நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 18, 2023

ஸ்ரீகந்த சஷ்டி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 2
சனிக்கிழமை


சஷ்டி ஆறாம் நாள்


தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ...  தந்ததானா
 

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் 
தண்கழல்சி லம்புடன் ... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ... சந்தியாவோ..

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ... கொண்டபோது

பொன்கிரி யெனஞ் சிறந்தெங்கனு வளர்ந்துமுன் 
புண்டரிகர் தந்தையுஞ் ... சிந்தைகூரக்

கொண்டநட நம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் 
கொஞ்சிநட நங்கொளுங் ... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுனி கும்பிடுந் ... தம்பிரானே..
-: அருணகிரிநாதர் :-


தண்டை, வெண்டையம் எனும் அணிகலன்கள் 
கிண்கிணி சதங்கை தண்கழல் சிலம்பு 
இவையெல்லாம் திருவடிகளில் 
ஒலிக்க உன் தந்தையை வலம் வந்து
மகிழ்வுடன் அணைத்து நின்ற  அன்பினைப் போல 
நான் உன்னைக் கண்டு மனம் ஒன்றுபட்டு நிற்க
 
கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும் 
தாமரை போல் சிவந்த கரத்தினில் 
சூரபத்மனை அழித்த வேலும் கொண்டு

பன்னிரு விழிகளும் ஆறு திருமுகங்களும்
சந்திர கதிர்களுமாக கண்கள் குளிரும்படிக்கு
எந்தன் முன்பாக தோன்ற மாட்டாயா?..

 தாமரையில் தோன்றிய 
பிரம்மதேவனின் சத்யலோகமும்
அதனை உள்ளடக்கிய வெளி அண்டங்களும்,
மகிழ்ச்சி கொண்டு பொங்கி எழும்படி
 நீ போர்க்களம் புகுந்த போது -
​​பொன்மலை எனும்படி அழகில் சிறந்து 
எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று

தாமரைக் கண்ணன் ஆகிய திருமாலும் 
சிவபெருமானும் மகிழ்ச்சி கொள்ளும்படியாக
நீ கொண்ட நடனத்தினை
திருச்செந்தில் ஆகிய இப்பதியில் 
நான் காணும்படி அன்புடன் 
செய்தருளிய கந்தவேளே..

குறமங்கை வள்ளியின் 
சந்தன மணம் கமழ்கின்ற 
கொங்கைகளில் பதிகின்ற 
பெருமானே..

கும்பத்தில் தோன்றிய முனிவராகிய 
அகத்தியர் தொழுதிடும் தம்பிரானே..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***


12 கருத்துகள்:

  1. படங்கள் அருமை. திருப்புகழை பாடி முருகனை வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் முன்னின்று காக்கட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  2. தண்டாயுதபாணி நம்மையெல்லாம் காக்க பிரார்த்திப்போம்.

    https://www.youtube.com/watch?v=dTCyRYpZj1g

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் திருவருள் முன்னின்று காக்க..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    வணக்கம் ஜி நலமா ?
    வேலை சரியாகி விட்டது மற்ற அபீஸியல் பேப்பர் சரியானதும் நம்பர் வாங்கி விடுவேன்.

    எனக்கு ஆஃபீஸ் கொடுத்து இருக்கும் போனை பர்சனலுக்கு உபயோகிப்பதில்லை.

    வந்து கொண்டு இருக்கும் எனது பதிவுகள் ஊரில் செட்யூல் செய்தது.

    நான் இணையம் வருவது சற்று தாமதமாகும் மன்னிக்கவும் ஜி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்குள்ள நடைமுறைகள் தெரிந்தது தானே..

      அவ்விடத்தில் நலமாக இருக்க வேண்டிக் கொள்கின்றேன்.,

      உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. திருப்புகழும், படங்களும் அருமை. எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  5. கந்த சஷ்டி உபவாச ஆறாம் நாளில் முருகன் அருளை வேண்டி பாடல்பாடி நிற்போம்.

    பதிலளிநீக்கு
  6. கந்த சஷ்டி சூர சம்ஹாரத்தைத் தொலைக்காட்சி நேரலை மூலம் தரிசித்தோம். விளக்கம் கொடுத்தவர்களில் ஒருத்தர் சொதப்பலோ சொதப்பல். சூர சம்ஹாரத்தின் போது முதல் முறை வேல் வந்த உடனேயே சூர சம்ஹாரம் நிறைவுற்றது எனச் சொல்லி முடித்துவிட்டார். நல்லவேளையாகக் கோயில் ஊழியர்கள் தொடர்ந்து ஜெயந்தி நாதரை வலம் வந்து முழுவதும் முடிந்து சேவல் வரும் வரை காட்டினார்கள். இந்த அமர்க்களத்தில் மாமரம் வந்ததைக் கவனிக்க முடியலை. ஆனால் அதன் பின்னர் வந்த சேவலைப் பார்க்க முடிந்தது. மயிலைக் காணோம். என்னவோ போங்க.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..