நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 10
வெள்ளிக்கிழமை
தஞ்சை
(ராஜராஜேஸ்வரம்)
திருப்புகழ்
(படங்கள் இணையத்தில் இருந்து)
தஞ்சை முருகப்பெருமான் |
தந்தன தானன ... தனதான
அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையில் ... அலைவேனோ
விஞ்சுறு மாவுனது ... அடிசேர
விம்பம தாய் ... அருளாயோ..
நஞ்சமு தாவுணும் ... அரனார்தம்
நன்கும ராஉமை ... அருள்பாலா
தஞ்சென வாம்அடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
வேல் போன்ற விழிகளில்
மை எழுதி விளங்கும்
பாவையரின் மயக்கத்தில்
அலைந்து திரிவேனோ?..
இதனின்று மாறுபட்டு
உனது திருவடிகளில்
நான் அன்பு கொள்வதற்கு
அருள் ஒளி என, - எம்பெருமானே
கருணை புரியக்கூடாதோ?..
நஞ்சினை அமுதமாக உட்கொண்ட
சிவபெருமானுடைய
திருக்குமரா..
உமாதேவி அருளிய பாலனே..
நீயே தஞ்சம் என துதிக்கின்ற
அடியவர்கள் வாழ்வதற்காக
தஞ்சையில் வீற்றிருக்கின்ற
பெருமாளே...
**
பெரிய கோயிலில்
விஜயதசமி விழா
(நன்றி திருவையாறு.in)
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய
திருச்சிற்றம்பலம்
***
ஏவப்பட்ட அம்பை விஜயகாந்த் போல தாவிப் பிடிக்கிறார்கள் மக்கள்! காணொளி அழகு. திருப்புகழ்ப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம் ..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
வாழ்க வையகம்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
விஜய தசமி விழா காணொளி பகிர்வுக்கு நன்றி. திருப்புகழ் பாடலை பாடி முருகபெருமானை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குவாழ்க வையகம்..
காணொளி விழா அருமை.
பதிலளிநீக்குமுருகா சரணம்.
முருகா சரணம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி ..
விஜய தசமி விழா காணொளி நன்றாக இருக்கிறது, அம்பு வருவதை மக்கள் குதித்துப் பிடிக்கறாங்க! எங்கள் ஊர்ப்பாக்கங்களில் இறைவன் வேட்டைக்குப் போவதாக இப்படிச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். திருப்புகழ் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குகீதா
இங்கே சில கோயில்களில் வாழை வெட்டுவார்கள்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ ..
பல வருடங்களுக்குப் பின்னர் அம்பு போடுவதைக் காணக் கிடைத்தது. இங்கே காட்டழகிய சிங்கர் கோயிலில் நம்பெருமாள் வன்னிமரத்தடியில் வருடா வருடம் அம்பு போட்டாலும் கூட்டம் காரணமாகப் போவதில்லை. மதுரையில் இருக்கையில் பார்த்தது தான்.
பதிலளிநீக்குஎனக்கும் சில ஆண்டுகளாக இந்த வைபவம் காணக் கிடைக்கவில்லை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா ..
முருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..