நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 28, 2022

தை வெள்ளி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை மாதத்தின் பதினைந்தாம் நாள்..
மூன்றாவது வெள்ளிக்கிழமை..


இன்றைய பதிவில்
திருமூலர் அருளிச் செய்த திருமந்திரத்தின் திருப்பாடல்கள்.. 
நான்காம் தந்திரம்..
வயிரவி மந்திரம்..

சூட்சுமங்கள்
நிறைந்த
வயிரவி ( பைரவி) மந்திரத்தில் ஐம்பது பாடல்கள்..

குரு உபதேசத்தின் வழியாகவே பெறுதல் வேண்டும்..
இவற்றுள் எளிமையானவை மட்டும் இன்றைய பதிவில்..


ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரை செயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.. 6


சூலம் கபாலங்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரமுள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவிற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.. 7

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.. 8

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே..9


பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.. 10

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.. 11

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந்துரை செய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.. 12


நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.. 23

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.. 26

கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.. 28

ஸ்ரீ வைரவி - ஸ்ரீ வைரவர்

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.. 35
***
ஓம் சக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி
ஓம்
***

20 கருத்துகள்:

  1. மங்கலம் யாவையும் அருளட்டும் அன்னை.  தை வெள்ளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய மூன்றாம் தை வெள்ளியில் ஸ்ரீ வைரவர் சமேத வைரவி அன்னையை வணங்கிக் கொண்டேன். படங்களும் வயிரவி மந்திர பாடல்களும் அருமை. அன்னை அனைவரின் துயர் களைந்து நன்மைகள் அனைத்தையும் வாழ்வில் உண்டாக்கி தரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. வைரவிக்கான பாடல்கள் அனைத்துமே அருமை. வெள்ளிக்கிழமை மட்டுமின்றி எல்லா நாட்களும் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      வைரவி மந்திரத்தின் பாடல்கள் நம்முள் பக்திப் பெருக்கினை ஏற்படுத்துவன..

      அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  5. பைரவி தான் வயிரவி என்று சொல்லியிருக்கிறீர்களா அண்ணா. இப்போதுதான் இந்தப் பாடல்கள் அறிகிறேன் துரை அண்ணா.

    என் தங்கையுடன் அவளுக்கு வேண்டுதல் இருந்ததால், ஆதிபைரவர் தொடங்கி திருப்பத்தூரில் அதன் சுற்றிலும் உள்ள பைரவர் இருக்கு கோயில்களுக்குச் சென்று வந்த நினைவு வந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      பைரவி எனும் பெயர் தான்
      வயிரவி என்று தமிழில் ஆகி வருகின்றது..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. வயிரவி, பஞ்சமி, பாசாங்குசை வஞ்சவர்
      உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி! ஒளிரும் கலா
      வயிரவி மண்டலி மாலினி சூலினி வாராஹி என்றே
      செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே! அபிராமி பட்டர் @ தி/கீதா!

      நீக்கு
    3. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அடுத்து வரும் வெள்ளிக் கிழமைகளில் அபிராமி அந்தாதியைப் பதிவு செய்யலாம் என்றிருந்தேன்..

      இனிய பாடல் பதிவுக்கு
      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. வைரவி , வைரவர் அனைவருக்கும் நலங்கள் அருள பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  7. பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பு. படங்கள் வழி நாங்களும் தரிசித்தோம். தை வெள்ளி சிறப்பு நாளில் பகிரும் விஷயங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அனைவருக்கும் பதிவுகள் பிடித்திருக்கின்றன என்பதே எனக்கு மகிழ்ச்சி..

      அன்பின் கருத்துக்கு நன்றி
      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..