தாயின் தலைவலி தீர்க்கும் புலிப் பாலுக்காக புலியைத் தேடி கானகத்துக்குப் புற்ப்பட்ட போது முதன்முதலில் இருமுடி கட்டப்பட்டது..
முதன் முதலில் இருமுடியைக் கட்டியவர் பந்தளத்தின் மன்னர் ஸ்ரீ ராஜசேகர பாண்டியன்..
ஏந்திக் கொண்டவர் ஸ்ரீ மணிகண்ட மகா ப்ரபு..
கோயில் காணிக்கை வைக்கப்படுகின்ற பகுதி முன் முடிச்சு எனவும் நமக்கான பொருட்களை வைக்கின்ற பகுதி பின் முடிச்சு எனவும் சொல்லப்படும்... இதனுள் வைப்பதற்கு மூன்று ஐந்து - என, சிறுசிறு உள் பைகளும் உள்ளன..
இருமுடிப்பையின் நீள அகல விவரங்கள் :
நீளம் இரண்டரை அடி. அகலம் ஒன்றே கால் அடி..
நடுவில் ஒரு அடி அகலத்தில் திறப்பும் இருக்க வேண்டும்.
இருபக்க ஓரங்களிலும் கயிறு இருப்பது அவசியம்..
முன்முடியின் உள் பையில் ஐயப்பனுக்கான முத்திரை நெய்த் தேங்காய்.. இதனுடன் பச்சரிசி..
தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காயின் கண் திறந்து புத்துருக்கு நெய் நிறைப்பதற்கும் விதிமுறைகள் உள்ளன.. அவற்றை வேறொரு சந்தர்ப்பத்தில் காண்பதற்கு ஐயன் அருள்வானாக.
இருமுடியின் அடுத்தடுத்த உள் பைகளில் -
விபூதி, குங்குமம், மஞ்சள் பொடி, , கற்பூரம், சாம்பிராணி, சந்தன வில்லைகள், பன்னீர், தேன், பேரீச்சம்பழம், உலர் திராட்சை, முந்திரி, கற்கண்டு, வெல்லம், அவல் கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு ஆகியன வைக்கப்படும்..
மளிகைப் புறத்து அம்மனுக்கு வே ண்டுதலின் பேரில் ரவிக்கைக் துணி, வளையல்கள், சீப்பு, ஆகியவையும் இடம் பெறும்..
பின் முடியில் நமது உணவுக்கென பச்சரிசி, சிறு பயறு, வெல்லம் மற்றும் இதர சில பொருட்களும் வைக்கப்படும்..
அப்போதெல்லாம் மலைக் காட்டுக்குள் நடை பாதையை அனுசரித்து விரி, தாவளம் என்று பக்தர்கள் தங்கி இளைப்பாறவும் அங்கே சமைத்துச் சாப்பிடவும் வசதிகள் இருந்தன...
(1990, 1991 ஆகிய இரண்டு வருடங்களில் எங்கள் குருசாமி அங்கே பொங்கல் வைத்து நிவேதனம் செய்திருக்கின்றார்.)
கால ஓட்டத்தில் சில அசம்பாவிதங்கள் அங்கே ஏற்பட்டதால் இப்போது சபரி மலையில் பக்தர்கள் சமைப்பதற்கு அனுமதி இல்லை..
பாதுகாப்பான உணவகங்கள் தான் இப்போது..
பதினெட்டுப் படிகளைக் கடந்து ஸ்வாமி தரிசனம் செய்த பின் -
நெய்த் தேங்காயை உடைத்து நெய்யை அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும்..
உடைக்கப்பட்ட தேங்காயின் ஒரு மூடியை அங்கே எரிந்து கொண்டிருக்கின்றகற்பூர ஆழியின் அக்னியில் சேர்த்து விட வேண்டும்.
நெய்த் தேங்காயின் மறு மூடியையும் ஒரு கைப்பிடி அரிசியையும் தேன், பேரீச்சை முந்திரியையும் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து வரவேண்டும்..
