே. 2
வெம்புந்திய கதிரோன்ஒளி
விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன்
அண்ணாமலை அதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ
குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர்
அடிபேணுதல் தவமே.. 11
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்
புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று
மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின்ற திரவெருவித் தொறுவின்
நிரையோடும்
ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 1
எனைத்தோரூழி யடியாரேத்த
இமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும்
நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன்
கைமேல்குழல்ஊத
அனைத்துஞ் சென்று
திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே. 6
அல்லாடரவம் இயங்குஞ்சாரல்
அண்ணாமலையாரை
நல்லார் பரவப்
படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான
பத்தும் இவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்
வணங்க மன்னிவாழ்வாரே.. 11
திருநாவுக்கரசர்
அருளிச் செய்த
திருப்பதிகம்
ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 4
வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு அண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.. 1
மத்த னைம்மத யானையு ரித்தவெஞ்
சித்த னைத்திரு அண்ணா மலையனை
முத்தனை முனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.. 3
அரக்க னையல றவ்விரல் ஊன்றிய
திருத்தனைத் திரு அண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.. 10
ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 4
பட்டி ஏறுகந் தேறிப் பலஇல்லம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே..1
தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.. 5
மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையு நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின் அண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.. 10
மாணிக்கவாசகர்
அருளிச் செய்த
திருவாசகம்
எட்டாம் திருமுறை
திரு அம்மானை
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.. 2
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.. 10
திருக்கார்த்திகை தின வாழ்த்துகள். ஓம் முருகா....
பதிலளிநீக்குதங்களுக்கு நல்வரவும் நல்வாழ்த்துகளும்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
திருக்கார்த்திகை சிறப்பான பகிர்வு. படங்களும் அழகு சேர்க்கின்றன.
பதிலளிநீக்குஅண்ணாமலையானை வணங்கி அனைவர் நலனையும் காக்க வேண்டுவோம்.
தீபத் திருக் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்
நீக்குமகிழ்ச்சி.. நன்றி மாதேவி..
படங்களும், பாடல்களும் அருமை.
பதிலளிநீக்குதீபத்திருநாள் வாழ்த்துகள்.
எட்டாம் திருமுறை பாடலை பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன்.
தீபத் திருக் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்
நீக்குமகிழ்ச்சி.. நன்றி
நலமே வாழ்க
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இப்போது தங்கள் உடல்நிலை பூரண நலமடைந்து விட்டதா?
திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். திருப்தி பாடல்கள் நன்றாக உள்ளது. இறைவன் அனைவரையும் நலமுடன் காத்தருள பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் தற்சமயம் நலமே..
நீக்குதீபத் திருக் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி.. நன்றி என்றென்றும்