நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 06, 2018

மார்கழிக் கோலம் 22

தமிழமுதம்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து..(125) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 22



அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் 
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்..
  *
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ ஆமருவியப்பன் - தேரழுந்தூர்
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
அமுதன்று கொண்டுகந்தான் என்றும் - அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தியே நவின்று..(2266)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை 


சிவ தரிசனம்

திருத்தலம்
திருஅண்ணாமலை


இறைவன்
ஸ்ரீ அண்ணாமலையார்  
அம்பிகை
ஸ்ரீ உண்ணாமுலையாள்


தல விருட்சம் - மகிழ மரம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்

பஞ்ச பூதங்களுள் 
அக்னிக்குரிய திருத்தலம்..



அண்ணாமலையை
மனதார நினைத்தாலே முக்தி
என்று ஆன்றோர் வகுத்துள்ளனர்..


வழி மாறிச் சென்ற அருணகிரி 
முருகப் பெருமானின் கருணையினால்
மீண்டெழுந்த தலம் இதுவே..

கார்த்திகை மகாதீபம்
மாணிக்கவாசகப் பெருமான்
அண்ணாமலை தரிசனத்தின் போது தான் 
திருவெம்பாவையை அருளினார்..
*
ஸ்ரீ காலபைரவர் - அண்ணாமலை
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும் விரிசாரல்
ஆலிம்மணி தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே..(1/120)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

உருவமும் உயிரும் ஆகிஓதிய உலகுக்கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர்கோவே
மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே..(4/63)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திரு அம்மானை 07 - 08

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்- அண்ணாமலை
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்...

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்...  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***



10 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ!

    இன்றைய திருப்பாவை மிகவும் அற்புதமான கருத்துடைய பாடல்.

    அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே....

    அன்று பாரதப் போருக்கு முன் கிருஷ்ணரின் ஆதரவு வேண்டி பாண்டவரும், கௌரவரும் சென்றார்கள். அப்போது கண்ணன் சொல்லியிருந்தான் முதலில் வருவோருக்கு என் ஆதரவு/படைகள் கிடைக்கும் என்று.

    துரியோதனன் முதலில் வந்தான். கிருஷ்ணரின் தலைப்பக்கமாய் நின்றான். அவனுக்கு ஒரே களிப்பு. தான் முதலில் எனவே தனக்குத்தான் படைகள் என்று. அடுத்து வந்தார்கள் பாண்டவர். அவர்கள் கிருஷ்ணரின் பாதங்களின் அருகில். துரியோதனனுக்கு கர்வம்..ஹும் இவர்கள் தாமதம்...எனக்குத்தான் படைகள் என்று.
    கிருஷ்ணர் கண் விழித்தார். முதலில் பார்த்தது பாண்டவரை. துரியோதனனுக்கு ஷாக். நான் தான் முதலில் வந்தேன் எனவே எனது வேண்டுகோளைத்தான் முதலில் செவிமடுக்க வேண்டும் என்று. கிருஷ்ணர் சொன்னார் முதலில் நான் கண் விழித்ததும் பார்த்தது பாண்டவர்களை எனவே அவர்களுக்குத்தான் முதல் வாய்ப்பு என்று. கிருஷ்ணர் கேட்டார், எமது படையா அல்லது நானா? நான் மட்டும் உங்களுடன் இருந்தால் போதுமா...?

    பாண்டவர் விடுவார்களா? எமக்கு நீங்கள் மட்டும் எங்களுடன் இருந்தால் போதும் என்றார்கள். அப்போதும் துரியோதனனுக்கு இளக்காரம் அதே சமயம் மகிழ்ச்கி... முதல் வாய்ப்பு கிடைத்தும் இவர்கள் படைகளைக் கேட்கவில்லையே. ஒரே ஆளான கிருஷ்ணரை கேட்கிறார்களே என்று. அவனது அறிவுக் கண் அகங்காரத்தால், ஆணவத்தால், கோபத்தால், வெறுப்பால், பொறாமையால் மூடப்பட்டு இருக்கும் போது இறைவனின் தாள் சரணாகதி கண்ணிற்குப் புலப்படுமா என்ன?

    உங்களுக்கு என் படைகள் வேண்டாவா? நான் மட்டும் போதுமா என்ன? என்று கிருஷ்ணர் கேட்டார். பாண்டவரின் பதில் ஆம்...நீங்கள் மட்டும் போதும் அது ஒன்றே போதும்...வேறு என்ன வேண்டும்?

    துரியோதனன் அவன் விரும்பிய படி படைகள் கிடைத்தன...ஆனால் நடந்து என்ன என்று நம் எல்லோருக்குமே தெரியும்...

    இதில் கொள்ள வேண்டியது பொருளோ, பணமோ எதுவும் நிகரில்லை அந்த இறைவனின் பாத சரணாகதிக்கு நிகராக என்பதே இல்லையா சகோ..

    கிங்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே திங்களும் ஆதித்தனும் எழுதான்ற் போல் செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ ...எங்கள் மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய்!!!

    ஆம் அவரது கண்கள் நம் மேல் பட்டால் பொதும் அது அவரது பாதங்களில் நல்ல மனதுடன் வீழ்ந்தால் கிடைத்திடாதோ..சரணாகதித் தத்துவம்...

    அதனாலேயே இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்திட மார்கழி மட்டுமின்றி தினமும் இப்பாடலைச் சொல்லுவதுண்டு...

    மிக்க நன்றி சகோ..அருமையான படங்களுடன் இன்றைய நாள் இனிதாய் மலர்ந்தது. இனிதாய் அமைந்திடட்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம், தரிசனம் ஆச்சு.

    பதிலளிநீக்கு
  3. பெரிய பதிவையும், பின்னூட்டமாக கீதாவின் சிறிய பதிவையும் படிச்சாச்!

    பதிலளிநீக்கு
  4. தரிசனம் நன்று.
    அன்பின் ஜி
    தொடர்பதிவு ஒன்றில் தங்களை இணைத்து இருக்கிறேன் வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... ஹிஹிஹிஹிஹீ....நம்ம/என் பழக்கம் போக மாட்டேங்குது ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...அதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பாடலைப் படித்தேன். அருமை. திருவண்ணாமலைக்கு பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு.

    பதிலளிநீக்கு
  8. அண்ணாமலையை மனதார நினைக்கிறேன்.

    முதல்படம் அருமை.. அதில் இருப்பது ராமரோ..

    பதிலளிநீக்கு
  9. திருவண்ணாமலை சென்றதுண்டு - இரண்டு மூன்று முறை. இன்னும் செல்ல ஆசையுண்டு. எனக்கு மிகவும் பிடித்த கோவில்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  10. தனிச்சிறப்படைய தரிசனம் ....மிக நன்று

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..