நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 11, 2024

திருப்பாசுரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 28
சனிக்கிழமை


 நன்றி : Fb Reels 

விரும்பி நின்றேத்த மாட்டேன் 
விதியிலேன் மதியொன்றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் 
இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த 
அரங்கமா கோயில் கொண்ட 
கரும்பினைக் கண்டு கொண்டென் 
கண் இணை களிக்குமாறே!.. 888

போதெல்லாம் போது கொண்டுன் 
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் 
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு 
கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே 
என் செய்வான் தோன்றினேனே!.. 897

மனத்திலோர் தூய்மை இல்லை 
வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் 
தீவிளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே 
பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கு இனி கதியென் சொல்லாய் 
என்னை  ஆளுடைய கோவே!.. 901
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
 நமோ நாராயணாய
***

13 கருத்துகள்:

  1. ஹரி ஓம் ஹரி.  நாராயணன் இந்த நானிலத்தைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஹரி ஒம்
      நமோ நாராயணாய

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. முதல் பாசுரமான விரும்பி நின்று ஏத்த மாட்டேன்

    சுரும்பு அமர் - வண்டுகள் அமரும். சுரும்பமர் ... தட்டச்சில் சுரும்புமர் என வந்துள்ளது.
    கண்ணினை களிக்குமாறே- கண் இணை -இரண்டு கண்களும். கண்ணிணை களிக்குமாறே என வரவேண்டும்.
    மூன்றாவது பாசுரத்தில்,
    எனக்கினிக் கதையென் - எனக்கு இனி கதி என? இனிமேல் எனக்கு வேறு போக்கிடம் என்ன? - இங்கு எனக்கினி கதியென் என வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      நாள் தோறும் நான் சிந்திக்கின்ற பாசுரங்கள்..

      ஆனாலும் கூகிள் உள்ளே புகுவதனால் குடைச்சல்..

      சுரும்பமர் - சரி செய்து விட்டேன்..

      கண் இணை களிக்குமாறே..-
      வார்த்தைகளைப் பிரித்து விட்டேன்..

      எனக்கினி கதியென் சொல்லாய் .. - என்று தானே இருக்கின்றது...

      அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் ஹரி ஒம்
      நமோ நாராயணாய..

      நீக்கு
    2. அந்த க்... கினிக் கதியென்.

      நீக்கு
  3. நாளை இராமானுஜருக்கான தினம். இராமானுஜ நூற்றந்தாதியிலிருந்து பாசுரம் வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஆயத்தம் செய்ய வில்லை..

      ஸ்ரீமதே ராமானுஜாய

      நீக்கு
  4. அரங்கன் பாசுரம் பாடி வணங்கினோம்.
    அனைவரையும் திருவரங்கன் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      ஓம் ஹரி ஒம்
      நமோ நாராயணாய..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்று திருவரங்கனின் தரிசனம் கிடைக்கப் பெற்றது என் பாக்கியமே..!
    ஆழ்வாரின் பாசுரம் பாடி இறைவனை பணிந்து வணங்கிக் கொண்டேன். அரங்கன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டும். ஹரி ஓம் நாராயணா.. 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அரங்கன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டும்.///

      அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் ஹரி ஒம்
      நமோ நாராயணாய..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..