நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 30, 2024

கருட சேவை 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 17 
வியாழக்கிழமை


வைகாசி 16 புதன் கிழமையாகிய நேற்று - தஞ்சை மாநகரில் மகோன்னதமான கருடசேவை வைபவம்.. 

ஆயிரக்கணக்கான மக்கள்  தரிசித்து பரவசம் எய்தினர்.. 

வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்தோர் சிறப்பான வைபவம் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்... 

கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதி மேல ராஜவீதிகளில் - காலையில் இருந்தே பக்தர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன.. 

வைபவத்தை இயன்ற வரை காட்சிப்படுத்தியுள்ளேன்..

இந்த அளவுக்கு கருட வாகனனின் கருணை..

அடியேனுக்கு ஆயுள் ஆரோக்கியத்தை அருளியுள்ளான்..

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்


ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
ஸ்ரீ வீர நரசிம்மர்


ஸ்ரீராம ராம..



















தெற்கு ராஜவீதி   மண்டபம் ஒன்றில் கல்யாண விருந்து போல நடத்தியிருக்கின்றனர்..

ஒரே ஒரு குறை... 
ராஜ வீதிகள் எதிலும் பொது சுகாதார வசதி இல்லாதது தான்...

இருப்பினும்,
பெருமாள் எவ்வித சிரமமும் ஏற்படாமல் அருளினார்..

அதுவே நிறை மங்கலம்!.. 

தொடர்ந்து  இன்று நவநீத சேவை நடைபெறுகின்றது..

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்
சுங்காந்திடல்

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்  அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்  நாராயணா என்னும் நாமம்.. (956)
-:
திருமங்கை ஆழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

5 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் சிறப்பு. விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து கருட சேவையை தரிசனம் செய்ய் வைத்த இறைவனுக்கு நன்றி.
    நாங்களும் கருட சேவை செய்தோம்.
    திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. கருட சேவை படங்கள் எல்லாம் சூப்பர். அங்கதான் இருக்கீங்களா!! நவனீத சேவைன்னு சொல்லியிருந்தீங்க! உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகிடட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தஞ்சையில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சிகள் கண்டு மனம் மகிழ்ந்தேன். கருட சேவை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.உங்கள் உடல் நலமாகி அவன் அருள் புரிவான். உங்கள் தயவில் நாங்களும் கருட சேவை தரிசனங்கள் பெற முடிந்தது. எம்பெருமான் அனைவருக்கும் உடல், மன ஆரோக்கியத்தை குறைவற்ற தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..