நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.. 225
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த.திருப்பாவை..
திருப்பாடல் - 26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. 1033
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம்
திரு ஆலங்காடு
பழையனூர் என்பது தலம்
திரு ஆலங்காடு என்பது திருக்கோயில்..
இறைவன்
ஸ்ரீ ஆலங்காட்டு அப்பன்
ஸ்ரீ வட ஆரண்யேஸ்வரர்
ஸ்ரீ ரத்னசபாபதி
அம்பிகை
வண்டார்குழலி
தீர்த்தம் - முக்தி தீர்த்தம்
தலவிருட்சம் - ஆல், பலா
ஆதி ரத்தின சபை..
ஸ்ரீ காளியுடன்
ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்தப்பட்ட திருத்தலம்..
புனிதவதியாராகிய காரைக்கால் அம்மையார் இத்தலத்தில் தான் பங்குனி சுவாதியில் அம்மையப்பனின் திருத்தாண்டவம் கண்டு முக்தி எய்தினார்..
வண்டார் குழலி உமை நங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பல தீர்க்கும்
பரமா பழையனூர்மேய
அண்டா ஆலங் காடாஉன்
அடியார்க்கு அடியேன் ஆவேனே..7/52
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 9
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
திருப் பொன்னூசல் இந்த அளவில்
நிறைவாகின்றது..
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
குறளமுதம், அருளமுதம், பாசுர அமுதங்கள்... மூழ்கிக் களித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மகிழ்ச்சி.. நன்றி..
சிவாய நம ஓம்..
பதிலளிநீக்குவாழ்க வையகம் தரிசித்தேன்...
பதிலளிநீக்குஅமுதம் சிறப்பு, துரை அண்ணா...திருப்பொன்னூசல் நிறைவு.....பாடல்கள் அனைத்துமே என்ன ஒரு சிறப்பு!!
பதிலளிநீக்குகீதா
அன்பின் சகோ..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இது எந்தத் திருவாலங்காடு? நான் பார்த்தது சென்னை தாண்டி அரக்கோணம் அருகிலிருக்கும் திருவாலங்காடு தான். இங்கே சீர்காழிக்கு அருகே கூட ஒன்று இருக்குப் போல! அதை நான் பார்த்தது இல்லை.
பதிலளிநீக்குஅரக்கோணத்துக்கு அருகில் இருக்கின்ற திருவாலங்காடு..
நீக்குதலங்களுக்கான வழித்தடங்களைப் பதிவில் சொல்லாதது எனது பிழை தான்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நாங்கள் திருத்தணி திருமணத்துக்குச் சென்றபோது இங்குதான் பாலம் உடைந்து சுற்றிக் கொண்டு போனதைக் குறிப்பிட்டிருந்தேன்.
நீக்குஎப்படியோ நல்லபடியாக திருமணத்துக்கு சென்று வந்தாயிற்று..
நீக்குசிறப்பான பதிவு.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மார்கழி பதிவு சிறப்பானதாக உள்ளது. பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தேன். திருவாலங்காடு ஈசனை பணிந்து தொழுதேன். தங்கள் தயவால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரின் அம்மையப்பனின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். இன்னமும் மூன்று தினங்களில் மார்கழி முடிந்து விடப் போகிறதே என்று இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கைத் தொலைபேசியில் இருந்தே எல்லாமும் செய்து கொண்டிருக்கின்றேன்..
நீக்குபெரு விரலால் தட்டச்சு செய்வதால் சமயத்தில் வலி..
கண்ணாடி மாற்றினால் நல்லது.. ஆனால் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள்..
இன்னும் சிறப்பாக செய்வதற்கு இறைவன் அருள் புரிவான்..
தங்களது பிரார்த்தனைகளும் கூட இருக்கும்..
மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குமங்கல மார்கழி படங்கள், பாடல்கள் அருமை.
தொலைபேசியிலே முழு பதிவையும் தட்டச்சு செய்வது கடினம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅம்மையைப் போலவே அம்மையின் பெயரும் அழகு. நிறைவான தரிசனம் கண்டேன். நலமே விளையட்டும்.
பதிலளிநீக்கு