நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 4
வியாழக்கிழமை
குறளமுதம்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.. 19
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று
அதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 4
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே.. 4
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 4
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
தென்னாடுடைய சிவனே போற்றி. ஹரி ஓம் நம.
பதிலளிநீக்குஅன்பின்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
ஹரி ஓம்
நம சிவாய
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
வாழ்க வையகம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஜி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பாசுரத்திற்கேற்ற இன்றைய குறளமுதத்தை ரசித்தேன். கோதை ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடல் அமுதம். மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பாடலை பாடி மெய்யுருகினேன். ஸ்ரீ மன் நாராயணரும், எம்பிரான் ஈசனும் அனைவரையும் காத்திட வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
தங்கள் உடல்நலம் நன்றாக உளளதா? உடம்பை பத்திரமாக கவனித்துக் கொள்ளவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா
ஹரி ஓம்
நம சிவாய
படங்கள் அருமை
பதிலளிநீக்குபாடல்களை பாடி வணங்கி கொண்டேன்.
தங்கள்
நீக்குஅன்பின்
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
ஹரி ஓம்
நம சிவாய
ஆழி மழைக் கண்ணனையும் , கயிலை நாதனையும் தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்கு