நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 08, 2023

குங்குமம் நீயே..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 21
ஞாயிற்றுக்கிழமை


சொல்லரும்பு தானெடுத்து
நல்லரும்பு தான் தொடுத்து
கண்மலரும் தான் களிக்க
தாள்மலரில் சூட்டினனே..

அம்மா உன் சீரெடுத்து
அன்பான நூலெடுத்து
அத்தனையும் நான் தொடுக்க
அருள் தர வேண்டினனே..

அன்னை தந்தையும் நீயே நீயே
அருள் தருவாயே மகமாயி
உயிரும் நீயே உறவும் நீயே 
உறுபிணி தீர்ப்பவள் நீயே நீயே..

அமுதும் நீயே தமிழும் நீயே
அருள் புரிவாயே ஓங்காரி
வாழ்வும் நீயே வளமும் நீயே
வரந்தருவாயே மகமாயி..

பொங்கும் மங்கலம் நீயே நீயே
புதுநலம் தருவாய் மகமாயி
பூதங்கள் ஐந்தும் நீயே நீயே
புன்மை தவிர்ப்பாய் ஓங்காரி..


கற்பகம் நீயே அற்புதம் நீயே
நற்றுணை வருவாய் மகமாயி
கோவிந்த கொற்றவை நீயே நீயே
குற்றம் பொறுப்பாய் நீயே நீயே..

குங்கும மஞ்சள் நீயே நீயே
மங்கல நாயகி நீயே நீயே
நெஞ்சகத் தாமரை நீயே நீயே
அஞ்சுதல் நீக்கி அருள் தருவாயே..

சொல்லும் பொருளும் நீயே நீயே
சூட்சுமம் எல்லாம் நீயே நீயே
செல்லும் வழியில் சோதியும்  நீயே
சிவசிவ சங்கரி நீயே நீயே..
*

ஓம் சக்தி ஓம்

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

16 கருத்துகள்:

  1. அன்னையை வணங்கி அருள் அமுதம் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருள் அமுதம் பெறுவோம்...

      அன்னை நிச்சயம் அருள்வாள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உலக நாயகியாகிய அன்னையை தரிசித்து கொண்டேன்.

    /சொல்லும் பொருளும் நீயே நீயே
    சூட்சுமம் எல்லாம் நீயே நீயே
    செல்லும் வழியில் சோதியும் நீயே
    சிவசிவ சங்கரி நீயே நீயே /

    நீங்கள் அன்னைக்கு சூட்டிய பாமாலை மிக அருமையாக உள்ளது. மனம் குளிர்ந்து பாடி அன்னையை பணிந்து வணங்கி கொண்டேன். அனைவருக்கும் அன்னை நலன்களை தரவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு


  3. ஓம் சக்தி..
    ஓம் சக்தி..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  4. பாடலில் பக்தி நிரம்பி வழிகிறது. இத்தகைய பக்தி உணர்வை எனக்கும்தா என வேண்டுவதைத் தவிர வேறு என்ன வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்?..

      தங்களுக்கு இல்லாத பக்தி உணர்வா!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. ஓம் சக்தி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  6. அன்னைக்கு நீங்கள் தொடுத்த பாமாலை அருமை துரை அண்ணா. வழக்கம் போல!

    சக்தி எல்லோருக்கும் நல்லதே நடந்திட அருள் செய்யட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  7. புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு நீங்கள் தொடுத்த பாமாலை அற்புதம். எல்லாம் அவளே! அன்னையே அனைவருக்கும் நல் அருள்தா.

    அன்னையின் பாடலை பாடி மனதால் தரிசனம் செய்து வேண்டி கொண்டேன்.
    நன்றி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்னையே அனைவருக்கும் நல் அருள் தர வேண்டும்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அகிலாண்ட நாயகியை வணங்கி சரணடைவோம்.
    அலங்காரங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..