நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 27, 2024

முத்துப்பல்லக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 14  
திங்கட்கிழமை


வைகாசி மூல நட்சத்திரம்..

திருஞானசம்பந்தர் சிவஜோதியாகிய நாள்..

சனிக்கிழமை (25/4) இரவு பத்து மணி அளவில் - தஞ்சை திருஞானசம்பந்தர் திருமடத்தில் இருந்து பல்லக்கு எழுந்தருள - தஞ்சையின் பல பகுதிகளில் விளங்குகின்ற பிள்ளையார் முருகன் கோயில்களில் இருந்தும் அலங்கார ரதங்களில் ஸ்வாமி புறப்பட்டு திருவீதி வலமும் நடைபெற்றது..

சில நாட்களாக ஒவ்வாமைத் தொந்தரவு அதிகமாகி விட்டது.. ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திரும்புவதைத் தரிசிக்க வேண்டும் என்று இருந்தேன்.. 
சில பிரச்னைகளால் வெளியில் எங்கும் செல்வதற்கு இயலவில்லை.. 

சித்தர் வழிபாட்டு மன்றத்தில் இருந்து காணொளி மட்டுமே கிடைத்தது..

" என்னடா இது விதி.. " - என்று இருந்த போது ஸ்ரீராம் அவர்களிடம் இருந்து படங்கள்.. மனதிற்குள் மழை பெய்த மாதிரி இருக்கின்றது..

நிகழ்வில் கலந்து கொண்ட திருக்கோயில்கள்:-

1) ஸ்ரீ வல்லப விநாயகர், கீழவாசல்..
2) ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி, கீழவாசல்..
3) ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி, கீழவாசல்..
4) ஸ்ரீ பழனியாண்டவர், கீழவாசல்
5) ஸ்ரீ கல்யாண கணபதி, கீழவாசல்
6) ஸ்ரீ ஜோதி விநாயகர், மகர்நோன்புச்சாவடி..
7) ஸ்ரீ கமல ரத்ன விநாயகர், தெற்கு ராஜ வீதி..
8) ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி  மேலவாசல்..
9) ஸ்ரீ திருஞானசம்பந்தர் திருமடம், மேலராஜவீதி
10) ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி, வடக்குவாசல்.
11) ஸ்ரீ வடபத்ர காளியம்மன் வடக்கு வாசல்.
12) ஸ்ரீ செல்வ விநாயகர், வடக்கு ராஜவீதி..
13) ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி, கொடிமரத்து மூலை.
14) ஸ்ரீ வெற்றி முருகன், மேலவெளி..
15) ஸ்ரீ வலம்புரி விநாயகர், மேலவெளி..

திருக்காட்சிகளை வழங்கிய அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
 


ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் எதிரில்








காணொளிக்கு நன்றி
Gnanasekaran, Thanjavur


விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்று ளன்மா மணிச் சோதியான் 
உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.. 5/90/10
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. நான் அங்கத்தினராக இருக்கும் ஒரு குழுவில் படங்கள் வர, உங்கள் நினைவு வந்தது. அனுப்பினேன். நன்றிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பதில்கள்
    1. இப்போது இணைக்கப்பட்டிருக்கிறது போல! பார்த்து விட்டேன்.

      நீக்கு
    2. நேற்று இணையமும் சரியில்லை..

      பொழுது விடிந்து எழுவதற்குத் தாமதம்..

      பதிவு வெளியான பின்பு தான் காணொளி இணைக்கப்பட்டு உள்ளது..

      காண்க.. கண்டு மகிழ்க..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படங்கள், காணொளி அனைத்தும் அருமை.
    உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள். இப்போது எல்லாம் இறைவன் திருவிழாக்களை நேரில் பார்ப்பது போல காணொளிகள், படங்கள் கிடைக்கிறது, கோவிலுக்கு போக முடியாத போது இப்படி பார்த்து மகிழ்ந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வைகாசி மூலநட்சத்திரம் விழாக்காட்சிகள், காணொளி நன்று . கண்டு தரிசித்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..