நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தைப்பூசப் பெருநாள்..
தமிழர் தம்
வழிபாட்டின் திருநாள்..
தேவாரத்தில் பேசப்படும்
இனிய நாள்..
எல்லாம்
நன்மைக்கே!.. எனும்
மனநிலையுடன்
இல்லத்தினில்
நல்ல விளகேற்றி
எல்லாம் வல்ல
எம்பெருமானை
வழிபடுவோம்..
*
இன்றைய
பதிவினில்
பழனியம்பதியைக்
குறித்த
திருப்புகழ் பாடல்கள்..
திருப்பாடல்கள்
கௌமாரம் இணைய தளத்தில்
இருந்து பெறப்பட்டவை..
***
தனன தனன தனன தன
தனன தனன ... தனதான
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ... எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு ... மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ... தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி ... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ... மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ... தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ... பெருமாளே!..
தனதனன தாத்த .. தனதான
தனதனன தாத்த .. தனதான
வசனமிக வேற்றி ... மறவாதே
மனதுதுய ராற்றி ... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
இகபரசெள பாக்ய ... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
பழநிமலை வீற்ற ... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ... பெருமாளே.
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ... தனதான
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து -- இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து -- பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து -- துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற -- னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த -- மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க -- வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த -- கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேலமர்ந்த -- பெருமாளே!.
*
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல்
முருகனுக்கு அரோகரா..
***
முருகா வரணும். அருள்வாய், சரணம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி..
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
திருப்புகழ் பாடல்களைப் பதம் பிரித்தறிந்து (என்னா கஷ்டம்!!! எப்படி இப்படி அழகாக எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர்!!!!) தாளம் போட்டு சொல்லிப் பார்த்தேன் அண்ணா...இதை ராகத்துடன் பாடுபவர்கள் நிறைய உழைக்க வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
முருகன் என்றால் அழகு. அழகான ஒளிப்படங்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி..
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி..
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதைப்பூச பதிவு அருமை. இன்றைய நாளில் முருகனின் அழகான படங்களோடு, அவனருள் பெற அருணகிரிநாதரின் திருப்புகழும் சேர்ந்து பதிந்திருப்பது கண்டு அவனைப் பாடி தொழுது மெய் சிலிர்த்தேன்.
உலக மக்கள் அனைவரையும் உமையவள் மைந்தன் முன்னின்று காக்க வேண்டும். முருகன் தன் வேல் கொண்டு நம் வினையகற்ற வேண்டும். முருகா சரணம். கந்தா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகந்தா சரணம்..
கடம்பா சரணம்..
கார்த்திகை மைந்தா
சரணம்.. சரணம்..
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
பதிலளிநீக்குவீரவேல் முருகனுக்கு அரோகரா.....
முருகா சரணம்....
கந்தா சரணம்....
கதிர்வேலா சரணம்....
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
திருப்புகழ் பாடலை பாடி முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅனைவரையும் முருகன் கை வேல் காக்க வேண்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குமுருகா சரணம்..
சரணம்.. சரணம்..
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
முருகனுக்கு அரோகரா...
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி..
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
தைப்பூச நன்னாளில் நல்லதொரு பதிவு. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... விஜயவாடாவில் சிறுவயதில் கொண்டாடிய தைப்பூச விழா நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா...
வெற்றி வடிவேலன் தன் கைவேலால் அனைத்துத் துன்பங்களையும், துயர்களையும் அடியோடு வீழ்த்த வேண்டும். நேற்று முருகனை நினைத்ததோடு சரி. :( இங்கேயும் அரங்கன் நிலைத்தேர் கண்டருளி இருக்கார்.
பதிலளிநீக்குஅந்த அளவுக்கு மனதில் முருகனை வைத்ததே புண்ணியம்..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..