நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 01, 2018

மார்கழிக் கோலம் 17

தமிழமுதம்



பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற..(095) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 17



அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த 
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா 
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்...
  
தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீ கலியுக வரதராஜப் பெருமாள்
அரியலூர்
மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை - மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்..(2232)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***
நல்லதோர் வீணை



சிவ தரிசனம்

திருத்தலம்
திருமறைக்காடு


இறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்  
அம்பிகை - ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள்

தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - மணிகர்ணிகை

அகத்திய மாமுனிவருக்கு
அம்மையப்பன் - தமது
திருமணக் கோலம்
காட்டியருளிய தலம் ..

மணி கர்ணிகை தீர்த்தம்
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
ஒன்றாகத் தங்கியிருந்த திருத்தலம்..


ஸ்ரீ துர்கா - திருமறைக்காடு
இங்குதான் பன்னெடுங்கலமாக 
பூட்டிக் கிடந்த கோயில் கதவுகளை
திருப்பதிகம் கொண்டு அப்பர் பெருமான் திறக்கவும்
ஞானசம்பந்த மூர்த்தி அக்கதவுகளை
அடைக்கவும் ஆயிற்று..

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்



தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே..(6/23)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 17 - 18


செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...

*


அன்பின் இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. துரை சகோ! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    துளசியும் தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. எம்பெருமான் நந்தகோபாலன் மற்றும் அகத்தியருக்குத் திருமணக்கோலக் காட்சி கொடுத்த திருத்தலத்தையு அம்மை அப்பன் தரிசனமும் கண்டோம்..அழகான தரிசனம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஹப்பி நியூ இயர் அண்ட் 17ம் நாள் வாழ்த்துக்கள் துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய மார்கழி கோலம் சிறப்பு.

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ஏற்றம் தரும் எழிற்கோலங்கள்.
    நன்றிகள் பல ஐயா!

    பதிலளிநீக்கு
  7. வந்து விட்டேன் உங்கள் அழகிய பதிவைப் படித்து மகிழ்ந்தேன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. மார்கழிக்கோலம் நன்று
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  9. திருமறைக்காட்டின் சிறப்பை அறிந்தேன். அதிவீரராம பாண்டியர் வாக்கு இரண்டு நாட்களாய் ஒன்றே இடம் பெற்றிருக்கிறதே..

    பதிலளிநீக்கு
  10. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..