நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 15
செவ்வாய்க்கிழமை
வைகாசி திருவோணம்
தஞ்சை மாமணிக் கோயில்!..
ஸ்ரீ வைகுந்த வாசன் இத்தலத்தில் - திருமங்கை ஆழ்வார் தமக்கு, வைகாசி திருவோண நாளன்று
கருட வாகனத்தில்
தரிசனம் நல்கியதாக ஐதீகம்..
இத்தலத்தில்
ஸ்ரீ துவாதச கருடாழ்வார் - என்று அழைக்கப்பட்ட ஸ்வாமிகளால் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரண்டு கருட சேவை எனத் தொடங்கி வைத்த வைபவமானது இன்றைக்கு இருபத்தைந்து கருட சேவை - என, அன்பர்களால் நடத்தப்பட்டு வருகின்றது..
முன்னதாக ,
இன்று வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சந்நிதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகின்றது..
தொடர்ந்து நாளை புதன்கிழமை மாபெரும் கருட சேவை..
அன்ன வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் பெருமாளைச் சேவித்த வண்ணம் முதலில் செல்வார்..
அவரைத் தொடர்ந்து
1) ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோதை நாச்சியாருடன் எழுந்தருள்வார்...
தொடர்ந்து -
வெண்ணாற்றங்கரை
2) ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்,
3) ஸ்ரீ வீரநரசிம்மப் பெருமாள்,
4) ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள்,
பள்ளியக்ரஹாரம்
5) ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி,
வேளூர்
6) ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
சுங்கான்திடல்
7) ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள்,
கரந்தை
8) ஸ்ரீ யாதவக் கண்ணன்,
கரந்தை - வாணியர் தெரு
9) ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள்,
கொண்டி ராஜ பாளையம்
10) ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி
11) ஸ்ரீ கோதண்டராமர்,
கீழ ராஜவீதி
12) ஸ்ரீ வரதராஜ பெருமாள்,
தெற்கு ராஜவீதி
13) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள்,
ஐயன் கடைத்தெரு பஜார்
14) ஸ்ரீ ராமஸ்வாமி,
எல்லையம்மன் கோயில் தெரு
15) ஸ்ரீ ஜனார்த்தனப் பெருமாள்,
கோட்டை
16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்,
17) ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள்,
18) ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள்,
மேல ராஜவீதி
19) ஸ்ரீ விஜயராம ஸ்வாமி,
20) ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி
சகாநாயக்கன்தெரு
21) ஸ்ரீ பூலோக கிருஷ்ண ஸ்வாமி,
மகர்நோம்புச்சாவடி
22) ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி,
23) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்,
கொள்ளுப்பேட்டைத்தெரு
24) ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி,
மேட்டுத் தெரு
25) ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
- என, இருபத்தைந்து கோயில்கள்..
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த பெருமாள் கோயில்கள் பதினெட்டு..
மற்றும் பிற கோயில்கள் ஏழு - என மொத்தம் இருபத்தைந்து கோயில்கள்..
இருபத்தைந்து கோயில்களில் இருந்தும் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி - தஞ்சையின் ராஜ வீதிகளான கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதிகளில் சேவை சாதித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்..
வியாழன்று
பதினாறு கோயில்களின்
நவநீத சேவை - வெண்ணெய்த் தாழி மகோற்சவம்..
காலை எட்டு மணியளவில் கொடிமரத்து மூலையில் புறப்பட்டு - ராஜவீதிகளில் அனைவருக்கும்
நவநீத சேவை
தரிசனம்...
எதிர் வரும் வெள்ளிக் கிழமையன்று அந்தந்தக் கோயில்களில் விடையாற்றி விழா..
இன்றைய பதிவின் காட்சிகள் சென்ற ஆண்டின் கருட சேவை..
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.. 953
-: திருமங்கையாழ்வார் :-
அனைவரும் வருக
கருட சேவை காண்க..
நல்லருள் பெறுக
நலமுடன் வாழ்க..
**
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***
சுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குகருடசேவை தரிசனம் கிடைத்தது நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அருமை. திருமங்கை பாசுரம் படித்து இறைவனை வணங்கி கொண்டேன்.
கருடசேவை உலாக் காட்சிகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குநமோநாராயணாய நமக.