நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 24, 2023

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 8
வெள்ளிக்கிழமை

இன்று
திருச்செந்தூர் திருப்புகழ்

தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ... தனதான


விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி ... யிளைஞோர்தம்

விரிவான சிந்தை யுருவாகி நொந்து 
விறல்வேறு சிந்தை ... வினையாலே

இதமாகி யின்ப மதுபோத வுண்டு 
இனிதாளு மென்று ... மொழிமாதர்

இருளாய துன்ப மருள்மாயை வந்து 
எனையீர்வ தென்றும் ... ஒழியாதோ..

மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி 
வருமால முண்டு ... விடையேறி

மறவாத சிந்தை யடியார்கள் பங்கில் 
வருதேவ சம்பு ... தருபாலா

அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற 
அயில்வேல்கொ டன்று ... பொரும்வீரா

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து 
அலைவாயு கந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


விதியைப் போல முந்திச் 
செயல்படுகின்ற விழிகளாலும்
பிறையைப் போன்ற நெற்றியாலும் 
ஈர்க்கப்பட்ட இளைஞரது

சிந்தையில்  கற்பனையாய் நின்று 
நெஞ்சை வருத்தி - மாறுபடும்  செயல்களால்

அன்புடன் இன்பத் தேன்  உண்டு 
இனிதே மகிழ்க என்கின்ற மங்கையரால்
ஏற்படுகின்ற துன்பமும்,  மாயையும் 
என் நெஞ்சை விட்டு  அகலாதோ?..

சந்திரப் பிறையைச் சூடியவரும் 
தேவர்களை நெருங்கி வந்த 
ஆலகால விஷத்தை 
உட்கொண்டவரும் 

என்றும் மறவாத அடியவர்க்காக 
நந்தி வாகனத்தில் வந்து 
அருள்கின்றவருமாகிய
சிவபெருமானின் திருக்குமரனே..

மாயங்களுடன் வந்த 
சூரர் அழியும்படி 
கூர்வேல் கொண்டு 
அன்று போர் புரிந்த மாவீரனே,

அழகிய செம்பொன் மயிலில்  அமர்ந்து 
திருச்செந்தூரில் மகிழ்வுடன் 
வீற்றிருக்கும் பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா..

ஓம் சிவாய
சிவாய திருச்சிற்றம்பலம்
***

10 கருத்துகள்:

  1. முருகன் நம்மையெல்லாம் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கார்த்திகை வெள்ளிநாள்.

    திருச்செந்தூர் திருப்புகழ் பாடி முருகனை வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான திருப்புகழ். மனதினுள் கந்தனை நினைத்து வணங்கிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. திருச்செந்தூர் திருப்புகழ் பாடி வேண்டிக் கொண்டேன்.
    செந்தில் ஆண்டவர் நம் எல்லோரையும் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..