நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 8
செவ்வாய்க்கிழமை
தஞ்சை திரு ஐயாற்றுக்கு அருகிலுள்ள கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில்
(ஆயிரத்தெட்டு இளநீர் அபிஷேக நாளில்) எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..
மூலஸ்தான மூர்த்தியாக ஸ்ரீ மஹா கணபதி.. ஆயினும் சந்நிதிக்கு இடப்புறத்தில் சிவலிங்கம் திகழ்கின்றது..
அபிஷேக இளநீர் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது..
இளநீர்க் காய்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன..
தஞ்சை சரபோஜி மன்னர் இத்திருக்கோயிலுக்கு பலமுறை வருகை தந்திருக்கின்றார்..
மதுரை ஸ்ரீலஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் விஜயம் செய்த போது திருமேனி உயிர்ப்புடன் விளங்குவதால் கருவறையில் எவ்வித மாற்றமும் கூடாது என்று அருளியுள்ளார்..
இந்தத் திருக்கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் கொண்டிருக்கின்றார்..
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா..
-: ஒளவையார் :-
ஓம் கம் கணபதயே நம
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
வினையறுப்பவனே விநாயகா.. அனைவரையும் காப்பாய்.. வணங்குகிறோம்.
பதிலளிநீக்குபடங்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஸ்ரீ மகா கணபதி கோயில் படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. கோடையில் இளநீர் அபிஷேகம் நல்லதுதான். மனம் குளிர்ந்து அனைவரைக்கும் நலங்கள் அருளட்டும் கணபதி.
பதிலளிநீக்குமகா கணபதி அபிஷேகம் படங்கள் அருமை.
பதிலளிநீக்குஓம் விநாயகாய நமக.