நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
இரண்டாம் நாள்..
காளை, பசு, எருமை
எனும் செல்வங்களுக்கு
நன்றி செலுத்தும் நாள்..
எனது
இளம் வயதின் தோழர்கள்
ஆடுகளும் பசுக்களும் கன்றுகளும் தான்..
இன்றைக்கு
கிராமங்களில் கூட
காளை மாடுகளைப் பார்ப்பது
அரிதாக இருக்கின்றது..
ஆயினும்
பழைய நினைவுகளில்
மூழ்கிய மனதில்
உழவுக் காளைகளுக்காக
எழுந்த சில வரிகள்
இன்றைய பதிவில்..
நமது
வாழ்வும் வளமும்
காளையிடத்திருந்தே
தொடங்குகின்றன..
நீருடன் நிலத்தை உழக்கி நடந்து
நெல்மணித் திரளைச் சேர்க்கும் காளை
நின் மலரடியை மனதில் வைத்து
மலருடன் வந்தேன் வழிபடும் வேளை..
உடனுறு மகனாய் உயிரினில் எந்தாய்
உழைத்திடும் போதில் கதிர்என நின்றாய்..
ஒவ்வொரு துளியாய் வியர்வையைச் சிந்தி
முத்தாய் மணியாய் களத்தினில் தந்தாய்..
வறுமையில் வாட்டத்தில் மீட்டவன் நீயே
வாழ்வும் வளமும் சேர்த்தவன் நீயே..
நீயே பாரத தர்மத்தின் ஜோதி
உனையே வாழ்த்தி வணங்குதல் நீதி..
மேழியை நடத்திச் சென்றவன் நீயே..
வாழிய என்றெமை வைத்தவன் நீயே..
பாலிலும் நெய்யிலும் உன்திரு முகமே..
பாதம் வணங்கிட
வாழ்த்திடும் சிவமே!..
***
வாழ்க ஆனினம்..
வாழ்க பாரதம்!..
ஃஃஃ
பதிவினை மிகவும் ரசித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
உலகில் வாழும் அத்தனை உயிரினங்களும் ஏதோ ஒருவகையில் ஒன்றையொன்று சார்ந்தே வாழ வழி செய்திருக்கிறது இயற்கை. அதைக் கெடுப்பதில் முன்னோடி மனிதன்தான்!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி..
தாங்கள் சொல்வது போல்
அனைத்திற்கும் முன்னோடி மனிதனே..
நன்றி.. வாழ்க நலம்..
வீட்டிற்கு ஒரு மாடாவது இருந்தது போக, இப்போது கிராமங்களில் கூட மாடுகள் குறைந்து விட்டன.
பதிலளிநீக்குமுன்பெல்லாம் கிராமங்களில், ஒரு சின்ன வீடு, இரண்டு தென்னை மரங்கள், ஒரு பசு மாடு போறும் நன்றாக வாழ என்பார்கள்.
தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குதன்னையே கொடுப்பதில்
வாழைக்கு ஈடு..
சம்சாரி வாழ்வுக்கு
ஒரு பசுமாடு..
- என்று திரைப்படப் பாடலில் வரும்..
நன்றி.. நலம் வாழ்க..
காளைகளுக்காக இயற்றிய கவிதை அருமை ஜி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி ..
நீக்குதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மதம் அனைத்தையும் பாழ் செய்து விடும்...
பதிலளிநீக்குஎந்த மதத்தினைச் சொல்கின்றீர்கள்?..
நீக்குஉங்கள் பழைய நினைவுகளில் மூழ்கியதால் வெளிவந்த முத்தான கவிதை! மிகவும் ரசித்தேன் அண்ணா.
பதிலளிநீக்குமனிதனின் சுயநலம் எல்லாவற்றையும் பாழ்செய்கிறதே. அதில் நாமும் தான். கூடியவரை நம்மால் இயன்றதைச் செய்யலாம் வேறு?
கீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி சகோ..
பதிலளிநீக்குஇயன்றவரை இயற்கையை அழிக்காதிருப்போம்.. அதுவே மிகப் பெரிய வழிபாடு..
நன்றி.. நலமே வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவை நன்றாக தொகுத்துள்ளீர்கள். பழைய நினைவுகளின் தொகுப்பாக ஆனினம் பதிவு அருமை. காளைகளுக்காக நீங்கள் பாடிய பாடல் அருமை. உங்களுக்கும் கணுப்பொங்கல், நாளைய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. காலையில் தங்களைக் காணவில்லையே என்றிருந்தேன்..
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைக்கு நன்றி..
தங்களுக்கும் அன்பின் இனிய கணுப் பொங்கல் நல் வாழ்த்துகள்..
வாழ்க நலம்..