நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 13, 2023

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 26
 வெள்ளிக்கிழமை

இன்று 
திருக்கழுக்குன்றத் திருப்புகழ்
 

தான தத்த தான தத்த தான தத்த ... தனதான
தான தத்த தான தத்த தான தத்த ... தனதான

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ... மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ... முடிதோய

ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ... புயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ... புகல்வாயே..

காது முக்ர வீர பத்ர காளி வெட்க ... மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ... யிமையோரை

ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ... முனிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


வேதகிரி என்று விளங்குகின்ற திருக்கழுக்குன்றத்திலும்,
வள்ளிமலையின் தினைப் புனத்திலும்  
பேரழகுடன் வீற்றிருப்பவனே,

குறமகளாகிய வள்ளி நாயகியின் பாதத்
தாமரையின் மீது செந்நிற வெட்சி மாலை திகழ்கின்ற திருமுடி படும்படி காதலித்து, தினைப் புனத்துள் புகுந்தவனே 
பன்னிரு தோள்களை உடையவனே..

உன்னிடம் உளம் கொண்டு நான் வழிபாடு செய்யும் படிக்கு
நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுத்து 
எனக்கு அருள் புரிவாயாக...

உக்ரத்துடன் வெகுண்டு வந்த வீர பத்ர காளியானவள்
நாணம் அடையும்படி தமது கிரீடம் வானில் முட்டும்படி ஊர்த்துவ தாண்டவம் ஆடியவரும் 

பக்தியுள்ள தேவர்களுக்கு
வேதங்களைக் கற்பித்தவரும் 
ஆகிய சிவபெருமான் -

உன்னிடம் பாடம் கேட்கவும்
(ஈசனால்) ஓதுவிக்கப்பட்ட 
பிரம்மன் நாணம் அடையவும்,

ஓரெழுத்தாகிய  ஓங்காரத்திற்குள் 
ஆறெழுத்தாகிய  சரவணபவ எனும் 
மந்திரத்தை உபதேசித்த பெருமாளே...
**

முருகா முருகா
முருகா முருகா..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. அருணா கிரிநாதரால் எப்படிதான் இப்படி கடபுடவென்று வார்த்தைகளை அமைத்து பாடமுடிந்ததோ...   முருகன் அருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தைத் தரு - என்று, திருப்புகழ் பாடுதற்கு அருள் புரிந்தவன் முருகன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    2. திருமுருகாற்றுப் படையிலும் இப்படித்தான் உச்சரிப்புக் கடினமாக வரும். அதை எல்லாம் படிச்சுட்டு இப்போப் பார்த்தால்! குமட்டுது! தமிழா இப்போவெல்லாம்.

      நீக்கு
    3. நன்றாகச் சொன்னீர்கள்..

      இப்போதைய தமிழ் பற்றி ஒரு பதிவே எழுதலாம்..

      நீக்கு
  2. திருக்கழுக்குன்றம் தரிசித்திருக்கிறேன்.
    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருப்புகழை பாடி திருக்கழுக்குன்றம் முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருக்கழுக்குன்ற முருகப் பெருமானின் திருப்புகழும் அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. பாடி மகிழ்ந்தேன். முருகனை தரிசித்துக் கொண்டேன். அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தமிழ் படிக்கவும் எழுதவும் கொடுத்து வைச்சிருக்கணூம். நவராத்திரிப் பதிவுகள் வரக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..