நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 12
சனிக்கிழமை
நேற்று வைகாசி 11 (24/5) வெள்ளிக்கிழமை அதிகாலையில் - கருந்திட்டைக்குடி எனப்படும் தஞ்சை கரந்தையில் திருக்கோயில் கொண்டிருக்கின்ற ஸ்ரீ பிரஹந்நாயகி உடனாகிய ஸ்ரீ வசிஷ்டேஸ்வர ஸ்வாமி - வைகாசி விசாகத் திருவிழாவின் ஒரு நிகழ்வாக ஏழூர் திரு உலா எழுந்தருளினார்..
ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி அருந்ததி அம்மையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் பிரஹந்நாயகியுட்ன் மஹாசிவிகை எனப்படும் பெரும் பல்லக்கிலும் வீற்றிருந்தனர்..
ஐம்பதாண்டுகளுக்குப் பின் நிகழ்கின்ற வைபவம்.. இரண்டாவது வருடமாகிய இந்த வருடம் - கரந்தைக்குள் ஸ்வாமி திருவீதி எழுந்தருளிய பின்,
பழைமையான வடவாற்றங்கரை கந்தப்ப முதலியார் சத்திரத்தில் மண்டகப்படி கண்டருளினார்..
ஆயிரம் ஆண்டுகள் கண்டு விளங்குகின்ற சுங்கம் தவிர்த்தான் திடல் எனும் வட்டாரத்தின் மக்களும் தமது பகுதிக்குள் அழைத்து வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்..
காலை 11 மணியளவில் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்தும், ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோயிலில் இருந்தும் மேள தாளங்களுடன் பக்தர்கள் சங்கிலிப் பிள்ளையார் கோயிலின் முன்பாக பல்லக்குகளை வரவேற்றனர்..
அதிர்வெடி முழக்கத்துடன்
ஸ்ரீ விநாயகர் அம்மையப்பரை
வலம் வந்து வரவேற்றார்..
திரளான பக்தர்கள் மத்தியில்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வாமிக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது..
ஒரு முகூர்த்தம் அங்கிருந்த ஸ்வாமி மகா தீப ஆராதனைக்குப் பின் திரு தென்குடித்திட்டை திருக்கோயிலை நோக்கிப் புறப்பட்டார்...
இடையில், பள்ளி அக்ரஹாரத்தின் மக்களும் தமது பகுதிக்கு பல்லக்குகளை எதிர்கொண்டு வரவேற்று மகிழ்ந்திருக்கின்றனர்..
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்ந்த வைபவத்தை இன்றைய பதிவில் தந்திருக்கின்றேன்..
நம சிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நா நவின்றே த்துமே
நம சிவாயவே நன்நெறி காட்டுமே.. 5/90/2
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபடங்கள் சிறப்பு. நாங்களும் தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குஏழூர் திருவிழா படங்கள் நன்றாக இருந்தது. காணொளி அருமை.
பதிலளிநீக்குஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
ஏளூர் திரு உலகக் காட்சிகள் கண்டு வணங்கினோம். காணொளியும் நன்று.
பதிலளிநீக்கு