நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
***
நேற்று பாரதத்தின் எழுபத்து மூன்றாவது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது..
இதனிடையே
பனி படர்ந்த
இமயமலைச் சாரலில்
பாரதத்தின் தவப்புதல்வர்கள் குடியரசு நாளைக் கொண்டாடிய செய்திகளுடன் இன்றைய பதிவு..
லடாக் எல்லையில் 15 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில்
இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
குடியரசு தின விழாவை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.
உத்தர்கண்ட் மாநிலம் மனா பள்ளத்தாக்கு பகுதியில் 11 ஆயிரம் அடி உயரத்தில்
இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
" பாரத் மாதா கி ஜே!.. " என்ற முழக்கத்துடன் குடியரசு தினத்தைக் கொண்டாடியுள்ளனர்..
உத்தர்கண்ட் மாநிலத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குமாண் - ஆலி பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் இந்தோ திபெத்திய பாதுகாப்பு படையினர் குடியரசு தினத்தைக் கொண்டாடியிருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளனர்..
***
செய்தித் தொகுப்பும்
படங்களும் தினமலர் இணைய தளத்தில் இருந்து..
வாழிய பாரதம்
வாழிய வாழியவே!..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்!..
***
நாடெங்கிலும் உற்சாக வெள்ளம். செய்திகள் சிறப்பு. பெருமைப்படுவோம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.
நன்றி..
நல்லது...
பதிலளிநீக்குநல்லது.. நல்லது..
நீக்குசிறப்பான தகவல்களும், படங்களும் தந்தமைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி. நன்றி..
அழகான உணர்வு பூர்வமான செய்திகளும் படங்களும், துரை அண்ணா.
பதிலளிநீக்குபனிவிழும் வனத்திலும் குடியரசுதின விழாவைக் கொண்டாடிய நம் வீரர்கள்!!! அவர்களையும் பாராட்டி சல்யூட்!
கீதா
அன்பின் சகோ..
நீக்குஉணர்வுபூர்வமான
தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.
நன்றி..
ஜெய்ஹிந்த்..
எல்லாப் படங்களும் தகவல்களும் அருமை. இந்த மானா கிராமம் தான் இந்தியாவின் கடைசி கிராமம் அந்தப் பகுதியில். இங்கே தான் நாம் நடந்தே சென்று (டோலிகளும் உண்டு. ஆனால் நாங்க நடந்தோம்.) வியாசர் மஹாபாரதம் எழுதிய குகை, பீமன் கட்டிய பாலம், பஞ்சபாண்டவர்கள் சென்ற வழி, சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் (இங்கே தான் ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்கள் ஜல சமாதி அடைந்ததாகச் சொல்கின்றனர். ஒரு சிலர் கர்ணப்ரயாகை எனவும் சொல்கின்றனர்.) ஆகியவற்றைப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் மேலதிகச் செய்திகளும் மகிழ்ச்சி.. இங்கெல்லாம் தாங்கள் சென்றிருக்கின்றீர்கள் என்பதே எங்களுக்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியக்கா..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமை. செய்திகளும் அறிந்து கொண்டேன். இவ்வருட குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடிய நம் நாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள். வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குசிறப்பான கொண்டாட்டங்கள்... எனக்கும் சில காணொளிகள் ஆக வந்தன. அதீத குளிரிலும் கொண்டாட்டங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குஉறைபனியில் நின்று கொடி வணக்கம் செய்யும் வீரர்களைக் காணும்போது மெய் சிலிர்க்கின்றது..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..