நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 17, 2022

அருட்பெரும் ஜோதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நாளை
(தை 5  செவ்வாய் 18 - 1)
தைப்பூசம்..


வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடி இளைத்த
வள்ளலார் பெருமான்
ஜோதியாகிய நாள்..
*
இந்நாளில்
திரு அருட்பா
பாடல்கள் சிலவற்றுடன்
பெருமானை
சிந்தித்திருப்போம்..

திருப்பாடல்கள்
திரு அருட்பா தளத்தில்
இருந்து பெறப்பட்டவை..
***


கீழுள்ள ஐந்தும்
திருவொற்றியூர்
ஸ்ரீ வடிவுடையம்மனுக்கு
பெருமானால்
சூட்டப்பெற்ற
மாணிக்க மாலையின்
மணிகள்..
*
திருநாள் நினைத் தொழும் நன்னாள் தொழாமல் செலுத்திய நாள்
கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.. 39

செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.. 56

தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங்
கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.. 57

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன்னருள்
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர் பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.. 64

தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கி நின்று
வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய் ஒற்றி யின்னி டைப்பூ
மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.. 65
*
அருட்ஜோதி தெய்வம்


அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைக ளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெ னையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்..
***
அருட்பெரும்ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி..
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. தைப்பூசத் திருநாளை கொண்டாடுவோம்.  தியாகராஜப்பெருமானும் வாய்வும் அம்மனும் காக்கட்டும் நம்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாய்வும் அம்மனும் காக்கட்டும் நம்மை.//

      அம்மன் என்னை மன்னிக்கட்டும்.  வடிவுடை அம்மன் என்று வரவேண்டும்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம் ...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அம்மையப்பன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்..

      அருட்பெரும் ஜோதி..
      அருட்பெரும் ஜோதி..

      நீக்கு
  2. வள்ளலார் பதிவுகள் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருவது வடலூர் சென்று தரிசனம் செய்ததும் அங்கு அருட் ஜோதி தெய்வம் எனை ஆட்கொண்ட தெய்வம் - ராகத்துடன் கற்ற பாடலைப் பாடியதும். உள்ளே சத்தம் கூடாது எனவே வெளியில் இருந்துதான். மிகவும் பிடித்த தலம். மிகவும் பிடித்த பாடல். படித்த காலத்தில் ஒரு சில நிகழ்வுகளில் பிரார்த்தனை பாடலாகப் பாடிய அனுபவம். பதிவை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ ...

      அருட்பெரும் ஜோதி அகவலுக்கு
      உருகாதார் யார்?..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      அருட்பெரும் ஜோதி..
      அருட்பெரும் ஜோதி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நாளை வரும் தைப்பூச திருநாளை பக்தியுடன் நினைவில் கொள்வோம். வள்ளலார் பாடல்கள் அருமையாக உள்ளது
    அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை. இறைவனுடன் ஜோதி வடிவில் கலந்து விட்ட வள்ளலாரை பக்தியுடன் எந்நாளும் பணிந்து போற்றுவோம்.

    திருவெற்றியூர் தியாகராஜ பெருமானையும், அன்னை வடிவுடை அம்மனின் தரிசனமும் பெற்று கொண்டேன். சென்னையிலிருக்கும் போது ஒரு தடவை இந்தக் கோவிலுக்கு சென்றுள்ளோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      அம்மையப்பன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்..

      அருட்பெரும் ஜோதி..
      அருட்பெரும் ஜோதி..

      நீக்கு
  4. அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி.. அம்மையப்பன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்..

      அருட்பெரும் ஜோதி..
      அருட்பெரும் ஜோதி..

      நீக்கு
  5. உண்மையில் வள்ளலாரும் கோயில்களுக்குச் சென்று வழிபட்டவரே என்பதை இந்தப்பாடல்கள் சொல்லி விடும். இதே போல் சென்னை கந்தகோட்டத்து முருகனையும் அவர் பாடியுள்ளாரே! ஆனால் இப்போது அவருக்கு வேறே பெயர் சூட்டிக் கொண்டாடுகின்றனர். ராமலிங்க வள்ளலார் பற்றி மின் தமிழுக்காகச் சில வருஷங்கள் முன்னர் எழுதி இருக்கேன். என்னோட "என் பயணங்களில்" வலைப்பக்கம் காணக்கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிக செய்திகளுக்கு நன்றியக்கா..

      அம்மையப்பன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்..

      அருட்பெரும் ஜோதி..
      அருட்பெரும் ஜோதி..

      நீக்கு
  6. https://geethasmbsvm6.blogspot.com/2011/03/1.html இங்கிருந்து ஆரம்பித்து
    https://geethasmbsvm6.blogspot.com/2011/09/blog-post_3188.html இங்கே முடியும். நேரம் இருக்கையில் விருப்பமுள்ளவர்கள் போய்ப் படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிக செய்திகள் தகவல்களுக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      அருட்பெரும் ஜோதி..
      அருட்பெரும் ஜோதி..

      நீக்கு
  7. அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை

    மாணிக்கமாலையை படித்து அம்மனை வேண்டிக் கொண்டேன்
    அருட்ஜோதி பாடல் மிகவும் பிடித்தபாடல்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மாணிக்க மாலையினைப் பதிவில் தருவதற்கு ஆவல்.. இறையருள் கூடி வருக..
    கருத்துரைக்கு நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை...... நாங்கள் இருந்த நெய்வேலிக்கு மிக அருகில் வடலூர் என்பதால் சிறுவயதில் ஓரிருமுறை சென்றதுண்டு. தைப்பூச நன்னாள் சமயத்தில் அவர் குறித்த பதிவு சிறப்பு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இதுவரை வடலூர் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை..

      ஸ்வாமிகளின் அருள் கிடைக்கட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..