நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 17, 2023

கங்கா காவிரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 30
செவ்வாய்க்கிழமை

மங்களகரமான
நவராத்திரியின்
மூன்றாம் நாள்..

நாளை ஐப்பசி முதல் நாள்..
காவிரியுடன்  கங்கை  -  துலா மாதம் முழுதும் கலந்திருப்பதாக ஐதீகம்..

இவ்விரு நதிகளையும் கன்னியராக பாவித்து வணங்குவது பாரதத்தின் பன்பாடு..

இப்படியான துலா மாதத்தில் இவ்வாண்டின் நவராத்திரி வைபவம் இலங்குவது சிறப்பு..


இந்த வைபவம் காவிரி நதி தீரம் முழுதும் கொண்டாடப்பட்டாலும்  சிறப்புற்று விளங்குவது மயிலாடுதுறையில்..


சக்தி லீலை 3

அம்பிகை மயில் உருவாகி ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாடுதுறையில் ஐயன் மயூரநாதர்..
அம்பிகை அஞ்சொலாள் அபயாபிகை..

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறையில் முன் நிகழ்ந்த சம்பவம்..

நாளும் அம்பிகையை தரிசித்து வந்த சிறுவன் ஆண்டுகள் கடந்து வயது முதிர்ந்த நிலையில்  ஒருநாள்,  அர்த்த ஜாம பூஜை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய போது வழில் இடறி விழுந்தார்.. 

அவர் நல்லாத்துக்குடி கிருஷ்ண ஐயர்.. 

அம்மா!.. - என்ற குரல் கேட்ட அம்பிகை - கையில் தீபத்துடன் அபயம் அளித்து வீடு வரை துணைக்கு வந்தாள்.. 

அதன் பின் ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது அவருடன் விளக்கொளி கூடவே வந்திருக்கின்றது..

இதனால் மனம் நெகிழ்ந்த கிருஷ்ண ஐயர் -  அம்பிகையின் பெயரில் இயற்றியதே அபயாம்பிகா சதகம்..

இவ்விதமாக -
அமிர்தகடேஸ்வரர் வீற்றிருக்கும் திருக்கடவூரில் சுப்ரமண்ய பட்டரின் உயிர் காத்து ஒளி காட்டி  நின்றவளே அபிராமவல்லி..


ஐப்பசி முழுதும் 
கங்கை காவிரியுடன் 
கலந்திருக்கின்றாள்..
காவிரியில் துலா முழுக்கு..

கங்கா காவிரியை வணங்கி 
பாமாலை ஒன்று

கங்கையவள் தானுவந்து 
காவிரியில் கலக்கின்றாள்
காவிரியும் கண் மலர்ந்து
கங்கையுடன் களிக்கின்றாள்..

வானவரும் வணங்கி நிற்க
வளம் எல்லாம் குவிக்கின்றாள்
வாழ்க வையம் வாழ்க என்று
வாழ்த்தி நலம் இசைக்கின்றாள்..

வீணையடி நீ எனக்கு என்று 
அவள் சிரிக்கின்றாள்
மெல்லிசையும் நானுனக்கு என்று 
இவள் நகைக்கின்றாள்..

கங்கையுடன் காவிரியாள் 
களித்திருக்கும் வேளையிலே
கைகூப்பி வணங்கிடுவோம்
காரிருளும் விலகிடவே..

தென்புலத்தைத் தேடி வந்த
தெய்வ மகள் வாழ்க என்று
திருவிளக்கு ஏற்றி வைத்து
தீந்தமிழில் பாடுகின்றார்..


வானளந்த மாயோனும்
தானளந்த பூமியிலே
கானளந்த கங்கை தன்னை
தேனளந்து வாழ்த்துகின்றார்..

பிறை முடித்த பெருமானின்
சடைமுடிக்குள் நின்றவளே
நிறை வாழ்வு எமக்கருளி
குறை எல்லாம் தீர்த்திடுவாய்..

காவிரியாள் வளர்த்தெடுத்த
பிள்ளைகளாய் 
போற்றுகின்றோம்..
கங்கையவள் தாள் வாழ்க வாழ்க 
என்று
வாழ்த்துகின்றோம்!..
**
ஓம் 
கங்கா தேவி 
போற்றி போற்றி..
காவிரித் தாயே 
போற்றி போற்றி..

ஓம் சக்தி ஓம்

நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

20 கருத்துகள்:

  1. பாமாலை அருமை. தேவியைச் சரணடைந்து ஈசனைப் போற்றுவோம் இன்னல்களைக் களைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. உங்கள் பாமாலை சூப்பர். இந்த மாதம் ஶ்ரீரங்கபட்டினத்துக்கு துலா ஸநானத்துக்குச் செல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் இனிதாய் அமையட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை நீங்கள் இயற்றிய பாமாலை அருமையாக உள்ளது. தேவியை துதித்து பாடி மகிழ்ந்தேன்.உலக மாந்தருக்கெல்லாம் அம்மையும், அப்பனுமாக விளங்கும் ஈசனையும், உமாமகேஸ்வரியும் இந்த நன்னாளில் வணங்கி துதிப்போம். ஓம் சக்தி ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்மையும் அப்பனும் என்று சொல்லிவிட்டு உமாமகேஸ்வரி ஈஸ்வரன் என எழுதுவதற்குப் பதில் மாற்றி எழுதிவிட்டாரே.... இரண்டும் ஒன்றான தாயுமானவனை எப்படி எழுதினால் என்ன என நினைத்திருப்பார்.

      நீக்கு
    2. @ கமலா ஹரிஹரன்..

      தங்கள் வருகையும்
      அன்பான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
    3. @ நெல்லை..

      இரண்டும் ஒன்றான தாயுமானவனை எப்படி எழுதினால் என்ன!..

      அவனே அவள்
      அவளே அவன்..

      மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. ஓம் சக்தி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. பாமாலை அருமை, துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சக்தியை போற்றி வணங்கும் பாடல் அருமை.
    கங்கை காவிரி அன்னைகளை வணங்கிப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும்
      அன்பான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  7. மயிலாடுதுறை நினைவுகள் வந்து போனது.
    அபயாபிகை சதகம் வீட்டில் இருந்தது, முன்பு படிப்பேன் அப்புறம் படிக்காமல் போய் விட்டேன். தேட வேண்டும்.
    நவராத்திரி காலங்கள் அந்த கோவிலுக்கு போனதும், ஐப்பசி திருவிழாவும் நினைவில்.

    உங்கள் பாமாலை மிக அருமை . பாமாலையை பாடி அன்னையை வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாமாலையை பாடி அன்னையை வேண்டிக் கொண்டேன்..

      தங்கள் வருகையும்
      அன்பான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி..

      நீக்கு
  8. அருமையான பாமாலையுடன் கூடிய சிறப்பான பதிவு. மதுரை மீனாக்‌ஷி கோயில் நவராத்திரி நினைவுகள் முட்டி மோதுகின்றன. இங்கே எந்தக் கோயிலுக்கும் கூட்டம் காரணமாகப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இங்கே எந்தக் கோயிலுக்கும் கூட்டம் காரணமாகப் போவதில்லை... ///

      இங்கேயும் அப்படித்தான்..

      தங்கள் வருகையும்
      அன்பான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      ஓம் சக்தி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..