நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
கதிர்காமம்
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ... தனதான
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு ... மதனாலும்
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு ... மதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த ... மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க ... வரவேணும்
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர ... மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி ... லுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை ... மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி
கௌமாரம்
இரண்டு, மூன்று நாட்களாக வெளியூர் அலைச்சல்.
மற்றபடி பூரண நலமே..
மற்றபடி பூரண நலமே..
முருகா முருகா
முருகா முருகா
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..