நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 18, 2024

மார்கழி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 3 
புதன்கிழமை

குறளமுதம்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.. 14


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.. 3
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்


ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே.. 3

ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 3
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி மகிழ்வோம் ...ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாச்சியார் திருவடிகளே சரணம்

      அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி

      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆண்டாள் சரணம்

      அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி

      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய ஸ்ரீ ஆண்டாள் பாசுரமும், திருப்பள்ளியெழுச்சி பாடலும், திருநாவுக்கரசர் இறைவனை நோக்கி துதித்த பாடலும் அருமையாக உள்ளது பாடி பரவசமடைந்தேன். கயிலை நாதனின் அடி பணிந்து போற்றுவோம். கோதை நாச்சியார் இயற்றிய பாடலைப் பாடி அவர் அடி பணிந்து வணங்குவோம்.
    ஓம் ஹரி ஓம்.
    ஓம் சிவாய நம ஓம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாச்சியார் திருவடிகளே சரணம்

      அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      ஹரி ஓம்
      நம சிவாய

      நீக்கு
  4. உலகளந்த உத்தமன் புகழ்பாடி அவனருள் வேண்டுவோம்.

    திருப்பெருந்துறை சிவனே போற்றி...போற்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..