ரவிக்கைத் துணி, மஞ்சள் தூள் வளையல்கள் சீப்பு - இவற்றை மாளிகைப் புறத்து அம்மனுக்கு சமர்ப்பித்து பிரசாதமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்..
நாகராஜருக்கும் தேவதைகளுக்கும் மஞ்சள் தூள் சேர்ப்பித்து பிரசாதமாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
கற்கண்டை அதற்கான பெட்டியில் சேர்த்து விட்டு அங்கிருந்து சிறிதளவு வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
இது நியதி என்றாலும் பக்தர்கள் சுமந்து வந்த விபூதி குங்குமம் சந்தனம் போன்றவற்றை ஒன்று கலந்து குழுவினர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவார் எங்கள் குருசாமி..
பதினெட்டுப் படிகளில் ஏறுவதற்கு முன்பாக தேங்காய் அடித்து உடைத்ததைப் போல இறஙகும் போதும் தேங்காய் உடைத்து விட்டு,
மலை இறங்கி இல்லத்திற்குத் திரும்பி பூஜை செய்து மாலை கழற்றியதும் விரதம் நிறைவு பெறுகின்றது..
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
இருமுடி குறித்த மற்றுமொரு கருத்து:
அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி...
- என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு..
பாவம் என்பது நமக்கானது..
விரத காலத்தில் நமது - நல்லொழுக்கம் பிரார்த்தனை - இப்படியான தவத்தால் (பின் முடியில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விடுவதைப் போல) தீர்ந்து விடுவது..
அறம் என்பது புண்ணியம்..
இறைவனுடன் நம்மைச் சேர்த்து வைப்பது..
இதுவே இருமுடி தாங்குதலின் தத்துவம்..
ஃ
ஹரிஹர புத்ராய புத்ர லாபாய
சத்ரு நாசனாய மத கஜ வாகனாய
மஹா சாஸ்த்ரே நமோ நம
ஃ
இன்னும் எழுதலாம்.... மார்கழிப் பதிவுகள் அழைக்கின்றன..
சுவாமியே சரணம் ஐயப்பா...
பதிலளிநீக்குஇருமுடி பற்றிய விவரங்களும் மலைப்பாதை பற்றிய விவரங்களும் எப்போதுமே படிக்கப் படிக்க திகட்டாதவை.
பதிலளிநீக்குஇருமுடி, ஐயப்ப விரதம் ஆகியவற்றை நன்றாக்க் குறிப்பிட்டுள்ளீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சபரிமலை செல்வதால் ஏற்படும் நன்மைகளையும், விரதமிருந்து இருமுடி கட்டிச் செல்லும் விபரமும் நன்றாக உள்ளது. இவ்வளவு விபரமாக சொல்லி கேட்டதில்லை. பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற உணர்வோடு, அது பெரும் பாவத்தை தரும் என்ற எண்ணங்களோடு ஆனால் அவர் மேல் பக்தியோடு வளர்ந்து விட்டோம். இறுதியில் நீங்கள் பகிர்ந்த ஸ்லோகம் சொல்லி, தினமும் ஐயப்பனை வழிப்பட்டதோடு சரி. ஏனெனில் நாங்கள் அவர் அருளினால் பிறந்தவர்கள் என்ற எண்ணத்தை எங்கள் அப்பா அடிக்கடி ஊட்டி வளர்த்திருக்கிறார். உங்களின் இன்றைய தொகுப்பு நன்றாக இருக்கிறது. மேலும் நீங்கள் ஐயப்பனின் அருளை பெற்ற சம்பவங்களை அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குஇருமுடி , மற்ரும் விரத விவரங்கள். கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் விவரம் மிக அருமை.
நன்றி.
இருமுடி கட்டிச் செல்லும் முறையும், ஐயப்ப விரதம் பற்றியும் நன்றாக கூறியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குசுவாமியே சரணம் ஐயப்பா.