நாடும் வீடும்
நலம் பெற வெண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 25
செவ்வாய்க்கிழமை
செவ்வாழை
பூவன் பழங்களைப் போலவே - சிறப்பு வாய்ந்தது செவ்வாழை..
தமிழகத்தின் தென்கோடி மற்றும் கேரளப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றதாகும்...
கண் நோய் முதற்கொண்டு பற்பல பிரச்னைகளுக்குத் தீர்வு ஆகின்ற கனி தான் செவ்வாழை.
மூளை , இதயம், கல்லீரல், எலும்புகள் வலுவடைகின்றன..
குடல் இயக்கம் முதற்கொண்டு உடலின் அனைத்து செயல்பாட்டிற்கும் அவசியமான சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன..
செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சீறுநீரகங்களில் கற்கள் ஏற்படாமல் தடுக்கின்றது..
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கத் தேவையான இரும்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் செவ்வாழைப் பழத்தில் நிறைந்துள்ளது..
செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6 மூளையில் செரோடோனின் எனும் ஹார்மோன் அளவை அதிகரிக்கின்றது..
தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு - நல்ல மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் செவ்வாழைக் கனியை உண்பதால் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும் நல்ல மாற்றத்தை உணரலாம்..
உணவிற்கு முன்பாகத் தான் இக்கனியை உண்ண வேண்டும் என்பதை மறத்தலாகாது..
(தொகுப்பு : நன்றி விக்கி)
நானும் பொதுவாக - வாழைப்பழம் குறித்த அச்சத்தில் தான் இருந்தேன்..
ஆசை தீரப் பூவன் பழங்கள் தின்று மூன்று வருடங்கள் ஆகியிருக்கின்ற நிலையில் சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி செவ்வாழைக் கனியின் பக்கம் இப்போது தான் வந்திருக்கின்றேன்..
இப்போது செவ்வாழையின் பக்கம் பெருமளவில்
மக்கள் வருவதைக் கண்ட ஏவாரிகள் விலையை அதிகமாக்கி விட்டு பழங்களையும் எடையிட்டு விற்க ஆரம்பித்து விட்டனர்...
வாழ்க செவ்வாழைக்கனி..
ஃஃ
ஓம் சிவாய நம ஓம்
***
சென்னையில் ரொம்ப நாட்களாகவே வாழைப்பழம் எடைபோட்டுத்தான் விற்பனை!
பதிலளிநீக்குவாழைக்காயும் அவ்வண்ணமே!
அட, மாங்காய் கூட!
எங்கும் இப்படித் தான்... ஆனாலும்
நீக்குஇது முறையல்ல...
மாங்காயை எண்ணிக்கை யில் தான் தோப்பு உரிமையாளரிடம் வாங்குகின்றனர்..
வாழைக்காய்கள் தார் (குலை) கணக்கில் தான்!..
ஏவாரிகள் நம்மிடம் விற்பது மட்டும்
எடை கணக்கில் என்றால் மகமாயி தான் கேட்க வேண்டும்..
நானும் சமீப காலமாகத்தான் செவ்வாழை சாப்பிடுகிறேன். அதென்னவோ சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துதான் பழம் சாப்பிடத் தோன்றுகிறது!
பதிலளிநீக்குசெவ்வாழைப் பழத்தை உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகத் தான் சாப்பிட வேண்டுமாம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
செவ்வாழைப்பழம் இங்கு 60-80 ரூ கிலோ. இது நல்லது என்று தெரியும். மாங்காய் சுமார் 60 ரூ கிலோ
பதிலளிநீக்குசெவ்வாழைப்பழம் வாங்கி நாளாகிவிட்டது. நாளை வாங்கணும்
பதிலளிநீக்குசெவ்வாழை நல்ல தகவல்.
பதிலளிநீக்குஇங்கு இப்பொழுது செவ்வாழை முன்பு போல இனிப்பதில்லை. பிஞ்சாகவே ஆய்ந்து பழுக்க வைக்கிறார்களோ என்ற சந்தேகம்.