நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 14
ஞாயிற்றுக்கிழமை
குறளமுதம்
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.. 67
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.. 14
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருவெம்பாவை
ஒண்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். . 4
ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்
வந்தமண லால்இலிங்கம்
மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந்
தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ்
சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான்
கோளிலி எம்பெருமானே. 4
ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்
குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம்புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டையந் தடங்கண் உமை நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வறே. 4
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
இன்றைய திருப்பாவை, திருவெம்பாவை, மற்றும் கோளிலி திருப்பதிகம், ஏகம்பத்திருப்பதிகம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு
நீக்குமகிழ்ச்சி
நன்றி
நலம் வாழ்க..
ஓம் ஹரி ஓம்
என்ன இன்று பதிவு சற்றே தாமதமோ....
பதிலளிநீக்குகாலை என்பது மாலை என - மாறி இருந்திருக்கின்றது...
நீக்குஅன்பின் வருகைக்கு
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
நலம் வாழ்க..
ஓம் ஹரி ஓம்
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஅன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றி மாதேவி
ஓம் ஹரி ஓம்