நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 06, 2023

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 19 
வெள்ளிக்கிழமை

இன்று 
திருச்செங்கோட்டுத் திருப்புகழ்

திருச்செங்கோடு

தத்தன தத்தன தத்தன 
தத்தன தத்தன தத்தன ... தனதான
 
 நன்றி இந்து தமிழ்
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு 
பட்சிந டத்திய ... குகபூர்வ

பச்சிம தட்சிண உத்தர திக்குள 
பத்தர்க ளற்புத ... மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி 
ருப்புக ழைச்சிறி ... தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தரி 
சித்தவ நுக்ரக ... மறவேனே..

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி 
கற்கவ ணிட்டெறி ... தினைகாவல்

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி 
கட்டிய ணைத்தப ... நிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத 
கப்பனு மெச்சிட ... மறைநூலின்

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய 
சர்ப்பகி ரிச்சுரர் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 
திரு செங்கோட்டு வேலன்

மெய்யடியார் 
திருக்கூட்டத்தின் மீது 
அன்புடையவனே..
 ஆடும் மயிலை
வாகனமாகக் கொண்டு 
உலவுகின்ற குகனே!..

கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு - என,
 நாலா திசைகளிலும் உள்ள அன்பர்கள் அற்புதம் என, வியந்து கொண்டாடுகின்ற
சித்ரகவி சந்தத்தின் இசை மிகுந்துள்ள
திருப்புகழை அடியேனும் சிறிதளவாவது 
சொல்லும்படியாக வைத்து,

அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்ததையும்
எனக்குத் தரிசனம் அளித்த அருளையும் ஒரு நாளும் அடியேன் மறக்க மாட்டேன்..

கத்தித் திரிகின்ற கிளிகள் களைத்து விழும்படி
கவணில் கல் வைத்து சுழற்றி எறிகின்ற

தினைப் புனக் காவலைக்
கற்றவளாகிய குற மகள் வள்ளி நாச்சியாரின்
அழகிய கழுத்தினைக் கட்டி அணைத்தவனே..
பன்னிரு தோள்களை உடையவனே..

அம்பிகையைத்
தனது இடப்பக்கத்தில் வைத்த
 சிவபெருமான் மெச்சும்படி
வேத நூலின் மெய்ப்பொருளினை   
உபதேசித்து உணர்த்தியவனே..

நாகமலை எனப்படும் 
திருச்செங்கோட்டில் வாழும், 
தேவர்கள் பெருமாளே..
*
முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்... முருகனின் கருணை.

    பதிலளிநீக்கு
  2. பல்லுடைக்கும்படியான சந்தம். அதை நீங்கள் எளிய தமிழில் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் எனது பங்கு விளக்க உரையை எளிமைப்படுத்தியது தான்..

      மிகவும் எளிய சந்தம் தான்.. தாளக்கட்டுடன் பழகினால் மனதில் பதிந்து விடும்..

      முருகா.. முருகா..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருப்புகழை வாசிக்க நேரிடும் போதெல்லாம் தாளம் போட்டுப் பாடிப் பார்ப்பது வழக்கம் அப்படி இதையும்....பிரித்து தாளம் போட்டுப் பாடிப் பார்த்தேன். இப்படிப் பாடிப் பார்ப்பது பேசும் போது திக்குபவர்களுக்குக் கூட இயல்பாகப் பேச்சு அமையவைத்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திக்குபவர்களுக்குக் கூட இயல்பாகப் பேச்சு அமைந்து விடும்..

      உண்மை தான்..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  4. திருப்புகழை பாடி வணங்கி கொண்டேன், திருச்செங்கோட்டு வேலவனை.

    பதிலளிநீக்கு
  5. முருகா சரணம். அவன் பாதம் பணிவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..